Saturday, 18 April 2020

சார்வரி .



தமிழ் வருடங்கள் மொத்தம் 60.பிரபவ முதல் அக்‌ஷய வரை ..இதுவே மாறி மாறி வரும் ஜனவரி பிப்ரவரி போல.இந்த 60 ஆண்டுகளுக்கும் பலன் என சொல்லி ஒரு நான்கு வரியில் நம் முன்னோர்கள் வெண்பா தமிழ் புத்தாண்டின் பெயர் சார்வரி .

இதற்கான வெண்பா பாடல்.

சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு  நோயால் திரிவார்கள் மாரியில்லை 
பூமி விளைவில்லாமல் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு.

 பாடல் விளக்கம்

சாருவரி வருடத்தில் சாதிமத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் தீராத வியாதி உண்டாகி அதை தீர்க்க முடியாமல் அவஸ்தைபடுவார்கள்.

இந்த ஆண்டு இப்படி தொடங்கினாலும் வைகாசி 9ஆம் தேதி ராகு மிருகசிரீடம் நட்சத்திரம் செல்லும் போது நோய் கட்டுப்பாட்டுக்கு வரும்.சித்திரை பிறந்து விட்டதால்,அரசு கிரகம் சூரியன் தன் உச்ச வீட்டுக்கு வந்து விட்டதால்  இனி மத்திய மாநில அரசுகள் தைரியமாக தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு,சில அதிரடி முடிவுகளை எடுத்து  மக்களை காப்பார்கள்.வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment