Friday 22 November 2019

நாம் அணியும் அணிகலன்கள் நம்மை அலங்கரிக்க அல்ல


நாம் அணியும் அணிகலன்கள் நம்மை அலங்கரிக்க அல்ல.
நம் உடலையும் மனதையும் பாதுகாக்கவே! எத்தனையோ உடல் உறுப்புகளில் அணிகலன்கள் அணியும் நாம்
 திருமணச் சடங்கில் கழுத்தில் மஞ்சள் கயிறைக் கட்டுவது ஏன்?
மஞ்சளுக்கு மருத்துவ குணம் உண்டு. மஞ்சள் கயிறைக் கழுத்தில் அணிவித்தால் பின் கழுத்திலுள்ள ‘டாய் சூய்’ எனும் அக்கு பிரஷர் புள்ளியால் அழுத்தப்பட்டு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ உண்டாகிறது!
வங்கி
முழங்கையின் மேற் பரப்பில் அணியப்படும் வங்கி எனப்படுவது பெண்களின் மார்பகப் பராமரிப்புக்கு உகந்தது.
ஒட்டியாணம்
 ஒட்டியாணம் அணிவது இடுப்புப் பகுதியில் உள்ள முக்கியமாக கல்லீரல் பகுதிகளைத் தூண்டப்படுகிறது.
கொலுசு, தண்டை
கொலுசு, தண்டை அணிவது கணுக்காலிலுள்ள ‘யுவான் சோர்ஸ் புள்ளிகள் எனப்படும் முக்கிய அக்கு பஞ்சர் புள்ளிகளைத் தூண்டுவதற்கே!
நெற்றிச் சரம்
 நெற்றிச் சரம் அணிவதால் ஒற்றைத் தலைவலியே வராது.
தோடு
காதில் தோடு அணிவது கண்களுக்கு சக்தி அளிக்கவே!
மூக்குத்தி
மூக்குத்தி அணிவது பெருங்குடலுக்கு சக்தி அளித்து சைனஸ், அஜீரனத்திலிருந்து காக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள அணிகலன்களையே நாம் உடல் உறுப்புகளில் அணிந்து வருகிறோம். அதன் பொருள் விளங்காமல்! மணமான பின்பும் இந்த நகைகளை அணிவதே நோயற்ற வாழ்க்கையைக் கொடுத்து குறைவற்ற செல்வத்தை அளிக்கும்!! நெற்றிச் சரம் தவிர ஆண்கள் முற்காலங்களில் மேற்சொன்ன நகைகளை அணிந்து வந்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment