Monday, 30 March 2020

பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.





பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொரு தெய்வத்திற்கு முன்னும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் சமஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
மகாவிஷ்ணு

சாந்தாகாரம் புஜங்க சயநம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாகாரம் ககநஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீ காந்தம் கமல நயநம் யோகிஹ்ருத் த்யா நகம்யம்
வந்தே விஷ்ணும் பவ பயஹரம் ஸர்வலோகைக நாதம்
மேகச்யாமம் பீத கௌசேய வாஸம்
ஸ்ரீ வத்ஸாங்கம் கௌஸ்து போத்பாஸிதாங்கம்
புண்யோ பேதம் புண்ட ரீகாய தாக்ஷம்
விஷ்ணும் வந்தே ஸர்வலோகைக நாதம்
ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம்
ஸபீத வஸ்த்ரம் ஸரஸிரு ஹேக்ஷணம்
ஸஹார வக்ஷஸ்த்தல கௌஸ்துப ச்ரியம்
நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்ப்புஜம்

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மாமருந்தும் என்கோ!
நலங்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச் சுவை தேறல் என்கோ!
கனிஎன்கோ! பால் என்கேனோ;

லட்சுமி

லக்ஷ்மீம் க்ஷீரஸமுத்ர ராஜ தநயாம் ஸ்ரீ ரங்கதாமேச்வரீம்
தாஸீ பூதஸமஸ்த தேவவநிதாம் லோகைக தீபாங்குராம்
ஸ்ரீ மந்மந்தகடாக்ஷலப்பதவிபவப்ரஹ்மேந்த்ரகங்காதராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பிநீம் ஸரஸிஜாம்வந்தே முகுந்தப்ரியாம்
மாநாதீத ப்ரதித விபவாம் மங்களம் மங்களாநாம்
வக்ஷ: பீடீம் மதுவிஜயிநோ பூஷயத்தீம் ஸ்வகாந்த்யா
ப்ரத்யக்ஷõ நுச்ரவிக மஹிமப்ரார்த்தி நீ நயம் ப்ரஜாநாம்
ச்யோ மூர்த்திம் ச்ரியமசரண, த்வாம்சரண்யாம் ப்ரபத்யே
ரக்ஷத்வம் வேததேவேசி தேவ தேவஸ்ய வல்லபே
தாரித்ர்யாத் த்ராஹிமாம் லக்ஷ்மி க்ருபாம் குருமமோபரி.

ராமர்

ஸ்ரீராம சந்த்ர கருணாகர தீனபந்தோ
ஸீதாஸமேத பரதாக்ரஜ ராகவேச
பாபர்த்தி பஞ்ஜன பயாதுர தீனபந்தோ
பாபாம்புதௌ பதித முத்தர மாமநாதம்
ஸ்ரீராகம் தசரதாத்மஜ மப்ரமேயம்
ஸீதாபதிம் ரகுகுலாப்வய ரத்நதீபம்
ஆஜாபுபாஹு மரவிந்த தளாயதாக்ஷம்
ராமம் நிசாசர விநாசகரம் நமாமி.

கிருஷ்ணர்

கோபல ரத்நம் புவனைக ரத்நம்
கோபாங்க நாயௌவந பாக்ய ரத்நம்
ஸ்ரீகிருஷ்ண ரத்நம் ஸுரஸேவ்ய ரத்நம்
பஜா மஹே யாதவ வம்ச ரத்நம்.
லட்சுமி நரசிம்மர்
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹாய நம; ஹரி ஓம்
பாந்தஸ்மான் புருஸூத வைரிபலவன்
மாதங்க மாத்யத் கடா கும்போச்சாத்ரி
விபாட நாதிகபடு ப்ரத்யேக வஜ்ராயுத;

அனுமான்

வாமே கரே வைரிபிதம் வஹந்தம்
சைலம் பரே ச்ருங்கல ஹாரிடங்கம்
ததாந மச்சச்சவி யஜ்ஞ ஸூத்ரம்
பஜே ஜ்வலத் குண்டலம் ஆஞ்ஜநேயம்.
ஸபீத கௌபீந முதஞ்சிதாங் குளிம்
ஸமுஜ்வலந் மௌஜியஜி நோபவீதிநம்
ஸகுண்டலம் லம்பசிகா ஸமாவ் ருதம்
தமரஞ்ஜநேயம் சரணம் ப்ரபத்யே.

அஞ்சிலே ஒன்று பெற்றான்: அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்: அவன் நம்மை அளித்துக் காப்பான்

சாஸ்தா

யஸ்ய தன்வந்தரீ மாதா பிதாருத்ரோ பிஷக்தம்
தம் சாஸ்தார மஹம் வந்தே மரா வைதயம் தயாநிதிம்.

கருடன்

குங்கு மாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாஹ நமஸ்துப்யம் பக்ஷிராஜாய நேநம

சக்கரத்தாழ்வார்

ஸஹஸ்ராதித்ய ஸங்காசம் ஸஹஸ்ர வதநாம் பரம்
ஸஹஸ்ர தோஸிஸஹஸ்ராரம்ப்ரபத்யே (அ) ஹம்ஸுதர்சநம்
ஹும் கார பைரவம் பீமம் ப்ரபந்நார்த்தி ஹரம் ப்ரபும்
ஸர்வ பாப ப்ரசமநம் ப்ரபத்யேஹம் ஸுதர்சநம்

பாகவதவோத்தமர்கள்

ப்ரஹ்லாத நாரத தபராசர புண்டரீக
வ்யாஸாம்பரீஷ சுகசௌநக பீஷ்மதால்ம்யாந்
ருக்மாங்க தார்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீந்
புண்யாநிமாந் பரமபாகவதாந் ஸ்மராபி

திருமால் போற்றி

ஓம் அப்பா போற்றி
ஓம் அறமே போற்றி
ஓம் அருளே போற்றி
ஓம் அச்சுதா போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அரங்கமா நகராய் போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அறுமுகனின் அம்மான் போற்றி
ஓம் அனுமந்தன் தேவே போற்றி
ஓம் ஆதியே அனாதி போற்றி
ஓம் ஆழ்வார்கன் தொழுவாய் போற்றி
ஓம் ஆதி மூலனே போற்றி
ஓம் ஆபத்துச் சகாயா போற்றி
ஓம் ஆனைக்கும் அருள்வாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் உமையம்மை அண்ணா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உத்தமர் தொழுவாய் போற்றி
ஓம் உம்பருக் கருள்வாய் போற்றி
ஓம் எங்குமே நிறைந்தாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் ஏழை பங்காளா போற்றி
ஓம் எழில் நிறவண்ணா போற்றி
ஓம் எழில்மிகு தேவே போற்றி
ஓம் கலியுக வரதா போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் காமரு தேவே போற்றி
ஓம் காலனைத் தவிர்ப்பாய் போற்றி
ஓம் கோக்களைக் காத்தாய் போற்றி
ஓம் கோவிந்தா முகுந்தா போற்றி
ஓம் சர்வலோகேசா போற்றி
ஓம் சாந்தகுண சீலா போற்றி
ஓம் சீனிவாசா போற்றி
ஓம் சிங்கார மூர்த்தி போற்றி
ஓம் சிக்கலை யறுப்பாய் போற்றி
ஓம் சிவபிரான் மகிழ்வாய் போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தரணியைக் காப்பாய் போற்றி
ஓம் திருமகள் மணாளா போற்றி
ஓம் திருமேனி உடையாய் போற்றி
ஓம் திருவேங்கடவா போற்றி
ஓம் தருமலைக் கொழுந்தே போற்றி
ஓம் திருத்துழாய் அணிவாய் போற்றி
ஓம் தீந்தமிழ் அருள்வாய் போற்றி
ஓம் கடலமு தளித்தாய் போற்றி
ஓம் நந்தகோ பாலா போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் நாரதர் துதிப்பாய் போற்றி
ஓம் நவமணி தரிப்பாய் போற்றி
ஓம் நரசிம்ம தேவே போற்றி
ஓம் நான்மறை தொழுவாய் போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் தசாவ தாரா போற்றி
ஓம் தயாநிதி ராமா போற்றி
ஓம் தந்தைசொல் காத்தாய் போற்றி
ஓம் தவக்கோலம் பூண்டாய் போற்றி
ஓம் பட்டத்தைத் துறந்தாய் போற்றி
ஓம் பரதனுக் கீந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துணைவா போற்றி
ஓம் பரந்தாமா கண்ணா போற்றி
ஓம் பாஞ்சாலி மானம் காத்தாய் போற்றி
ஓம் பார்புகழ் தேவே போற்றி
ஓம் புண்ணய மூர்த்தி போற்றி
ஓம் புலவர்கள் புகழ்வாய் போற்றி
ஓம் வாமன வரதா போற்றி
ஓம் உலகினை அளந்தாய் போற்றி
ஓம் பிரகலாதன் பணிவாய் போற்றி
ஓம் பரகதி அருள்வாய் போற்றி
ஓம் துருவனும் தொழுவாய் போற்றி
ஓம் துருவநிலை தந்தாய் போற்றி
ஓம் சபரியின் கனியே போற்றி
ஓம் நற்கதி தந்தாய் போற்றி
ஓம் வையகம் புகழ்வாய் போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் கமலக் கண்ணா போற்றி
ஓம் கலைஞான மருள்வாய் போற்றி
ஓம் கஸ்தூரி திலகா போற்றி
ஓம் கருத்தினில் அமர்வாய் போற்றி
ஓம் பவளம்போல் வாயா போற்றி
ஓம் பவப்பணி ஒழிப்பாய் போற்றி
ஓம் நான்கு புயத்தாய் போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் சங்கு சக்கரனே போற்றி
ஓம் சன்மார்க்க மருள்வாய் போற்றி
ஓம் கோபிகள் தலைவா போற்றி
ஓம் கோபமும் தணிப்பாய் போற்றி
ஓம் வேணு கோபாலா போற்றி
ஓம் வேட்கையைத் தணிப்பாய் போற்றி
ஓம் புருடோத் தமனே போற்றி
ஓம் பொன்புகழ் அருள்வாய் போற்றி
ஓம் மாயா வினோதா போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வினையெலாம் ஒழிப்பாய் போற்றி
ஓம் பதும நாபனே போற்றி
ஓம் பதமலர் தருவாய் போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பார்வேந்தர் தொழுவாய் போற்றி
ஓம் கரிவரத ராஜா போற்றி
ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
ஓம் சுந்தர ராஜா போற்றி
ஓம் சுகமெலாம் தருவாய் போற்றி
ஓம் அனைத்துமே ஆனாய் போற்றி
ஓம் அரி அரி நமோ நாராயணா போற்றி
ராமபிரான் போற்றி
ஓம் அயோத்திக்கு அரசே போற்றி
ஓம் அருந்தவத்தின் பயனே போற்றி
ஓம் அச்சுதானந்த கோவிந்த போற்றி
ஓம் அலவிலா விளையாட்டுடையாய் போற்றி
ஓம் அபயம் அளிக்கும் விரதா போற்றி
ஓம் அறத்தின் நாயகனே போற்றி
ஓம் அன்பர் தம் இதயம் உறைவோய் போற்றி
ஓம் அழகிய திருமுகத்தோய் போற்றி
ஓம் அளவிலா ஆற்றல் படைத்தோய் போற்றி
ஓம் அகிலமெல்லாம் காப்பாய் போற்றி
ஓம் அரிசினம் அகற்றினாய் போற்றி
ஓம் அகலிகை சாபம் தீர்த்தோய் போற்றி
ஓம் அன்பர் அகமகிழும் அற்புத நாமா போற்றி
ஓம் அஞ்ஞான இருள்அகற்றும் அறிவுச்சுடரே போற்றி
ஓம் அளவோடு பேசும் குணநிதியே போற்றி
ஓம் அன்பிலே விளைந்த ஆரமுதே போற்றி
ஓம் அரக்கர்க்குக் கூற்றே போற்றி
ஓம் அனுமன் நினைவகலா தாரக நாமனே போற்றி
ஓம் அங்கதனிடம் அன்பு கொண்டோய் போற்றி
ஓம் அனந்த கல்யாண குணலயா போற்றி
ஓம் அசுவமேத யாக பிரபுவே போற்றி
ஓம் ஆதித்தன் குலக்கொழுந்தே போற்றி
ஓம் ஆண்டகையே போற்றி
ஓம் ஆதரவற்றோர்க்கு ஒரு புகலிடமே போற்றி
ஓம் ஆத்ம-ஞான ஜனகன் திருமகளை மணந்தோய் போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் இகல் வெல்லும் இளையவன் அண்ணலே போற்றி
ஓம் இராமநாதனைப் பூஜித்த ஸேதுராமா போற்றி
ஓம் இகபர சுகம் அளிப்பாய் போற்றி
ஓம் உண்மைக்கோர் உருவமே போற்றி
ஓம் உரக சயனா போற்றி
ஓம் உலகம் காக்கும் உத்தமா போற்றி
ஓம் ஊக்கம் கொடுக்கும் <உயிர்ச் சுடரே போற்றி
ஓம் ஊழி முதல்வா போற்றி
ஓம் எழில் நாயகனே போற்றி
ஓம் ஏறுநடையுடை ஏந்தலே போற்றி
ஓம் ஏழு மராமரங்களைத் துளைந்தவனே போற்றி
ஓம் ஏக பாணப்பிரயோகா போற்றி
ஓம் ஏக பத்தினி விரதனே போற்றி
ஓம் ஐம்புலன் வென்றோய் போற்றி
ஓம் ஒப்பிலா ஒளியே போற்றி
ஓம் ஓம்கார தத்துவமே போற்றி
ஓம் ஒளஷத நாம ஸ்வரூபனே போற்றி
ஓம் கவியரசின் உயிர்த் துணைவா போற்றி
ஓம் கபந்தனுக்கு முக்தி கொடுத்தாய் போற்றி
ஓம் கரனை ஒழித்தோய் போற்றி
ஓம் காமகோடி ரூபனே போற்றி
ஓம் காமம் அழிப்பவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காலம் எல்லாம் நிலைத்து நிற்கும் கருப்பொருளே போற்றி
ஓம் காசி முக்திக்குக் காரண நாமா போற்றி
ஓம் குரு பக்த ரத்தினமே போற்றி
ஓம் கோசலை மைந்தா போற்றி
ஓம் கோதண்ட பாணியே போற்றி
ஓம் சங்கடம் தீர்க்கும் ஸத்குருவே போற்றி
ஓம் சத்யவாக்கு சத்ய விக்ரமனே போற்றி
ஓம் சரணாகத வத்ஸலா போற்றி
ஓம் சபரிக்கு மோஷம் கொடுத்தாய் போற்றி
ஓம் சோக நாசனா போற்றி
ஓம் சோலைத் திருமலை அழகனே போற்றி
ஓம் சௌபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தசரதன் தவப்புதல்வா போற்றி
ஓம் தாய் தந்தை சொல் வேதமெனக் கொண்டோய் போற்றி
ஓம் தியாகப்பரப்பிரம்மம் தொழும் கானமூர்த்தியே போற்றி
ஓம் நிலையானவனே போற்றி
ஓம் நித்ய மங்கள வைபவா போற்றி
ஓம் நீல மேக சியாமளனே போற்றி
ஓம் பரசுராமன் கர்வம் அடக்கினாய் போற்றி
ஓம் பட்டமரம் தளிர்க்க வைக்கும் பாவனநாமா போற்றி
ஓம் பத்துத்தலை தத்தத் கணைதொடுக்கும் பரம்பொருளே போற்றி
ஓம் பண்டரிநாத விட்டலா போற்றி
ஓம் பரத்வாஜ முனிவர் தொழும் பாதனே போற்றி
ஓம் பங்கஜ லோசனா போற்றி
ஓம் பரிமள வாசனா போற்றி
ஓம் பாதுகா பட்டாபிஷேக மூர்த்தியே போற்றி
ஓம் பிறவிப்பெருங்கடல் புணையாவாய் போற்றி
ஓம் மாசிலா மணியே போற்றி
ஓம் மாருதியின் பிரபுவே போற்றி
ஓம் மாதவமுனிவர்தாள் தேடி வணங்குவாய் போற்றி
ஓம் மாயிருள் ஞாலம் மறுவின்றி விளக்குவாய் போற்றி
ஓம் மாதேவன் சந்ததம் சிந்திக்கும் தாரகநாமா போற்றி
ஓம் மாய மாரீசனை மாய்த்தோய் போற்றி
ஓம் முக்குணம் கடந்தோய் போற்றி
ஓம் மூவிரு முகன் செல்வ மாமனே போற்றி
ஓம் ரகு வம்சத்தை நிலை நிறுத்தியவனே போற்றி
ஓம் லவகுசர்களின் அன்புத் தந்தையே போற்றி
ஓம் வசிஷ்ட முனிவரால் முடிசூட்டப் பெற்றாய் போற்றி
ஓம் வாயுகுமாரனின் மனநிறைவே போற்றி
ஓம் வானரர் தொழுது ஏத்தும் வள்ளலே போற்றி
ஓம் விராதனை வதம் செய்தாய் போற்றி
ஓம் விஷயங்களைக் கடந்தவனே போற்றி
ஓம் விருப்பு வெறுப்பு அற்றவனே போற்றி
ஓம் விஜயராகவனே போற்றி
ஓம் விசுவாமித்திரன் வேள்வி காத்தோய் போற்றி
ஓம் வீடணுக்கு அபயமும், அரசும் அளித்தாய் போற்றி
ஓம் வெற்றிக்கு ஒருவனே போற்றி
ஓம் வேண்டுவார்க்கு வேண்டுவன ஈவாய் போற்றி
ஓம் வேடன் குகனோடும் ஐவரானாய் போற்றி
ஓம் வேத முதல்வா போற்றி
ஓம் வேந்தர்க்கு வேந்தனே போற்றி
ஓம் வேதனை தீர்ப்பாய் போற்றி
ஓம் வேதங்கள் தேடும் பாதனே போற்றி
ஓம் வேதாந்த சாரமே போற்றி
ஓம் வைகுண்ட வாசா போற்றி
ஓம் வைதேஹி மணாளா போற்றி
ஓம் வைனதேய பிரபுவே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ண ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தியே போற்றி போற்றி
தன்வந்திரி பகவான் போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் திருப்பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் தீர்க்காயுள் தருபவனே போற்றி
ஓம் துன்பத்தைத் துடைப்பவனே போற்றி
ஓம் அச்சம் போக்குபவனே போற்றி
ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி
ஓம் அபயம் அளிப்பவனே போற்றி
ஓம் அன்பு கொண்டவனே போற்றி
ஓம் அமரனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் அமரப் பிரபுவே போற்றி
ஓம் அருளை வாரி வழங்குபவனே போற்றி
ஓம் அடைக்கலம் கொடுப்பவனே போற்றி
ஓம் அழிவற்றவனே போற்றி
ஓம் அமிர்தம் அளிப்பவனே போற்றி
ஓம் அமிர்த கலசம் ஏந்தியவனே போற்றி
ஓம் அமிர்தத்தை உற்பத்தி செய்தவனே போற்றி
ஓம் அமிர்தமானவனே போற்றி
ஓம் அனைத்தையும் அறிந்தவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஆயுர் வேதமே போற்றி
ஓம் ஆயுர் வேதத்தின் தலைவனே போற்றி
ஓம் ஆயுளை நீட்டிப்பவனே போற்றி
ஓம் ஆயுதக்கலை நிபுணனே போற்றி
ஓம் ஆத்ம பலம் தருபவனே போற்றி
ஓம் ஆசாபாசம் அற்றவனே போற்றி
ஓம் ஆனந்த ரூபனே போற்றி
ஓம் ஆகாயத் தாமரையே போற்றி
