Thursday 13 July 2017

! *திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?* !!

!! *திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?* !!
திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும்.
ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும், பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக்கூடிய ஒன்று.
கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.
இந்த ஆயிரம் காலத்து பயிராக கருதப்படும் திருமணம் முடிந்து தனது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணை முதன் முதலாக குத்துவிளக்கை ஏற்ற வேண்டும் என்று சொல்வது ஏன் தெரியுமா?
குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது.
மேலும் குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்கள் ஐந்து கடவுள்களையும் குறிக்கிறது.
குத்துவிளக்கின் தத்துவம் :
தாமரைப் போன்ற பீடம் - பிரம்மாவையும்.
நடுத்தண்டு பகுதி - விஷ்ணுவையும்.
நெய் எறியும் அகல் - சிவனையும்.
தீபம் - திருமகளையும்.
சுடர் - கலைமகளையும் குறிக்கிறது.
எனவே திருமணம் முடிந்து முதன் முதலில் புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண் ஐந்து நற்குணங்களையும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிப்பதாக குத்துவிளக்கை ஏற்ற சொல்கிறார்கள் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது.
பின் குத்துவிளக்கை ஏற்றி வைத்து, குத்துவிளக்கில் உள்ள ஐந்து கடவுள்களையும் வணங்கி, குத்துவிளக்கில் இருந்து வரும் ஒளியால் வீடு முழுவதும் எப்படி பிரகாசம் அடைகிறதோ, அதேபோல் புகுந்த வீட்டில் வாழ வந்த பெண்ணின் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கும் என்பது ஐதீகம்.
அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை, ஊடல் கூடல் இவை போன்ற பல பகுதிகள் இணைந்ததுதான் மணவாழ்க்கை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். அடம் பிடிப்பவர்கள் தோல்வியடைகிறார்கள்.
சரியாக கூறவேண்டுமானால், கணவன்-மனைவி என்பதே ஒரு நட்பு என்பதை தவிர வேறில்லை. இந்த நட்பு சரியாக வாழ்வில் அமையப்பெற்றவர்கள் வாழ்வில் ஒருவருக்கொருவர் ஊக்கம் தந்து முன்னேற்றம் காண்பார்கள்.

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. பெண் என்பவள், நாணல் போன்று வளைந்து கொடுத்தால் தான் திருமண வாழ்க்கை சிறப்புடன் இருக்கும்.
    இதற்கு ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள்.

    The Olive tree & the Reed had an argument about who was sronger.

    *The olive tree laughed at the reed, because it bowed before the wind.

    The reed said nothing.

    A storm blew up. The reed swayed & shook, bowing down 2 the ground, & survived the strom.

    The olive tree braced its branches against the wind & snapped in 2.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete