Thursday, 23 April 2020

2 கைகளிலும் உப்பை வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்! 21வது நாள் அதிசயம் நடக்கும்.

பொதுவாகவே கல்லுப்பில் நல்ல ஆற்றல் இருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். கல் உப்பில் மகாலட்சுமியின் அம்சம் இருக்கிறது என்பதை அறிந்த நீங்கள், அதே கல் உப்பிற்கு சந்திரனின் அருளைப் பெற்றுத்தரும் மகிமையும், சுக்கிரனின் அருளைப் பெற்றுத்தரும் மகிமையும் இருக்கிறது என்பதை அறிந்து உள்ளீர்களா? சந்திர கிரகத்தின் ஆற்றலையும், சுக்கிர கிரகத்தின் ஆற்றலையும் கல் உப்பின் மூலம் நாம் பெற போகின்றோம். நமது உடலானது 70 சதவீதம் தண்ணீரால் நிரப்பப்பட்டுள்ளது. தண்ணீருக்கு உரிய கிரகமாக சொல்லப்படுவது சந்திரன்.
ஆகவே, கல் உப்பின் ஆற்றலை நாம் உடலில் சேர்க்கும்போது சந்திரனின் பலம் அதிகரிக்கிறது. இதற்காக கல் உப்பை சாப்பாட்டில் அதிகமாக போட்டு சாப்பிடக்கூடாது. அதனுடைய ஆற்றலை மட்டும் தான் நாம் பெறப் போகின்றோம். ஏனென்றால் மன வலிமையை அதிகரிக்கும் சக்தியை தரக்கூடியவர் சந்திர பகவான். மன வலிமையோடு நாம் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு காரியமும் கட்டாயமாக வெற்றியடையும் அல்லவா?
கல் உப்பின்னால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதால் சுக்கிர பகவானையும் சேர்த்து வேண்டிக் கொள்வது அவசியம். சந்திரனின் ஆற்றலையும், சுக்கிரனின் ஆற்றலையும் ஒருசேர பெற்று விட்டால் நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த இரண்டு கிரகங்களின் மனதையும் குளிர வைத்து, இரண்டு கிரகங்களின் ஆற்றலை பெற, கல் உப்பை வைத்து எந்த மந்திரத்தை சொன்னால் என்ன அற்புதம் நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பரிகாரத்திற்க்கு இரண்டு கைப்பிடி அளவு கல் உப்பு மட்டுமே போதும். சூரிய உதயத்திற்கு முன்பாகவே கண்விழித்து, உங்கள் இரண்டு கைகளிலும், கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து கொள்ளுங்கள். சம்மணம் போட்டு அமர்ந்து கொள்ளலாம். முதுகு தண்டுவடம் நேராக இருக்க வேண்டும். தியானம் செய்வதுபோல் இரண்டு கைகளையும் உங்கள் இரண்டு தொடைகளின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் இரண்டு உள்ளங்கைகளும் கல்லுப்பு மூடியவாறு இருக்கவேண்டும். அதன் பின்பு முதலில் சந்திர பகவானை மனதார நினைத்து கொண்டு, சந்திர பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். நேரம் இல்லாதவர்கள் 11 முறை உச்சரிக்கலாம்.


சந்திர பகவானின் மந்திரம்:
ஓம் ஷ்ராம் ஸ்ரீம் சஹ்ரும் சஹ் சந்திராய நமஹ.
அதன் பின்பு சுக்கிர பகவானை நினைத்துக் கொண்டு, சுக்கிரனின் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். முடியாதவர்கள் 11 முறை உச்சரிக்கலாம்.
சுக்கிர பகவானின் மந்திரம்:
ஓம் த்ராம் த்ரீம் த்ரௌம் சஹ் சுக்ராய நமஹ.
இந்த இரண்டு மந்திரங்களையும் உச்சரித்த பின்பு உங்கள் மனதில் எந்த ஒரு கோரிக்கையாக இருந்தாலும், நேர்மறையோடு 5  நிமிடம் சொல்லி இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். அதாவது தொழில் சிறக்க வேண்டும் என்றாலோ, உங்களது வாழ்க்கைத் துணை உங்களிடம் அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றாலும், உங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றாலும், பணவரவு சீராக வர வேண்டும் என்றாலும், நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டும் என்றாலும், எந்த கோரிக்கையை வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அந்த கோரிக்கைகள் நேர்மறை எண்ணத்தோடு தான் வைக்கப்பட வேண்டும். நீங்கள் தியானம் செய்யும் 48 நாட்களும் ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கப்பட வேண்டும்.
நீங்கள் உங்களது இந்த தியானத்தை தொடங்கிய 21ஆவது நாளிலேயே உங்களது இலக்கை பாதி அடைந்துவிட்டதாக உணரமுடியும். அதாவது, கட்டாயம் உங்களது குறிக்கோள் பாதி நிறைவேறி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம் உண்டு.
பெண்களும் இந்த தியானத்தை செய்யலாம். தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் போது மாதவிடாய் நாட்களிலும் இந்த தியானத்தை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தியானத்தின் இறுதியில் கையிலிருக்கும் உப்பினை தண்ணீரில் கரைத்து விடுங்கள். அந்தத் தண்ணீரை சாக்கடையில் ஊற்றாமல், மண்ணில் ஊற்றி விடலாம்.

No comments:

Post a Comment