Saturday, 11 April 2020

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்?

நெய்யை எந்த உணவுடன் சேர்த்து உண்பது உடலுக்கு நன்மை தரும்?


ghee updatenews360நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, கட்டயமாக உப்பு சேர்த்து உண்ண வேண்டும்.
  • மதிய உணவில் அரை தேக்கரண்டி நெய் சேர்த்து உண்பது நல்லதாகும். உணவில் முதல் கவளத்திலேயே நெய் பிசைந்து உண்ண வேண்டும். உப்பில்லாமல் நெய் சேர்த்து உண்பதை கட்டாயமாக தவிர்த்து விடுங்கள்.
  • தோசை சுடும் போதும் எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்து சுட்டால், நெய்யை மிகக் குறைவான அளவிலே சேர்ப்பது நல்லதாகும். இரவில் நெய் சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். காரணம் உணவு செரிமானம் அடைய தாமதமாகும்.
  • வெண்ணெயை நன்கு உருக்கி எடுத்த பின்பே நெய்யை பயன்படுத்த வேண்டும். சூடாக சமைக்கப்பட்ட உணவுகளில் மட்டும் நெய் சேர்த்து உண்ணுங்கள். ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளிலோ அல்லது சூடு இல்லாதா உணவுகளிலோ நெய் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
  • பாசிப்பருப்போடு தாராளமாக நெய் சேர்த்து உண்ணலாம். இதில் உள்ள கொழுப்பு சத்து, பருப்பின் புரதச் சத்தோடு சேர்ந்து உண்பதால் உடலுக்கு ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வழி வகுக்கும். இதை சிறார்களுக்கு கட்டாயமாக கொடுத்து வரலாம். சிறிய வயதில் இருந்தே அவர்களுக்கு கொடுத்து வருவதால், எளிதில் ஆரோக்கியம் அவர்களுக்கு கிடைக்கும்.
  • சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால்,பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு போன்ற அசைவ உணவுகளில் கட்டாயமாக நெய் சேர்க்கக் கூடாது. இவை இரண்டிலும் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால், உணவு செரிமானம் அடைய தாமதமாகும்.

எந்த உணவுடன் நெய் சேர்க்கலாம்:

*கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா,பாயசம், சர்க்கரைப் பொங்கல் மற்றும் ஹோம்மேடு இனிப்பு வகைகளில் நெய்யை சேர்த்து சமைத்து உண்டால், நல்ல சுவையுடன் இனிப்பு வகைகள் இருக்கும்.

யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?


1 comment:

  1. அருமையான பதிவு அய்யா வெ.சாமி அவர்களே..!

    ReplyDelete