Thursday, 13 July 2017

!!"என்ன திதிகளில் என்ன செய்யலாம்"!!

!!"என்ன திதிகளில் என்ன செய்யலாம்"!!
பிரதமை
அதிதேவதை அக்னி. வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை திதி நாளில் திருமணம், வாஸ்து காரியங்கள், அக்னி சம்பந்தமான காரியங்கள், மத சடங்குகள் ஆகியவற்றை செய்யலாம்.
*துவிதியை
அதிதேவதை பிரம்மன். துவிதியை நாளில் திருமணம், புதிய ஆடை, ஆபரணங்கள் அணிவது, விரதம் இருப்பது, தேவதை பிரதிஷ்டை செய்வது, புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுதல், அரசு காரியங்களை ஆரம்பித்தல், ஸ்திரமான காரியங்கள் ஆகியவற்றை செய்யலாம்.
*திருதியை
அதிதேவதை பராசக்தி. திருதியை நாளில் சங்கீதம் கற்க தொடங்குதல், சீமந்தம் செய்தல், குழந்தைக்கு முதன்முதலில் அன்னம் ஊட்டுதல், சிற்ப காரியங்களில் ஈடுபடுதல், அழகு கலையில் ஈடுபடுதல் மற்றும் சகல சுப காரியங்களுக்கும் ஏற்ற திதி ஆகும்.
*சதுர்த்தி
அதிதேவதை எமதர்மர் மற்றும் விநாயகர். சதுர்த்தி திதி நாளில் எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், நெருப்பு சம்பந்தமான காரியங்கள் ஆகியவற்றை செய்யலாம்.
*பஞ்சமி
இந்த பஞ்சமி திதியில் எல்லா சுப காரியங்களையும் செய்யக்கூடிய விசேஷமான திதி ஆகும். சீமந்தம், நோய்க்கு மருந்து உட்கொள்ளல், ஆபரேஷன் போன்றவற்றை செய்யலாம். ஜாதகத்தில் நாக தோஷம் உள்ளவர்கள் பஞ்சமி திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும்.
*சஷ்டி
அதிதேவதை முருகன். சஷ்டி என்றால் ஆறு. இந்த திதி நாளில் சிற்பங்கள் செய்தல், வாஸ்து காரியங்களில் ஈடுபடுதல், ஆபரணம் தயாரித்தல், வாகனம் வாங்குதல், கேளிக்கைகளில் ஈடுபடுதல் போன்றவற்றை செய்யலாம்.
*சப்தமி
இந்த திதி நாளில் பயணம் மேற்கொள்ளுதல், வாகனம் வாங்குதல், வீடு, தொழிலில் இடமாற்றம் செய்தல், திருமணம், சங்கீத வாத்தியங்கள் வாங்குதல், ஆடை, அணிமணிகள் தயாரித்தல் ஆகியவற்றை செய்யலாம்.
*அஷ்டமி
அதிதேவதை ஐந்து முகம் கொண்ட சிவன் ஆவார். இந்த நாளில் தளவாடம் வாங்குதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், நடனம் பயிலுதல் ஆகியவற்றை செய்யலாம்.
*நவமி
அதிதேவதை அம்பிகை. இந்த திதி சத்ரு பயம் நீக்கும் திதி ஆகும். கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவங்கலாம்.
*தசமி
இந்த திதியில் எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். மதச் சடங்குகள் செய்வதற்கும், ஆன்மிகப்பணிகளுக்கும் உகந்த நாள். பயணம் மேற்கொள்ளுதல், கிரகப்பிரவேசம், வாகனம் பழகுதல், அரசு காரியங்கள் செய்யலாம்.
*ஏகாதசி
அதிதேவதை ருத்ரன். இந்த திதி நாளில் திருமணம், விரதம், மருத்துவ சிகிச்சை, சிற்ப காரியங்கள், தெய்வ காரியங்கள் ஆகியவற்றை செய்யலாம்.
*துவாதசி
அதிதேவதை விஷ்ணு. இந்த துவாதசி திதி நாளில் மத சடங்குகளில் ஈடுபடலாம்.
*திரயோதசி
இந்த திதி நாளில் சிவ வழிபாடு செய்வது, பயணம் செல்லுதல், புத்தாடை அணிதல், தெய்வ காரியங்களில் ஈடுபடுதல், புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல் ஆகியவற்றை செய்யலாம்.
*சதுர்த்தசி
அதிதேவதை காளி. இந்த திதி நாளில் ஆயுதங்கள் உருவாக்குதல், மந்திரம் பயில்தல் போன்றவற்றை செய்யலாம்.
*பௌர்ணமி
அதிதேவதை பராசக்தி. ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈபடுதல், விரதம் இருத்தல் ஆகியவற்றை செய்யலாம்.
*அமாவாசை
அதிதேவதை சிவன், சக்தி. பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்தல், தான-தர்ம காரியங்களை செய்தல், இயந்திரப்பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவற்றை செய்யலாம்...

No comments:

Post a Comment