Wednesday, 8 April 2020

சித்த மருத்துவத்தில் உலோகங்கள், பாடாணங்கள்

#சித்த_மருத்துவத்தில்_மருந்துகளின்_தொகை#

சித்த மருத்துவத்தில் உலோகங்கள், பாடாணங்கள், உபரசங்கள், இலவண உப்புகள், கடைச் சரக்குகள், மூலிகைகள் போன்றவை மருந்தாக பயன்படுகிறது.

 இவ்வாறு பயன்படும் ஒவ்வொரு பொருளிலும் குற்றங்களும் (தோஷங்கள்), மருத்துவத்திற்கு உதவாத மற்றும் நோயாளிக்கு ஊறு செய்யும் நஞ்சு பாகங்களும் உள்ளது.

 அதுபோல ஒவ்வொரு மருந்து சரக்கிற்கும் அதன் மருத்துவ குணத்தை கெடுக்கும் சத்ரு சரக்குகளும், அதனதன் குணத்தை அதிகப்படுத்தும் மித்ரு சரக்குகளும் உள்ளன !!!

மருந்துப் பொருட்களின் விபரம்:

உலோகங்கள் - 11

லவண 
உப்புகள் - 25

பாஷாணங்கள் - 64

கடைச் சரக்குகள் - 64

உபரசங்கள் - 120

மூலிகைகள் - 1008

#உலோகங்கள்_#
தங்கம்
வெள்ளி
செம்பு
நாகம் (துத்தநாகம்)
எஃகு
வெண்கலம்
தரா
பித்தளை
இரும்பு
வெள்வங்கம்
கருவங்கம்

இவற்றில் வெண்கலம், பித்தளை, தரா எனும் மூன்றும் கலப்பு உலோகம், அதாவது இரண்டுக்கு மேற்பட்ட உலோகக் கலவை.

 மற்றவை தனித்த உலோகங்கள்.

நமது சித்த மருத்துவத்தில் 25 வகையான உப்புகள் மருந்தாக பயன்படுகிறது.

 இதில்
 10 வகை இயற்கை இலவணம் (உப்புகள்).

 மீதமுள்ள 15 வகையானவை செயற்கை இலவணங்கள் (உப்புகள்).

வழலை
பூநீறு
நவசாரம்
எவச்சாரம்
கெந்தியுப்பு
வளையலுப்பு
வெங்காரம்
ஏகம்பச்சாரம்
அமுரியுப்பு
பச்சை கற்பூரம்
கற்பூரம்
சத்திசாரம்
வெடியுப்பு
மீனம்பர்
பொன்னம்பர்
சவுட்டுப்பு
திலாலவணம்
பிடாலவணம்
இந்துப்பு
சிந்துப்பு
கல்லுப்பு
காசிச்சாரம்
அட்டுப்பு
சீனம்
கடல்நுரை

#பாடாணங்கள்#

#பாடாணம்
 அல்லது #பாஷாணம்# என்பது சித்த மருத்துவத்தில் பயன்படும் அடிப்படை மூலகங்களில் ஒன்று. 

இது விஷத்தன்மை கொண்டது நேரடியாக உண்டால் உயிரை மாய்க்கும்.

 ஆனால் பக்குவம் அறிந்து செய் பாகம் கை பாகம் சுத்தி செய்து புடம் இட்டு பயன்படுத்தும் போது நோய்களை நீக்கி உயிர் வளர்க்கும்.

 மொத்தம் 64 பாடாணங்கள் உள்ளன.

 அவற்றில் 32 பிறவி பாடாணங்களும், 32 வைப்பு பாடாணங்களும் ஆகும்.

பிறவிப் பாடாணங்கள் - 32:

அஞ்சனப் பாடாணம்
அப்பிரக பாடாணம்
ஔபலம் (ஆவுபல்) பாடாணம்
கந்தக பாடாணம்
தாளக பாடாணம்
கற்கடகசிங்கி பாடாணம்
காய்ச்சற் பாடாணம்
கற்பாடாணம்
கற்பரி பாடாணம்
காந்த பாடாணம்
கார்முகில் பாடாணம்
குதிரைப்பல் பாடாணம்
கௌரி பாடாணம்
வீர பாடாணம்
கோளகம் பாடாணம்
சங்கு பாடாணம்
சரகண்ட பாடாணம்
சாலாங்க பாடாணம்
சிலாமத பாடாணம்
சீதாங்க பாடாணம்
சிரபந்த பாடாணம்
அரிதார பாடாணம்
சூத பாடாணம்
தாலம்ப பாடாணம்
துத்த பாடாணம்
தொட்டிப் பாடாணம்
பலண்டுறக பாடாணம்
மனோசிலை
இலிங்க பாடாணம்
மிருதார பாடாணம் (மிருதார சிங்கி)
அமிர்த பாடாணம்
வெள்ளை பாடாணம்

