பொதுவாக கிரகங்களின் தாக்கங்களைக் குறைக்கவோ, அதிகரிக்கவோ வேண்டும் என்றால் அந்த கிரகங்களுக்குண்டான நாட்களில் அந்த கிரகங்களின் தானியத்தால் செய்த உணவுகளை தானம் தருவதன் மூலம் நல்ல பலன்கள் நம்மை வந்தடையும்.
சூரியன்: இவரின் தானியம் “கோதுமை.” எனவே கோதுமையால் செய்த உணவுகளை ஞாயிற்றுக்கிழமையில் தானம் செய்துவர நன்மைகள் நம்மை வந்து சேரும்,
சந்திரன்: இவரின் தானியம் “நெல்.” எனவே “பச்சரிசி” யில் செய்த உணவுகளை திங்கட்கிழமையில் தானம் செய்துவர நன்மை கிடைக்கும்.
செவ்வாய்: இவரின் தானியம் “துவரை.” எனவே துவரையால் செய்த உணவுகளை தானம் செய்ய வேண்டும்.
புதன்: இவரின் தானியம் “பச்சைப்பயறு.” இதை சுண்டல் செய்து தானம் தர நன்மை உண்டாகும்.
குரு: இவரின் தானியம் “கொண்டைக்கடலை.” இதை வியாழக்கிழமைகளில் தானம் வழங்கினால், நன்மை உண்டாகும்.
சுக்கிரன்: இவரின் தானியம் “மொச்சை.” இந்த மொச்சைப் பருப்பை சுண்டல் செய்து வெள்ளிக்கிழமை தோறும் தானம் தர செல்வ வளம் பெருகும்.
சனி: இவரின் தானியம் “எள்.” எனவே, எள் கலந்த உணவை தானம் தர சனியின் அற்புதப் பலன்கள் நம்மை வந்தடையும்.
ராகு: இவரின் தானியம் “உளுந்து.” எனவே உளுந்து பருப்பில் செய்த உணவை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தானம் தர அளப்பரிய நன்மைகள் வந்து சேரும்.
கேது: இவரின் தானியம் “கொள்ளு.” எனவே கொள்ளு கலந்த உணவை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் தர தடைகள் அனைத்தும் நீங்கி நினைத்தது நடக்கும்.
No comments:
Post a Comment