Wednesday, 15 April 2020

சம்மனமிட்டு அமருவதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகள்!

னம் போட்டு அமர்வார்கள்ற்கே மிகக்  உண்ணும் உணவிலிருந்து, திருமணத்திற்கு பேசி முடிக்கும் இடங்களிலும், பொது கூட்டங்களிலும், நாடகங்கள் பார்க்கும் போதும், களைப்பாறி வயல் காட்டில் உணவு உண்ணும் போதும், பாடம் படிக்கும் போதும், முக்கியமான இடங்களில் உட்காரும் போதும் சம்மனம் போட்டு அமருவதையே நம் முன்னோர்கள் மரியாதை நிமிர்த்தமாகவும், ஆரோக்கியமாகவும் கருதினர்.
னம் போட்டு அமர்ந்து உணவு உண்பது, உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் நம்மை சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
scitamil-siting updatenews360
சம்மனமிட்டு ஏன் அமர வேண்டும்?

சம்மனமிட்டு அமர்வதை சுகாசனா என்றும் அழைப்பார்கள்.
நாம் இயல்பாக செய்யும் இந்த செயல் நம் உடலில் ஏராளமான நன்மைகளை விளைவிக்கின்றது. எனவே தினமும் சிறிது நேரமாவது சம்மனம் போட்டு அமருங்கள் நண்பர்களே.
முதுகெலும்பு சீரமைக்கப்பட சம்மனம் போட்டு அமருதல் உதவுகின்றது. இப்படி அமர்வது ஒருவரின்
தோரணையை மேம்படுத்த பெரிதளவில் உதவி புரிகின்றது.
சம்மனமிடுதல் ஒருவர் உண்ணும் போது கவனத்தை மேம்படுத்துகிறது. நாம் அதிகப்படியான உணவு உண்பதை தடுக்க இந்நிலை உதவுகின்றது.
வயிற்றுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வது மட்டுமில்லாமல், வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் டி போன்ற நுண்ணிய ஊட்டச்சத்துக்கள் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவுகின்றது.
உடலை உற்சாகமாக வைப்பது மட்டுமில்லாமல், கீழ் உடலை வலிமையாக்க உதவுகிறது.
சம்மனமிடுதல் முறை கடினமான உடல் உள்ளவர்களுக்கு, மிகவும் பயனுள்ள முறையாக கருதப்படுகிறது.
இந்த முறை கணுக்கால், முழங்கால்கள் மற்றும் இடுப்பு மூட்டுக்கள் ஆகிய இடங்களில் நெகிழ்வுத்தன்மையை உருவாக்க உதவுகின்றது.
இது பயனுள்ள தியானப் பயிற்சியாகவும், செரிமானப் பிரச்சனைகளை எளிதில் சரிசெய்யவும் பயன்படுகிறது.
சம்மனமிடுதல் “ஈஸி போஸ்” என அழைக்கப்பட்டாலும், நம் உடலின் முழு எடையையும் பிட்டம் மட்டுமே தாங்குவதால், நம்மால் நீண்ட நேரத்திற்கு உட்கார முடியாது.
ஆனால் நாம் காலை மடக்கி சம்மனம் போட்டு அமருவதால், இடுப்புக்கு மேலே ரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும்.
உடலின் முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காது என முக்கியமான உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்வதுடன், அதன் மூலம் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
எனவே இனிமேல் சம்மனம் போட்டு அமருங்கள் மக்களே

No comments:

Post a Comment