வைப்பு பாடாணங்கள் - 32:
பொற்றொட்டி வைப்பு பாடாணம்
செப்புத்தொட்டி வைப்பு பாடாணம்
அயத்தொட்டி வைப்பு பாடாணம்
புத்தொட்டி வைப்பு பாடாணம்
தொட்டி வைப்பு பாடாணம்
இரத்தசிங்கி வைப்பு பாடாணம்
இரசிதசிங்கி வைப்பு பாடாணம்
ஏமசிங்கி வைப்பு பாடாணம்
தீமுறுகல் வைப்பு பாடாணம்
சாதிலிங்க வைப்பு பாடாணம்
வெள்ளை வைப்பு பாடாணம்
கௌரி வைப்பு பாடாணம்
சவ்வீர வைப்பு பாடாணம்
கோழித்தலை வைப்பு பாடாணம்
பவளப்புற்று வைப்பு பாடாணம்
கோடாசூரி வைப்பு பாடாணம்
கெந்தி வைப்பு பாடாணம்
அரிதார வைப்பு பாடாணம்
சொர்ண வைப்பு பாடாணம்
பஞ்சபட்சி வைப்பு பாடாணம்
கோமுக வைப்பு பாடாணம்
துருசு வைப்பு பாடாணம்
குங்கும வைப்பு பாடாணம்
இரத்தவர்ண வைப்பு பாடாணம்
சூத வைப்பு பாடாணம்
நீலவர்ண (நீலி) வைப்பு பாடாணம்
துத்த வைப்பு பாடாணம்
சோர வைப்பு பாடாணம்
சொர்ண வைப்பு பாடாணம்
இந்திர வைப்பு பாடாணம்
இலவண வைப்பு பாடாணம்
நாக வைப்பு பாடாணம்
இவை தவிர வேறு சில வைப்பு பாடாணங்களின் பெயரும், தயாரிக்கும் முறைகளும் சித்தர் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவை,
பூர வைப்பு பாடாணம்
சீன வைப்பு பாடாணம்
காக வைப்பு பாடாணம்
காசு வைப்பு பாடாணம்
தைல வைப்பு பாடாணம்
இரத்த வைப்பு பாடாணம்
இரசசிங்கி வைப்பு பாடாணம்
கார்முகில் வைப்பு பாடாணம்
சுரைக்கெந்தி வைப்பு பாடாணம்
வாரண கெந்தி வைப்பு பாடாணம்
எருமை நாக்கு தொட்டி பாடாணம்
வெள்ளி இரசித வைப்பு பாடாணம்
கார்வங்க இரசித வைப்பு பாடாணம்
சொர்ண கருணை வைப்பு பாடாணம்
வங்கப்பச்சை (பச்சை துருசு) 

வைப்பு பாடாணம்...
*உபரசச் சரக்குகள்:*
அஸ்திபேதி
அஞ்சனம்
அப்பிரகம்
அயமலை
அன்னபேதி
ஆட்டுக்கொம்பு
ஆமையோடு
இந்திரகோபம்
இரசிதச்சிலை
இரசிதநிமிளை
இரசிதமணல்
இராசவர்த்தனக்கல்
ஈரக்கல்
உலோகநிமிளை
உலோகம்
உவர்மண்
ஊசிக்காந்தம்
எலிமுள்
எலும்பு
ஏமமலை
ஏமம்
ஓட்டுக்கல்
ஓட்டுக்காந்தம்
கஞ்சநிமிளை
கடல்நுரை
கடற்பாசி
கண்டகச்சிலை
கதண்டு
கஸ்தூரியெலும்பு
கருங்கல்
கருஞ்சுக்கான்
கருடப்பட்சிக்கல்
கருமணல்
கருவண்டு
கலைக்கொம்பு
கல்நார்
கற்காந்தம்
கண்மதம்
காஸ்மீரப்படிக்கல்
காகச்சிலை
காகநிமிளை
கரடி
காண்டாமிருகம்
காந்தம்
காரியமணல்
காரூரச்சிலை
காவிக்கல்
கானற்கல்
கிருஷ்ணாப்பிரகம்
குருந்தக்கல்
கோமேதகம்
கோரோசனை
கோழி
சங்கு
சாத்திரபேதி
சாலக்கிராமம்
சிப்பி
சிலாநாகம்
சிலாவங்கம்
சிவப்பு
சுக்கான்கல்
சுத்தக்கருப்புமண்
சுவேதஅப்ரேகம்
சூடாலைக்கல்
செங்கல்
செம்புமணல்
செம்புமலை
செம்மண்
செவ்வட்டை
செவ்வப்பிரகம்
சொர்ணபேதி
தங்கம்
தந்தம்
தவளைக்கள்
திராமலை
துருசு
தேகக்கல்
நண்டு
நத்தை
நவரத்தினம்
நாகப்பச்சை
நாகமலை
நரகம்
நாகரவண்டு
நீலம்
பச்சை
பவளம்
பன்றிமுள்
பித்தளைமலை
புட்பராகம்
புற்றான்பழம்
பூநாகம்
பொன்னப்பிரகம்
பொன்னிமிளை
மஞ்சட்கல்
மண்டூகம்
மந்தாரச்சிலை
மயிர்
மயிலிறகு
மரகதப்பச்சை
மல்லி
மனோசிலை
மாக்கல்
மாங்கீசச்சிலை
மாட்டுக்கொம்பு
மாந்துளிற்கல்
மீனெலும்பு
முடவாட்டுக்கால்
முட்சங்கு
முட்டை
முத்து
முத்துச்சிப்பி
வயிரம்
வராகக்கொம்பு
வெண்கலமலை
வெண்சுக்கான்
வெள்ளி
வெள்ளீயமணல்
வெள்ளீயமலை
வைடூரியம்
ஆக மொத்தம் 120 சரக்குகள்.

