Saturday, 18 April 2020

பிள்ளையார் ... சில விளக்கங்கள்...

பிள்ளையார் நம்ம ஊரு சாமி இல்லை என சொல்பவர்களுக்கு சில விளக்கங்கள்;

கி.பி., 630 – 668 வரை தமிழகத்தை ஆண்ட பல்லவ மன்னனான, முதலாம் நரசிம்மவர்மன்,வாதாபியை வென்று, தமிழகத்திற்கு விநாயகரைக் கொண்டு வந்தான் எனவும்,தமிழகத்தில் நிலவும் பிள்ளையார் வழிபாட்டுக்கு பல்லவர்களே காரணமானவர்கள் எனவும் கூறப்பட்டு வந்தது.

பின், பிள்ளையார் பட்டி விநாயகர், வாதாபி விநாயகருக்கும் முந்தையவர் என்பதை நிறுவும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், முந்து தமிழ்க் கல்வெட்டுடன்,மூத்த கணபதியின் சிற்பம் ஒன்று, சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேஉள்ள ஆல கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது, கி.பி., 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள்கூறுகின்றனர்.

வடஇந்தியாவில் இருந்து விநாயகர் வழிபாடு தென்னிந்தியாவிற்கு வந்ததாக கூறப்படும்நிலையில், வட இந்தியாவை விட,தென்னிந்தியாவிலேயே அதிகளவிலும், அதிகவகையிலும், விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன.

கி.பி., 15 – 16ம் நுாற்றாண்டுகளில், இன்றைய கோவைப் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த, கொங்கு சேரர்கள்,இந்தியாவிலேயே, முதன்முதலில், விநாயகர் உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டனர்.

அவர்களைத் தொடர்ந்து, தென்னிந்தியாவில் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆட்சி செய்தவிஜயநகரப் பேரரசும், அதன்பின் தலையெடுத்த மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களும்,மராட்டியர்களும், ராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதிகளும் விநாயகர் நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள், பலவித விநாயகர் உருவங்களை பொறித்தனர். அது, விநாயகர் வழிபாட்டிற்கு அவர்கள் அளித்த முக்கியத்துவத்தையும்,மக்களிடம் கணபதி உருவத்திற்கு கிடைத்த வரவேற்பையும் காட்டுகிறது.

No comments:

Post a Comment