Monday 13 April 2020

ஹண்டா வைரஸின் அறிகுறிகள் என்ன?

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்த வைரஸ் எலிகள் மூலம் பரவுகிறது. ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எலியின் எச்சில் அல்லது கழிவுகளைத் தொடும் ஒருவர், தனது கைகளை கழுவாமல், நேரடியாக தனது முகத்தைத் தொட்டால் அவருக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் மனிதர்களில் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவாது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய ஒரு வாரம் முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குக் காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி,வாந்தி ஆகியவை ஏற்படும். சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனைகள் ஏற்படும். பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டு மரணம் கூட நிகழலாம்.

ஹண்ட வைரஸ் புதிதாக உருவான வைரஸ் கிடையாது. உலகின் பல்வேறு பகுதிகளில் இதன் தொற்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்தாண்டு ஜனவரி மாதம், தென் அமெரிக்காவில் உள்ள பட்டகோனியா என்ற பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் ஒன்பது பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 60 பேருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

ஹண்டா வைரஸ்: சீனாவில் பரவும் தொற்று உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறுமா?படத்தின் காப்புரிமைBSIP / UIG VIA GETTY IMAGES

ஹண்டா வைரஸின் இறப்பு விகிதம் 38 சதவிகிதம் எனவும் அதற்கு தற்போது வரை தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை எனவும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் ஹண்டா வைரஸ் ஒரு தொற்று நோயாக இருந்தாலும், அது அவ்வளவு எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது எனவும் உயிரியல் அறிஞர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து குளோபல் டைம்ஸ் இணையதளத்திடம் பேசிய வூஹான் பல்கலைக்கழக உயிரியல் நிபுணர் யாங் ஷங்யூ,'' ஹண்டா வைரஸ் உள்ள ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாலே மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவாது. மேலும் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸும், ஹண்டா வைரஸும் ஒருவரை தாக்க வாய்ப்பில்லை. கொரோனா வைரஸை போல, ஒருவரின் சுவாச மண்டலம் மூலமாக ஹண்டா வைரஸ் பரவாது. ஆனால் ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதரின் கழிவுகள் அல்லது ரத்தம் மூலமாக இது மற்றொருவருக்கு பரவும்.'' என விளக்கமளித்துள்ளார்.

பொதுவாக இந்த வைரஸ் கிராமப்புறங்களில் மே மற்றும் ஜூன் மாத இடைவெளியிலும், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாத இடைவெளியிலும் அதிகம் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment