Saturday, 18 April 2020

மீனாட்சி

மீன்கள்  தன் முட்டைகளை கண்களால் பார்த்தே  அடைகாத்து முட்டையில் இருந்து  
  மீன்குஞ்சுகளை வெளிவரசெய்யும்..அது போல தன் கண் பார்வையால் பார்த்தே மதுரையை ஆட்சி செய்கிறாள் மதுரை மீனாட்சி..கண்ணிமைக்காமல் தன் பக்தர்களை காக்கிறாள்..மீன் போன்ற கண்கள் என சொல்லப்படுவதால் மட்டுமே மீனாட்சி என அர்த்தம் அல்ல..அந்த அர்த்தத்துக்குள் இந்த கண்ணின் சக்தியும் அடங்கி இருக்கிறது.

மீனாட்சியை வழிபடும்போல கண்களால் அன்னை கண்களை பார்த்தால் நம் முள் இருக்கும் கெட்ட சக்திகள் நீங்கி நல்ல சக்திகள் நம் ஜீவனுடன் கலக்கும்.மீனாட்சி எல்லோருக்கும் பச்சையாய் தெரிவதில்லை...அடுத்த முறை நன்கு உற்று கவனியுங்கள் பச்சை ஒளிப்பிழம்பாய் அன்னை தெரிவாள்..உலகில் வேறு எங்கும் இல்லாத அதிசயமாக மரகதபட்சை கல்லால் ஆன மூலவர் சிலை அன்னை மீனாட்சிதான்...!!!

No comments:

Post a Comment