Saturday, 18 April 2020

சைனஸ்_பிரச்சினைக்கு

#சைனஸ்_பிரச்சினைக்கு #தீர்வு_தரும் #3_பொருட்கள்...
   
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே சைனஸ் பிரச்சினை, சளி, தும்மல் என ஆரம்பித்துவிடும். என்ன தான் மாத்திரை, மருந்தென சாப்பிட்டாலும் சரியாக ஒரு வாரத்துக்கு மேல் ஆகும். ஆனால் முழுமையாக குணமாகுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எளிய வீட்டு வைத்தியத்தில் ஒரே நாளில் சரிசெய்துவிட முடியும். அதுபற்றி இந்த பகுதயில் முழுமையாகப் பார்க்கலாம்.

#காரணமும்_தீர்வும்

இன்றைய மாசு நிறைந்த தட்பவெப்ப நிலையில் உங்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சினைகளில் சைனஸ் தொற்றை கடைசியாக சேர்த்துக் கொள்ளலாம். சைனஸ் தலைவலி மூக்கு துவாரங்களை சுற்றிலும் மற்றும் தலையை சுற்றிலும் தேள் கொட்டுவது போன்ற மிகுந்த வேதனை தரும் வலியாகும்.

முகத்தை சுற்றிலும் அதிகப்படியான சளி சேர்வதே சைனஸ் ஏற்படுவதற்கான காரணமாகும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் சளி சவ்வுப் படலம் வீக்கமடைந்து நெற்றியில் தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தி முகத்தில் அழுத்தத்தை உண்டாக்குகிறது. நாம் பெரும்பாலும் இந்த நோயின் தீவிரத்தை உணராமல் மோசமான பின் விளைவுகளை புறக்கணிக்கிறோம். இந்த பிரச்சனை நாள்பட இருந்தால் நீங்கள் எப்போதும் மருந்துகளை நம்பியே இருக்க வேண்டி இருக்கும்.

இருந்தாலும் சில இயற்கையான நிவாரண வழிகள் இந்த அறிகுறிகளை போக்க உதவும். என்னை கேட்டால், உண்மையில் இந்த இயற்கையான, செய்வதற்கு எளிமையான வீட்டு மருந்துகளைக் கொண்டு சைனஸுக்கு நிவாரணம் பெறலாம். இதற்கு மூன்றே மூன்று பொருட்கள் மட்டுமே தேவை. இந்த சக்தி வாய்ந்த கலவை சைனஸை விரட்டியடித்து மிகச்சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. அதை எப்படி தயாரிப்பது என்று இங்கே பார்க்கலாம்.

#எப்படி_தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

1 பெரிய குதிரை முள்ளங்கி (காட்டு முள்ளங்கி என்றும் அழைக்கப்படுகிறது)

¼ கப் ஆப்பிள் சிடார் வினிகர்

½ கப் தேன்

இந்த கஷாயத்தை தயாரிக்க முதலில் குதிரை முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த பேஸ்டை அரைத்து முடித்த பிறகு அத்துடன் வினிகரையும் தேனையும் ஊற்றி நன்கு கலக்கவும்.

விருப்பப்பட்டால் நீங்கள் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது இந்த கரைசல் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கிறது. இனி இதை ஃபிரிட்ஜில் ஒரு வருடம் வரை பத்திரமாக வைத்திருந்து தேவைப்படும்போதெல்லாம் பயன்படுத்தலாம்.

சைனஸ் தொற்றால் நீங்கள் பாதிக்கப்படும்போதெல்லாம் 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் இந்த கலவையைச் சாப்பிட்டால் அது நன்றாக வேலை செய்து அடைப்பு ஏற்பட்டிருக்கும் மூக்கை உடனடியாகத் திறக்கிறது.

