Thursday, 9 April 2020

பீனிசம் / ஒற்றை தலைவலி / சைனஸ் / மைக்கரென் குணமாக*

*பீனிசம் / ஒற்றை தலைவலி / சைனஸ் / மைக்கரென் குணமாக*

ஆடாதொடை
அதிமதுரம்
கண்டங்கத்திரி
சித்தரத்தை 
தாளிசப்பத்திரி
திப்பிலி

இவை அனைத்தையும் சம அளவு வாங்கி சுத்தி செய்து தனித்தனியே இடித்து சூரணம் செய்து சலித்து வைத்து கொள்ள வேண்டும்...

இதில் 10கி சூரணத்தை 200மிலி தண்ணீரில் போட்டு சிறு தீயில் எரித்து கொதிக்க வைத்து நன்றாக சுண்ட காய்ச்சி 100மிலியாக வற்றியதும் வடிகட்டி இளஞ்சூடாகவே குடிக்கவும்

*பயன்கள்*

சளி 
சைனஸ்
சளியிருமல்
தொண்டை கமறல்
மூக்கடைப்பு
மூச்சிரைப்பு
ஆஸ்மா வரை நுரையீரலில் ஏற்படும் அனைத்து வித நோய்களையும் குணமாக்கும்...

2. வாரம் இருமுறை தலைக்கு சுக்கு தைலம் அல்லது நொச்சி தைலம் தேய்த்து அரைமணி நேரத்திற்கு பிறகு வெந்நீரில் குளிக்க வேண்டும்

3. விரலி மஞ்சளை சுத்தமான நல்லெண்ணெயில் ஊற வைத்து அதை நெருப்பில் காட்டி அதில் வரும் புகையை காலை மாலை நுகர வேண்டும்...

4. பஞ்ச கற்ப குளியல் பொடியை வாரத்தில் இருநாள் பாலில் கலந்து காய்ச்சி பசை போல் ஆனதும் இளஞ்சூடாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு வெந்நீரில் குளிக்க வேண்டும்...

No comments:

Post a Comment