ஓம் ஆற்றல் பெற்றவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் உலக ரட்சகனே போற்றி
ஓம் உலக நாதனே போற்றி
ஓம் உலக சஞ்சாரியே போற்றி
ஓம் உலகாள்பவனே போற்றி
ஓம் உலகத்தைக் காத்தருள்பவனே போற்றி
ஓம் உலக மக்களால் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் உயிர் காப்பவனே போற்றி
ஓம் உயிர்காக்கும் உறைவிடமே போற்றி
ஓம் உண்மையான சாதுவே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் எமனுக்கும் எமனானவனே போற்றி
ஓம் எழிலனே போற்றி
ஓம் எளியார்க்கும் எளியவனே போற்றி
ஓம் எல்லா ஐஸ்வர்யங்களையும் அணிந்தவனே போற்றி
ஓம் எல்லா நலன்களும் அருள்பவனே போற்றி
ஓம் எல்லோருக்கும் வாரி வழங்குபவனே போற்றி
ஓம் எல்லையில்லா இன்பப் பெருக்கே போற்றி
ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி
ஓம் எல்லையற்ற மகிமை கொண்டவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் கருணைக் அமிர்தக்கடலே போற்றி
ஓம் கருணா கரனே போற்றி
ஓம் காக்கும் தெய்வமே போற்றி
ஓம் காத்தருள் புரிபவனே போற்றி
ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி
ஓம் காவேரியில் ஸ்நானம் செய்பவனே போற்றி
ஓம் குருவே போற்றி
ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சகல நன்மைகளையும் தருபவனே போற்றி
ஓம் சகல செல்வங்களையும் வழங்குபவனே போற்றி
ஓம் சமத்துவம் படைப்பவனே போற்றி
ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி
ஓம் சகிப்புத் தன்மை மிக்கவனே போற்றி
ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவனே போற்றி
ஓம் சர்வேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி
ஓம் சர்வலோகாதிபதியே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் சர்வ மங்களம் அளிப்பவனே போற்றி
ஓம் சந்திரனின் சகோதரனே போற்றி
ஓம் சிறந்த ஆற்றல் கொண்டவனே போற்றி
ஓம் சித்தி அளிப்பவனே போற்றி
ஓம் சிறந்த அறநெறியோனே போற்றி
ஓம் சீரங்கத்தில் வாழ்பவனே போற்றி
ஓம் சுகம் அளிப்பவனே போற்றி
ஓம் சுகபோக பாக்யம் தருபவனே போற்றி
ஓம் சுபம் தருபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் தசாவதாரமே போற்றி
ஓம் தீரனே போற்றி
ஓம் தெய்வீக மருந்தே போற்றி
ஓம் தெய்வீக மருத்துவனே போற்றி
ஓம் தேகபலம் தருபவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தேவர்களால் வணங்கப்படுபவனே போற்றி
ஓம் தேவாமிர்தமே போற்றி
ஓம் தேனாமிர்தமே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் பகலவனே போற்றி
ஓம் பக்திமயமானவனே போற்றி
ஓம் பண்டிதர்களின் தலைவனே போற்றி
ஓம் பாற்கடலில் தோன்றியவனே போற்றி
ஓம் பாதபூஜைக்குரியவனே போற்றி
ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புராண புருஷனே போற்றி
ஓம் பூஜிக்கப்படுபவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் மரணத்தை வெல்பவனே போற்றி
ஓம் மஹா பண்டிதனே போற்றி
ஓம் மஹா மேதாவியே போற்றி
ஓம் மஹா விஷ்ணுவே போற்றி
ஓம் முக்தி தரும் குருவே போற்றி
ஓம் முழு முதல் மருத்துவனே போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரி பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சக்தியே! தன்வந்திரி பகவானே போற்றி போற்றி.