இந்த கலவையில் உள்ள குதிரை முள்ளங்கி தான் கலவையை காரசாரமாக்குகிறது இது தான் இந்த கலவை மிகவும் ஆற்றல் மிக்கதாக இருப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும், எனவே காரம் உங்களுக்கு ஆகாது என்றால் மிகவும் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

#பயன்கள்

குதிரை முள்ளங்கி இயற்கையாகவே காரசாரமானது. எனவே அதை நீங்கள் நறுக்கும்போது அதிலுள்ள இரசாயனங்கள் நுகர்வு உணரிகளுடன் இணைக்கப்பட்டு செயலாக்கப்பட்டு சைனஸ் துளைகளுடன் போராடுகிறது. இதை கொஞ்சம் கொஞ்சமாக சப்பி சாப்பிடும்போது விரைவில் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு சைனஸ் நீர் வடியத் தொடங்குவதை நீங்கள் உணருவீர்கள்.

குதிரை முள்ளங்கியில் அதிக அளவில் சல்ஃபர் அடங்கியுள்ளது, இது உடலில் இயற்கையாக ஆன்டிபயாடிக்காக செயல்பட்டு சளியின் செயலாற்றலை குறைத்து மேலும் மூக்கு துவாரங்களையும் பாதுகாக்கிறது. மோசமான தொண்டை புண் ஏற்படும்போது இது வியக்கத்தக்க அளவில் உதவுகிறது.

தேன், அதன் பங்குக்கு ஒரு இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளாகவும் இதமளிப்பதாகவும் தொண்டை எரிச்சலுக்கு ஆறுதலாகவும் இருக்கிறது. இதனால்தான் தேன், திடீர் மூக்கு அல்லது தொண்டை தொற்றுக்களுக்கு குணமளிக்கும் வீட்டு மருந்துகளில் முதலாவதாக இருக்கிறது.

ஆப்பிள் சிடார் வினிகர் நல்லதொரு சைனஸ் நிவாரணி ஆகும். வடிகட்டப்படாத ஆப்பிள் சிடார் வினிகர் ஆச்சரியகரமான ஆரோக்கிய பயன்களை கொண்டிருக்கிறது, இது சளிப்படலத்தை கரைத்து சைனஸ் அழுத்தத்தை போக்குகிறது. இது சுவாசப் பாதையை சுத்தம் செய்து ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்டுகளை வழங்குகிறது. மேலும் இது உடலின் பிஹெச் அளவுகளை சமநிலைப்படுத்துகிறது. எனவே, இது தவறாமல் பயனளிக்கக்கூடிய இயற்கையான சிகிச்சையாகும்!

உங்களுக்கு இந்த வேரின் சுவை பிடிக்கவில்லை என்றால், இந்த திரவத்தை நீங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம். இருந்தாலும், அதை நீண்ட நேரம் சருமத்தில் விட்டு வைக்காமல் இருப்பதில் எச்சரிக்கையாக இருக்கவும்.

#கவனிக்க_வேண்டியவை

இந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கை வைத்திய முறைகளை வெறுமனே பயன்படுத்துவது என்பது தவறு. நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவே மருந்து முறையோடு, இன்றைய மாறிவிட்ட வாழ்க்கை முறையில், மருத்துவ ஆலோசனைகளைம் பெற்றுக் கொள்வது நல்லது.

வீட்டு வைத்திய முறைகள் குறிப்பாக, இயற்கை முறை மருத்துவம் பக்க விளைவுகள் அற்றதாக இருந்தாலும் கூட, மற்ற நிறைய விஷயங்களுக்கு மருத்துவரைப் பார்த்து ஆலோசனை பெறுவோம். அவருக்குத் தெரியும் நம்முடைய உடல் அமைப்பு எப்படிப்பட்டது என்று. இயற்கை மருத்துவத்திலேயே நம்முடைய உடல் வாகைப் பற்றி (வாத உடல், பித்த உடல், கப உடல்) நன்கு தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும்

No comments:

Post a Comment