Monday, 13 April 2020

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? - விரிவான தகவல்கள்

சீன நகரமான ஜிங்ஜோவில் 21 வயதான கெம் சென்யு என்பவர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனை சேர்ந்த இவர், சீனாவை விட்டு வெளியே செல்லாமல் அங்கேயே இருந்து இதனை எதிர்கொண்டுள்ளார்.

முன்னதாக காய்ச்சல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

"முதன்முறையாக நான் மருத்துவமனைக்கு செல்லும்போது இறந்துவிடுவேன் என்று நினைத்தே சென்றேன்" என்கிறார் அவர்.

உள்ளூர் சீன மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கெம், 13 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். எச்ஐவி பாதிப்புக்கு கொடுக்கப்படும் நுண்ணுயிர் கொள்ளி மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. அடுத்த இரண்டு வாரங்களில் கெம்மின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்தது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்ட முதல் ஆப்பிரிக்கர் இவர்தான். இவருடைய மருத்துவ செலவுகளை சீன அரசு ஏற்றுக் கொண்டது.

கெம்படத்தின் காப்புரிமைPAVEL DARYL KEM SENOU

"நான் என் படிப்பை முடிக்காமல் நாடு திரும்ப விரும்பவில்லை. கொரோனா தொற்று அச்சத்தால் யாரும் நாடு திரும்ப வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனைத்து மருத்துவ செலவுகளையும் சீன அரசே ஏற்கிறது" என்று கெம் கூறுகிறார்

No comments:

Post a Comment