Monday, 4 February 2019

மூலத்திரிகோணம் என்றால் என்ன?

மூலத்திரிகோணம் என்றால் என்ன?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சோதிடத்தில் திரிகோணம் என்றால் என்ன? என்பது நமக்குத் தெரியும். அதென்ன மூலத்திரிகோணம்?
ஒரு கோளின் வேர்ப்பகுதி என்று பொருள். அதாவது கட்டிடத்தின் கடைக்கோள் ( அதாவது அஸ்திவாரம் ) போன்றதாகும். ஒரு மரத்தின் ஆணிவேரானது, நிலத்துக்குள் ஊடுருவி மரத்தை நிலைநிறுத்துவது அல்லாமல், மரத்திற்கு வேண்டிய ஊற்று நீரை உறிஞ்சி, அடிமுதல் நுனி வரை பாய்ச்சி மரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது அல்லவா? அதுபோல, பஞ்சமகா கோள்களான புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி போன்ற இரண்டு ஆதிபத்யமுள்ள வீடுகளைக் கொண்ட கோள்கள், அதில் ஒன்றை தனது வேர்ப்பகுதியாக சாதகர்க்கு நன்மை செய்யும்.
ஒரு வீட்டை ஆதிபத்யமாகக் கொண்ட சூரியனுக்கு, தனது சொந்த வீடான சிம்மமே மூலத்திரிகோண வீடாகும்.
ஒரு வீட்டை ஆதிபத்யமாகக் கொண்ட சந்திரனுக்கு, அதன் உச்சவீடான இரிடபம் மூலத்திரிகோணமாகும்.
செவ்வாய்க்கு மேடமும், புதனுக்கு கன்னியும், வியாழனுக்கு தனுசுவும், சுக்கிரனுக்கு துலாமும், சனிக்கு கும்பமும், இராகுவிற்கு கன்னியும், கேதுவிற்கு மூனமும், மூலத்திரிகோண வீடுகளாகும்.
சத்தியாச்சாரியாரின் சூத்திரம் ” ஒரு கிரகம் தான் மூலத்திரிகோணம் அடையும் ராசியிலிருந்து, 2. 4. 5. 8. 9. 12 ஆம் வீடுகளை நட்பாகவும், அதன் ராசியதிபதிகளை நண்பர்களாகவும் கொள்ளும். அது போல் 3. 6. 7. 10. 11 ஆம் வீடுகளை பகை வீடாகவும், அதன் ராசியதிபதிகளை பகைவர்களாகவும் கொள்ளும்”. இதன்மூலம் நட்பு, பகையையும் அறியலாம்.
மூலத்திரிகோணத்தில் இருக்கும் கோள் அலுவலகத்தில் இருப்பதைப் போன்றது. அவைகள் அயராமல் வேலை செய்து கொண்டிருக்கும். இங்கிருக்கும் கோள், எப்போதும் சாதகர்க்கு நன்மை மட்டுமே செய்யும். (உ.ம்) துலாமில் மூலத்திரிகோணம் பெறு சுக்கிரன் நல்ல மனைவியையும், தனுசுவில் மூலத்திரிகோணம் பெறும் குரு நல்ல குழந்தைகளையும், கும்பத்தில் மூலத்திரிகோணம் பெறும் சனி, நல்ல வேலையையும், ஆயுளையும் தருவார் என்பதைப் போல பலன்கள் நடக்கும். இது போல் மற்றக் கோள்களுக்கும் பலன்கள் காணலாம்.
ஒரு கோள் வர்க்கோத்தமம் பெற்று பலன் தருவதை விட, மூலத்திரிகோணம் பெறும் கோள், அதிக உச்சப்பலனைத் தரும். தீயக்கோள்கள் வர்க்கோதமம் பெறும் போது, இரட்டிப்பான தீயப்பலன்கள் நடக்கும். ஆனால், மூலத்திரிகோணத்தில் தீயக்கோள்கள் இருந்தாலும், இரட்டிப்பான நற்பலன்களே நடக்கும். எந்தவகையில் பார்த்தாலும், மூலத்திரிகோணம் பெறும் கோளால் நன்மையே ஏற்படம்.

No comments:

Post a Comment