Thursday, 9 April 2020

பூர்வ புண்ணியம்

பூர்வ புண்ணியம் பெற்றெடுத்த குழந்தை தான் பாக்கியம்.ஐந்துக்கு ஐந்து ஒன்பது.
ஒன்பதுக்கு ஒன்பது ஐந்து.. பாக்கியத்தின் தகப்பனார் தான் இந்த பூர்வ புண்ணியம்..
பூர்வ புண்ணியம் இருந்தால் பாக்கியம் தானாக வரும்.பூர்வ புண்ணியம் இருந்தால்தான் உத்யோகம் கிடைக்கும்.
"பதவீ பூர்வ புண்ணியானாம்"

பூர்வ புண்ணியம் இருந்தால்தான் அப்பா சொத்து , அப்பாவோட அப்பா சொத்து , தாத்தா சொத்து கிடைக்கும்.

பூர்வ புண்ணியம் இருந்தால் தான் வாழையடி வாழையாக நம் குலம் தழைக்க ஆண் குழந்தை (ஆண் வாரிசு) கிடைக்கும்.

பூர்வ புண்ணியம் இருந்தால் தான் மிகச் சிறந்த அறிவு,உலக மக்களுக்கு பயன்படக்கூடிய அறிவு,நுணுக்கமான அறிவு, ஆராய்ச்சி படிப்பு, கிடைக்கும்.

பூர்வ புண்ணியம் இருந்தால் தான் தெய்வபக்தி,தெய்வ அனுகூலத்தோடு, புண்ணிய நதிகளில் நீராடக்கூடிய வாய்ப்பையும் மகான்களை சந்திக்கும் வாய்ப்பும்  கிடைக்கும்

கீர்த்தி ஸ்தானம் எனப்படும் பூர்வ புண்ணியம் வலுத்தால் தான்
நாம் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் நம்முடைய புகழ்  நீடித்துநிலைத்து நிற்கும்

பட்டம் ,பதவி, புகழ்,கிடைக்க வேண்டுமா?

பூர்வ புண்ணியம் வலுத்து இருக்க வேண்டும்
அதென்னங்க பூர்வ புண்ணியம்?

அதுதான்ங்க ஐந்தாமிடம்.

ஐந்தாமிடத்து அதிபதி ஆட்சி,உச்சம்,  பெற்று, அல்லது கேந்திர திரிகோண ங்களில் அமையப்பெற்று லக்ன சுபர்களோடு , இணைந்து அல்லது பார்க்கப்பட்டு 
ஐந்தாமிடத்தையும்  சுபர்கள்  பார்க்க பிறந்தவர்

பூர்வ புண்ணியம் வலுத்தஜாதகன்.

பூர்வ புண்ணியம் வலுத்தவர்களை
ஏழரை,அஷ்டம சனி  பெருமளவு பாதிப்பதில்லை 

லக்னத்தில் பஞ்சமாதிபதி  அமையப்பெற்ற ஜாதகன் ,பூர்வ புண்ணியம் வலுத்த ஜாதகன்.

பஞ்சமா திபதிதான் சகல யோகங்களையும் தரனும்

அவன் லக்னத்தில் இருப்பதால்
ஆயுள் ங்கற பாக்கியம் கிடைத்து விடும்.
லக்னம் என்பது உயிர்.

லக்னாதிபதி+பஞ்சமாதி  பரிவர்த்தனை பூர்வ புண்ணியம் வலுத்த ஜாதகன்.

இவர்களுக்கு
பட்டம் பதவி புகழ்  செல்வாக்கு சொல்வாக்கு  அந்தஸ்து அதிகாரம் செலுத்தும் பதவிதானாக தேடி வரும்.
தேடி போக தேவையில்லை.

இப்போது தேர்தல் ஜூரம் எல்லோரையும் பற்றி கொண்டு உள்ளது. இது மக்களவை தேர்தல். ஆறு சட்டமன்றங்கள் சேர்ந்தது ஒரு M.P. தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் பூர்வ புண்ணியம் வலுத்து இருக்க வேண்டும்.

பூர்வ புண்ணியம் எவ்வளவு க்கு எவ்வளவு வலுத்து இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருடைய உயர்வு இருக்கும். மற்ற எட்டு கிரகங்கள் வலுத்து பூர்வ புண்ணியம் கெட்டால் அதற்கு "மாயை லக்னம்" என்று பெயர்.
ஒரு காலத்துல உலகப்புகழ் பெற்றிருந்தாலும் அந்த புகழோ ஆட்சியோ,அதிகாரமோ நீடித்து இருக்காது.

ஓரு ஜாதகத்தில் நான்கு ஐந்து கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும்..அவர் ஆஹா என்னே ஒரு அற்புதமான அமைப்பு. என்று நினைத்தால் அவர் மிக சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பார்.காரணம் பூர்வ புண்ணியம் கெட்ட ஜாதகம்.

ஒருவருக்கு மூன்று, நான்கு கிரகங்கள் நீசம் பெற்றிருக்கும். மிக உயர்ந்த பதவியில் இருப்பார்.செல்வம்,செல்வாக்கு, அந்தஸ்து, மாடமாளிகை,கூட கோபுரம் என்று பிரமாதமாக மன்னவனை போல வாழ்ந்து கொண்டு இருப்பார்.என்ன காரணம் தெரியுமா???ஒரே பதில் பூர்வ புண்ணியம் வலுத்த ஜாதகம்...

பூர்வ புண்ணியம் வலுத்தவர்களுக்கு மட்டுமே லக்னாதிபதியும் வலுவாக இருப்பார்.பூர்வ புண்ணியம் வலுத்தவர்களுக்கு மட்டுமே நல்ல யோகங்களை தரக்கூடிய தசாபுக்திகள் நீண்ட காலத்திற்கு வந்து யோகங்கள் நீடித்து நிலைத்து நிற்கும்.

ஒரு ஜாதகத்தில் இவர் அதிர்ஷ்டம் செய்தவரா??அல்லது துரதிர்டசாலியா??
இவர் புண்ணியத்தை பல மடங்காக டெபாசிட் செய்தவரா??அல்லது பாவத்தை  செய்து பாவத்தின் பலனாக இந்த பூவுலகில் வந்து அவதரித்தவரா??என்பதை ஐந்தாமிடத்தை கொண்டுதான் அறிய முடியும்.

 சனி ஐந்தாமிடத்தில் தனித்து பாவத்தன்மை பெற்றுள்ள ஜாதகத்தையும்,ஐந்தாமிடத்தில் குரு ஆட்சி ,உச்சம் , பெற்று அஸ்தங்கம், கிரகணம் பெறாமல் நல்ல ஆதிபத்தியம் வாங்கியுள்ள ஜாதகத்தையும் பாருங்கள்.. முன்னவர் கர்ம வினையை அனுபவிக்க பிறந்தவர்.பின்னவர் புண்ணியத்தின் பலனாக புண்ணியத்தை அனுபவிக்க பிறந்தவர்..


No comments:

Post a Comment