 இருப்பினும் உபரசங்களின் எண்ணிக்கை 120க்கும் அதிகமாகவும் இருப்பதாக மகா சித்தர் போகர் கூறுகிறார்.

 இவை மருந்து தயாரித்தல், இரசவாதம் போன்றவற்றில் உபச் சரக்குகளாக பயன்படுகின்றன.
*கடை சரக்கு வகைகள்:*
கடைச் சரக்குகள் என்பவை நாம் நாட்டு மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தும் பொருட்களெயாகும்.
 இவைகளில் பெரும்பாலும் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண பொருட்கள் தான். ஆனாலும் இவற்றின் மருத்துவ குணங்கள் மிகவும் அதிகம்.

 பொதுவாக கடைச் சரக்குகள் 64 என்று கூறினாலும், உண்மையில் 70க்கும் மேற்பட்ட கடைச் சரக்குகள் உள்ளன. 
அவை,
சுக்கு
மிளகு
திப்பிலி
ஓமம்
சீரகம்
கடுகு
வெந்தயம்
கருஞ்சீரகம்
சதகுப்பை
வசம்பு
கடுக்காய்
நெல்லிக்காய்
தான்றிக்காய்
மஞ்சள்
அதிவிடயம்
சிறுதேக்கு
அரத்தை
அதிமதுரம்
கடுகுரோகிணி
புளி
வாய்விளங்கம்
கீச்சிலி கிழங்கு
கர்கடகசிங்கி
காற்போக அரிசி
வாலுழுவை அரிசி
பெருங்காயம்
அரக்கு
சேங்கொட்டை
தாளிசபத்திரி
கிராம்பு
சிறுநாகப்பூ
சடாமாஞ்சில்
கோஷ்டம்
மெழுகு
குங்கிலியம்
குந்திரிக்கம்
கூகைநீறு
கஸ்தூரி
கோரோசனை
குங்குமப்பூ
சந்தனக் கட்டை
சாதிபத்திரி
பாக்கு
சித்திரமூலம்
திப்பிலி மூலம்
சாதிக்காய்
யானை திப்பிலி
கொடுக்கை புளி
கருங்கொடிவேலி
வெண் கடுகு
செவ்வியம்
காட்டு சதகுப்பை
மரமஞ்சள்
கடுக்காய் பூ
மஞ்சிட்டி
சிறுவாலுழுவை
ஏலக்காய்
நிலாவிரை
பேரீச்சங்காய்
இலவங்கப்பட்டை
இலவங்கப் பூ
இலவங்கப்பத்திரி
மாசிக்காய்
கசகசா
வலம்புரிக்காய்
தக்கோலம்
அரிசிவிதை
கொத்தமல்லி
வெள்ளைப்பூண்டு
போளம்
 (போளம் - கற்றாழையின் பால்)
சிவதை வேர்
நேர்வாளம்
சாம்பிராணி
கற்ப்பூரம்
புனுக்குச்சட்டம்
சவ்வாது
குக்கில்
அக்கரகாரம்
ஐவித நெய்
தாமலபத்திரி
பிசின்

தகவல் இறை அருள் வைத்தியர் மாலிக்
8220320197

No comments:

Post a Comment