ஸ்ரீ விஷ்ணு அஷ்டோத்தர சதநாமாவளி

ஓம் அச்யுதாய நம:
ஓம் அதீந்தராய நம:
ஓம் அனாதிநிதனாய நம:
ஓம் அளிருத்தாய நம:
ஓம் அம்ருதாய நம:
ஓம் அரவிந்தாய நம:
ஓம் அஸ்வத்தாய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஆதிதேவாய நம:
ஓம் ஆனத்தாய நம:
ஓம் ஈஸ்வராய நம:
ஓம் உபேந்த்ராய நம:
ஓம் ஏகஸ்மை நம:
ஓம் ஓருஸ்தேஜோத்யுதிதராய நம:
ஓம் குமுதாய நம:
ஓம் க்ருதஜ்ஞாய நம:
ஓம் க்ருஷ்ணாய நம:
ஓம் கேஸவாய நம:
ஓம் ÷க்ஷத்ரஜ்ஞாய நம:
ஓம் கதாதராய நம:
ஓம் கருடத்வஜாய நம:
ஓம் கோபதயே நம:
ஓம் கோவிந்தாய நம:
ஓம் கோவிதாம்பதயே நம:
ஓம் சதுர்ப்புஜாய நம:
ஓம் சதுர்வ்யூஹாய நம:
ஓம் ஜனார்த்தனாய நம:
ஓம் ஜ்யேஷ்ட்டாய நம:
ஓம் ஜ்யோதிராதித்யாய நம:
ஓம் ஜயோதிஷே நம:
ஓம் தாராய நம:
ஓம் தமனாய நம:
ஓம் தாமோதராய நம:
ஓம் தீப்தமூர்த்தயே நம:
ஓம் து:ஸ்வப்ன நாஸனாய நம:
ஓம் தேவகீநந்தனாய நம:
ஓம் தனஞ்ஜயாய நம:
ஓம் நந்தினே நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாரஸிம்ஹவபுஷே நம:
ஓம் பத்மநாபாய நம:
ஓம் பத்மினே நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் பவித்ராய நம:
ஓம் ப்ரத்யும்னாய நம:
ஓம் ப்ரணவாய நம:
ஓம் புரந்தராய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் புண்டரீகாக்ஷõய நம:
ஓம் ப்ருஹத்ரூபாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் மதுஸூதனாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் மஹாமாயாய நம:
ஓம் மாதவாய நம:
ஓம் முக்தானாம் பரமாகதயே நம:
ஓம் முகுந்தாய நம:
ஓம் யக்ஞகுஹ்யாய நம:
ஓம் யஜ்ஞபதயே நம:
ஓம் யஜ்ஞாஜ்ஞாய நம:
ஓம் யஜ்ஞாய நம:
ஓம் ராமாய நம:
ஓம் லக்ஷ்மீபதே நம:
ஓம் லோகாத்யக்ஷõய நம:
ஓம் லோஹிதாக்ஷõய நம:
ஓம் வரதாய நம:
ஓம் வர்த்தனாய நம:
ஓம் வராரோஹாய நம:
ஓம் வஸுப்ரதாய நம:
ஓம் வஸுமனஸே நம:
ஓம் வ்யக்திரூபாய நம:
ஓம் வாமனாய நம:
ஓம் வாயுவாஹனாய நம:
ஓம் விக்ரமாய நம:
ஓம் விஷ்ணவே நம:
ஓம் விஷ்வக்ஸேனாய நம:
ஓம் வ்ரு÷ஷாதராய நம:
ஓம் வேதவிதே நம:
ஓம் வேதாங்காய நம:
ஓம் வேதாய நம:
ஓம் வைகுண்ட்டாய நம:
ஓம் ஸரணாய நம:
ஓம் ஸாந்நாய நம:
ஓம் ஸார்ங்கதன்வனே நம:
ஓம் ஸாஸ்வதஸ்தாணவே நம:
ஓம் ஸிகண்டனே நம:
ஓம் ஸிவாய நம:
ஓம் ஸ்ரீதராய நம:
ஓம் ஸ்ரீநிவாஸாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ஸுபாங்காய நம:
ஓம் ஸ்ருதிஸாகராய நம:
ஓம் ஸங்கர்ஷணாய நம:
ஓம் ஸதாயோகினே நம:
ஓம் ஸர்வதோமுகாய நம:
ஓம் ஸர்வேஸ்வராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷõய நம:
ஓம் ஸ்கந்தாய நம:
ஓம் ஸாக்ஷிணே நம:
ஓம் ஸுதர்ஸனாய நம:
ஓம் ஸுரானந்தாய நம:
ஓம் ஸுலபாய நம:
ஓம் ஸூக்ஷ்மாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் ஹிரண்யகர்ப்பாய நம:
ஓம் ஹிரண்யநாபாய நம:
ஓம் ஹ்ருஷீகேஸாய நம:

திருமால் புகழ்ப் பாடல்கள்
(கம்பர்)

வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தனஉன்
பாதங்கள் இவைஎன்னில் படிவங்கள் எப்படியோ
ஒதங்கொள் கடலன்றி ஒன்றினோ (டு) ஒன்றொவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால் அவையுன்னைப் பொறுக்குமோ ?
தாய்தன்னை அறியாத கன்றில்லை ; தன் கன்றை
ஆயும் அறியும் ; உலகின்தாய் ஆகி, ஐய !
நீயறிதி எப்பொருளும் ; அவை யுன்னை நிலையறியா
மாயை இ(து) என்கொலோ? வாராதே வரவல்லாய் !
(வேறு)
தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற
சுடரே ! தொடக் கறுத்தோர் சுற்றமே ! பற்றி
நீந்த அரிய நெடுங் கருணைக்(கு) எல்லாம்
நிலையமே! வேதம் நெறிமுறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே ! பகையால்
அலைப்புண்(டு) அடியேம் அடிபோற்ற அந்நாள்
ஈந்த வரம்உதவ எய்தினையே எந்தாய் !
இருநிலத்தவோ? நின் இணையடித்தா மரைதாம் !
மேவாதவர் இல்லை மேவினரும் இல்லை
வெளியோடிருள் இல்லை மேல்கீழும் இல்லை
மூவாமை இல்லை மூத்தமையும் இல்லை
முதல்இடையோ டீறில்லை, முன்னொடுபின் இல்லை !
தேவா ! இங்கு இதுவோ நீ சென்ற நிலை என்றால்,
சிலையேந்தி வந்தெம்மைச் சேவடிகள் நோவக்
காவா தொழியிற் பழிபெரிதோ? அன்றேல்
கருங்கடலில் கண்வளர்வாய் ! கைம்மாறும் உண்டோ ?
நாழி நவைநீர் உலகெலாம் ஆக
நளினத்து நீதந்த நான்முகனார் தாமே
ஊழி பலபலவும் நின்றளந்தால் ஒன்றும்
உலவாப் பெருங்குணத்(த) உத்தமனே ! மேல்நாள்
தாழி தரையாகத் தண்தயிர் நீராகத்
தடவரையே மத்தாகத் தாமரைக்கை நோவ
ஆழி கடைந்தமுதம் எங்களுக்கே ஈந்தாய்
அவுணர்கள்தாம் நின்அடிமை ஆகாமை உண்டே
ஆண்டாள் பாசுரங்கள்
கருப்பூரம் நாறுமோ
கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான்
தித்தித்து இருக்குமோ
மறுப்பு ஒசித்த மாதவன்தன்
வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்பு உற்றுக் கேட்கிறேன்
சொல் ஆழி வெண்சங்கே !
நாறு நறும் பொழில் மா
லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறு தடாவில் வெண்ணெய்
வாய்நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடா நிறைத்த அக்கார
அடிசில் சொன்னேன்
ஏறுதிரு உடையான் இன்று வந்து
இவை கொள்ளுங் கோலோ !
வாராணமாயிரம்
வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் !
நாளை வதுவை மணம் என்று நாள்இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான் !
மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்று ஊத
முத்தடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான் !
திருப்பாவை
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயலுகன
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேல் ஓர் எம்பாவாய் !
தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்கள்
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !
வேதநூல் பிராயம் நூறு
மனிதர்தாம் புகுவ ரேலும்
பாதியும் உறங்கிப் போகும்
நின்றுஅதில் பதினை யாண்டு
பேதை பாலகன் அதாகும்
பிணிபசி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன்
அரங்கமா நகர் உளானே !
திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள்
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடிஇளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் !

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும்
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம் !
செங்கால் மடநாராய் இன்றே சென்று
திருக்கண்ணபுரம் புக்குஎன் செங்கண் மாலுக்கு
என்காதல் என்துணைவர்க்கு உரைத்தி யாகில்
இதுஒப்பது எனக்கு இன்பம் இல்லைநாளும்
பைங்கான்மீது எல்லாம் உனதே ஆகப்
பழனமீன் கவர்ந்து உண்ணத் தருவன் தந்தால்
இங்கே வந்து இனிது இருந்து உன்பெடையும் நீயும்
இருநிலத்தில் இனிது இன்பம் எய்தலாமே

No comments:

Post a Comment