Sunday, 12 April 2020

நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க இந்த பத்து உணவுகளை எடுத்துக்கோங்க போதும்!!!!

நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க இந்த பத்து உணவுகளை எடுத்துக்கோங்க போதும்!!!!

12 April 2020, 6:08 pm
foods-to-keep-your-lungs-healthy
Quick Share

நமது உடல் சரியாக இயங்குவதற்கு தேவையான ஒரு முக்கியமான உறுப்பு நுரையீரல். அதுவும் தற்போது உலகமெங்கும் பரவி வரும் கொரோனா தொற்றானது நுரையீரலை தான் முதலில் பாதிக்கிறது. எனவே இதில் இருந்து தப்பிக்க நல்ல ஆரோக்கியமான நுரையீரலை நாம் பெற்றிருத்தல் அவசியம். ஒரு சில உணவுகளை நாம் எடுத்துக் கொள்வதன் மூலமாக நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அவை யாது என்பது குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

1. ஆப்பிள்:

மூச்சு குழாயில் ஏற்படுகின்ற வீக்கத்தை குறைக்கும் ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் பீனாலிக் காம்பௌன்டுகள் ஆப்பிளில் நிறைந்துள்ளது. தினமும் ஆப்பிள் ஜூஸ் பருகி வரும் குழந்தைகளுக்கு வீசிங் கோளாறு ஏற்பட குறைந்தபட்ச வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆய்வு தகவல் கூறுகிறது.

2. கிரீன் டீ:

ஆன்டி ஆக்ஸிடன்டுகள் மிகுந்து காணப்படும் கிரீன் டீயை தினமும் பருகி வரும் போது நுரையீரலில் உள்ள வீக்கத்தை குறைத்து அது விரைவில் ஆற உதவி செய்கிறது. அலர்ஜி அறிகுறிகளை குறைக்கும் குவர்சிட்டின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் கிரீன் டீயில் உள்ளது. தினமும் இரண்டு வேலை கிரீன் டீ குடிப்பவர்களின் நுரையீரல் அதனை பருகாதவர்களின் நுரையீரலை காட்டிலும் நன்றாக வேலை செய்வதாக 2017 கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு சொல்கிறது. 

3. மீன்:

கடுமையான சுவாச நோயான COPD யை சரிய செய்ய வல்ல உணவு மீன். மீனில் உள்ள ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட் நுரையீரலில் ஏற்படும் இன்ஃபெக்ஷனுக்கு எதிராக போராடி அதனை காக்கிறது. 

4. நட்ஸ்:

நட்ஸ் மற்றும் விதைகள் நுரையீரலுக்கு ஏற்ற மற்றொரு உணவு. பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸூகளிலும் பூசணி விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை போன்ற விதைகளில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம் இயற்கை பிரான்கோடயலேட்டரை போல வேலை செய்கிறது.

5. ஆலிவ் எண்ணெய்:

மோனோசாச்சூரேட்டட் ஃபாட், வைட்டமின் K, வைட்டமின் E நிறைந்த ஆலிவ் எண்ணெய் நுரையீரலில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்து அதனை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

6. பிராக்கோலி:

ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸினால் நுரையீரலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும்  நுரையீரல் அணுக்களில் காணப்படும் ஜீன்களின் வேகத்தை அதிகரிக்க வல்ல சல்போராப்பேன் பிராக்கோலியில் உள்ளது. மேலும் அது மூச்சு குழாயில் காற்று சுலபமாக செல்ல உதவி செய்கிறது.

7. இஞ்சி:

ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட இஞ்சி உடலில் ஏற்படும் உள் வீக்கத்தை குறைக்கும். இது நுரையீரலில் உள்ள வெளிப்பொருட்களை நீக்கி அதனை சுத்தம் செய்கிறது. சுவாச குழாயில் உள்ள அடைப்புகளை நீக்கி, நுரையீரலுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

8. பூண்டு:

பூண்டில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ் நுரையீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகின்றது. மேலும் இது நுரையீரல் சரியாக வேலை செய்ய உதவி செய்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு முறை நான்கைந்து  பூண்டு பல்லை உண்டு வந்தவர்களுக்கு நுரையீரலில் கேன்சர் உண்டாகும் வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

9. முழு தானியங்கள்:

கோதுமை, பிரவுன் அரிசி போன்ற முழு தானியங்களை அதிகமாக சேர்த்து கொள்ளுங்கள். இவை உங்கள் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.

10. வால் மிளகு:

வால் மிளகில் உள்ள கேப்சைசின் நுரையிரலை காக்கும் சுரப்பிகளை தூண்ட வல்லது. எனவே உங்கள் உணவில் வால் மிளகை சேர்த்து கொள்வது மிகவும் அவசியம். அதுவும் ஆஸ்துமா கோளாறு உள்ளவர்கள் மிளகு டீ சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்

No comments:

Post a Comment