சிவன் கோயிலுக்கு இப்படி சென்று வழிபடுங்கள்…. வேண்டிய வரம் உடனே கிடைக்கும்!
சிவலாய வழிபாட்டு இயல் என ஒன்றை சித்தர்கள் முறையாக வகுத்து வைத்திருந்தார்கள். ஏனெனில் சித்தயுகமே சிவயுகம். நவீனயுகத்தில் சித்த நெறிகள் பின்பற்றப்பட வாய்ப்பில்லை என்ற உத்தியை சிலர் உருவாக்கியிருக்கின்றனர். ஆனால் நம்மால் எளிதாக பின்பற்றிட முடியும். இறைவன் உறையும் ஆலயங்களில் திருக்கோயில் வழிபாட்டு இயலின் படி, வழிபாடு நடத்தினால் நிச்சயமாக இறையருளை பெற்றிட முடியும். எந்த சித்த முறைமைகளை இங்கே பாப்போம்.
#1 சிவாலயத்திற்கு செல்லும்போது தூய்மையான உடைஅணிந்து, வீபுதி பூசிக்கொண்டு, சிவ பாராயனங்களை மனதில் நினைத்துச் செல்ல வேண்டும்.
#2 சிவன் லிங்கமாக வீற்றிருப்பார். சிவ கோபுரத்தை தூல லிங்கம் என்பார்கள். எனவே இரண்டு கைகளையும் தலை மேல் குவித்து முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்.
#3 அதையடுத்து பலிபீடத்தின் முன்பாக வீழ்ந்து வணங்க வேண்டும். கிழக்கு அல்லது மேற்கு நோக்கிய திருக்கோயில் என்றால் வடக்கு நோக்கியும், வடக்கு அல்லது தெற்கு நோக்கிய கோயில் என்றால் கிழக்கிலும் தலை வைத்து வணங்க வேண்டும்.
#4 ஆண்கள் தங்கள் எட்டு உறுப்புகள் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும். எட்டு உறுப்புகள் என்பது தலை, 2 கைகள், 2 செவிகள், மேவாய், 2 புயங்கள். இரு செவிகளும் நிலத்தில் பட வேண்டும் என்றால் தலையை இரு பக்கமும் திருப்பி நிலத்தில் படுமாறு வணங்க வேண்டும்.
#5 பெண்கள் ஐந்து உறுப்புகள் நிலத்தில் தோய வீழ்ந்து வணங்க வேண்டும். ஐந்து உறுப்புகளாவன தலை, 2 கைகள், 2 முழந்தாள்.
#6 வீழ் வணக்கத்திற்கு பிறகு இரு கரங்களையும் மார்பின் மேல் குவித்து, சிவனை எண்ணிக்கொண்டே திருக்கோயில் சுற்றினை மூன்று முறை வலம் வர வேண்டும். 5, 7, 9 எண்ணிக்கையிலும் வலம் வரலாம்.
#7 முதலில் விநாயகரை தரிசித்துவிட்டு, பின் நந்தியை வணங்கியே மூல லிங்கத்தை நோக்கி செல்ல வேண்டும்.
#8 மூல லிங்கமான சிவபெருமான், உமையம்மை, முருகன், தட்சிணாமூர்த்தி, பிரம்மன், துர்க்கை, வீரபத்திரர், பைரவர், நவகிரக திருமேனிகளை வழிபட வேண்டும். திருமஞ்சனம் (அபிஷேகம்), அலங்காரம் செய்யும் காலங்களில் வழிபடக் கூடாது.
#9 தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் மூல லிங்கத்தை வழிபடும்போது இருகரங்களையும் தலை மேல் வைத்தோ, மார்பின் மீது வைத்தோ, சிவ மந்திரங்களை உச்சரித்தவாறு வழிபட வேண்டும்.
#10 சண்டிகேஸ்வரர் சன்னதியில் கைத்தட்டக் கூடாது. கையை மூன்று முறை துடைத்துக் காட்ட வேண்டும். இதன் பொருள், இறைவனின் அனைத்து பிரதாசங்கள் மற்றும் உடைமைகளுக்கும் இவரே அதிபதி. எனவே கோயிலில் இருந்து வெளியேறும்போது நான் எதுவும் எடுத்துச்செல்லவில்லை என்பதை அவரிடம் தெரிவிக்க இந்த முறை பின்பற்றப்படுகிறது.
#11 சண்டிகேஸ்வரரை பார்த்த பின்னர், கொடிமரம் முன்பாக சென்று வீழ்ந்து வணங்க வேண்டும். ஓம் நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரத்தை ஒருமுறையேனும் உச்சரித்துவிட்டு, பின் எழுந்து விடைபெற வேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete