Thursday, 9 April 2020

சர்க்கரை நோய் இல்லை ,இரத்த அழுத்தம் இல்லை ஆனால் பாத எரிச்சல் இருக்கிறது



★சர்க்கரை நோய் இல்லை 

★இரத்த அழுத்தம் இல்லை 

ஆனால் பாத எரிச்சல் இருக்கிறது என்பவர்களுக்கும்  இது மிக சிறந்த தீர்வுள்ள வைத்திய குறிப்புகள்.

#குருந்தொட்டி_சூரணம் 
#பால்_கசாயம்

குருந்தொட்டி சூரணம்   ........... ஒரு தேக்கரண்டி 

பூண்டு ............. நான்கு பற்கள் நசுக்கியது 

பால் .................  நூறு மில்லி 

தண்ணீர்  ...........  இருநூறு மில்லி 

சேர்த்து சிறுதீயில் நன்கு கொதிக்க வைத்து
நூறு மில்லியாக சுருக்கி
இறக்கி அத்துடன் இரண்டு மில்லி உள்ளுக்கு சாப்பிடும் விளக்கெண்ணெய் கலந்து 
இரவு படுக்கும் முன் குடித்து வர கால் பாத எரிச்சல் குணமாகும்.

#ஆவாரம்_பூ_பொடி

👉என்னென்ன தேவை❓

காய்ந்த மிளகாய் 15

உலர்ந்த ஆவாரம் பூ,

கடலைப் பருப்பு தலா அரை கப்

உளுந்து அரை கப்

பூண்டு 6 பல்

பெருங்காயம் சிறிதளவு

எண்ணெய், உப்பு தேவையான அளவு

★எப்படிச் செய்வது❓

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், பூண்டு இவற்றைத் தனித்தனியாக வறுத்துக்கொள்ளுங்கள். பெருங்காயத்தையும் எண்ணெயில் பொரித்துக்கொள்ளுங்கள். ஆவாரம்பூ, கடலைப் பருப்பு, உளுந்து ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் அனைத்தையும் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். 

#சர்க்கரை_நோயாளிகளுக்கு #வரக்கூடிய……❗

சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.

♦ மருந்துo1

★ தேவையான பொருட்கள்

நித்திய கல்யாணி பூக்கள் =  5 முதல் 10

சீரகம்     கால் ஸ்பூன்

5 முதல் 10
நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.

♦மருந்து o2

★ தேவையான பொருட்கள்

நித்திய கல்யாணி பூக்கள், 10 பூ

கருஞ்சீரகம் 
கால் ஸ்பூன்

நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.

♦ நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.

★ தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்,
2 பங்கு

நித்திய கல்யாணி இலை. 
தேவையான அளவு

ஒரு பாத்திரத்தில் 
2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை 
அரைத்து சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.

★ தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்
100 மில்லி 

சிகப்பு அரளிப்பூ
ஒரு கைபிடி அளவு

தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்
நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .
இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது.

இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

♦பாத எரிச்சல்

வெயில் காலத்தில் வயதானவர்களுக்கு பாத எரிச்சல் வருவது இயல்பு. இதற்குத் தினமும் இரவில் அரை பக்கெட் குளிர்ந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரு கைப்பிடி எப்சம் உப்பு (கெமிக்கல் கடைகளில் கிடைக்கும்), பத்து மில்லி விளக்கெண்ணெய் விட்டு, பக்கெட் நீரில் பாதங்களை கால் மணி நேரம் ஊறவிடவும். விளக்கெண்ணெய் நக இடுக்கில் சென்று, பாதத்துக்கு குளிர்ச்சி தரும்.

♦வெயில் காலம் வந்தாலே, பலருக்கு பாத எரிச்சல் வந்து விடும். குறிப்பாக நீரிழிவுக்காரர்களுக்கு❗

2 டீஸ்பூன் சிவப்பு சந்தனத்துடன், சிறிது பன்னீரும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, பாதத்தில் தடவிக் கொண்டு, கால்களை சற்று உயர்த்தி வைத்தபடி ஓய்வெடுத்தால்..
பாத எரிச்சல் குணமாகும்.

♦பாத எரிச்சல்
மருதாணி இலை,எலுமிச்சைச் சாறு.

மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்

♦சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும்...
பாத வெடிப்பு குணமாகும்.

♦பாத  எரிச்சல்  குணமாக.

சுத்தமான சந்தனப்பொடி ஒரு கிராம் அளவு எடுத்து 20 மிலி நெல்லிச்சாற்றுடன் கலந்து தொடர்ந்து குடித்து வர நீரிழிவால் வரும் பாத எரிச்சல் குணமாகும்.

♦சுத்தமான சட்டியில் எட்டிப்பழத்தை வெதுப்பி பின் அதை தரையில் கொட்டி வெது வெதுப்பான சூட்டோடு இருக்கும் பொழுது பாதத்தில் மிதித்து பின் பாதத்தை சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும்.

♦சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும், பாத வெடிப்பு குணமாகும்.

♦பாத எரிச்சல் குணமாக சுரைக்காயின் சதையை உள்ளங்காலில் வைத்துக்கட்ட 
பாத எரிச்சல் பறந்து போகும்.

#மேலும்_சில_குறிப்புகள்

அதிகாலை  எழுந்ததும்  பாதங்களை
குறைந்தது பத்து நிமிடம்  மசாஜ்
செய்துவிடுங்கள்.

வெதுவெதுப்பாக  வெண்ணீர் போட்டு   பக்கெட்டில்  ஊற்றி, அதில் பாதங்களை இருபது  நிமிடம் வைத்து இருக்கவும்.

வெண்ணீரில்  கொஞ்சம் கல்உப்பும் போட்டால்  நல்லது. இதனால் பாத
எரிச்சல்  குறையும்.

நடைப்பயிற்சிக்கு  வெளியில் செல்ல  வேண்டாம். வீட்டிற்குள்ளேயோ,  மொட்டை மாடியிலோ  எட்டு  வடிவில் இருபது நிமிடம்  நடக்கலாம்.

அப்படி  நடைப்பயிற்சி  செய்யும்
போது, சிறிய பிள்ளைகள் காரோட்டி
விளையாடுவது  போல்,
(கார் ஓட்டும் போது  ஸ்டியரிங்கை வளைப்பது போல்)கைகளை இருபுறமும் வளைக்க வேண்டும்.

முக்கியமாக வெறும்  காலில் எட்டு
போடவேண்டும். காலணிகள் சிறிது தேய்ந்து விட்டாலும் மாற்றவும்.
ஏனெனில்  செருப்புகள் பழசாகிவிட்டால்  சிலருக்கு பாதத்தில் எறிச்சலையும், அறிப்பையும் உண்டாக்கும். அப்படி  இருந்து சிரமப்படுபவர்கள் தொடர்ந்து  பாதங்களில்  இரவில் மருதாணி, மஞ்சள் தூள், எலுமிச்சை
சாறு கலந்து பூசி வந்தால் பாதத்தில்
எரிச்சல்  நீங்கும்.

⭐ #குளிர்ந்த_நீர்

பாத எரிச்சல் தீர குளிர்ச்சியான நீர், பாதங்களில் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதற்கு ஒரு அகலமான வாளியில் குளிர்ச்சியான நீரை நிரப்பி, அந்நீரில் பாதங்களை சில நிமிடங்கள் ஊற வையுங்கள்.

பின் சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் குளிர்ந்த நீரில் ஊற வையுங்கள். இப்படி ஒரு நாளைக்கு பல முறை செய்யுங்கள்.

ஆனால் ஐஸ் கட்டிகளையோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்த நீரையோ நேரடியாக பாதங்களில் பயன்படுத்தாதீர்கள்.

⭐ #ஆப்பிள்_சீடர்_வினிகர்

பாத எரிச்சல் தீர, ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் pH அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வை சரிசெய்யவும் பயன் படுத்தப்படுகிறது.

அதற்கு 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

இல்லையெனில், ஒரு வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு 2 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

⭐#மஞ்சள்

பாத எரிச்சல் தீர மஞ்சளில் உள்ள குர்குமின், உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு மற்றும் வலியைக் குறைக்க உதவும்.

அதற்கு 2 டீஸ்பூன் மஞ்சளை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, தினமும் 2 முறை குடிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, எரிச்சல் உணர்வு உள்ள பாதங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 1-2 முறை என சில நாட்கள் பின்பற்ற தீர்வு கிடைக்கும்.

⭐ #எப்சம்_உப்பு

பாத எரிச்சல் தீர எப்சம் உப்பு பாதங்களில் உள்ள எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும். எப்சம் உப்பு நரம்புகளின் செயல்பாட்டிற்கு உதவும். அதற்கு ஒரு அகலமான வாளியில் 1 1/2 கப் எப்சம் உப்பு போட்டு, வெதுவெதுப்பான நீர் ஊற்றி கலந்து, அந்நீரினுள் பாதங்களை 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில நாட்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். ஆனால் இந்த முறை சர்க்கரை நோயாளிகள், உயர் இரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்களுக்கு உகந்தது அல்ல.

⭐ #இஞ்சி

பாத எரிச்சல் தீர இஞ்சி பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வைத் தடுக்கும். ஏனெனில் இஞ்சியில் உள்ள உட்பொருட்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, உடனடி நிவாரணம் அளிக்கும்.

அதற்கு வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து கலந்து, அந்த எண்ணெயால் பாதங்கள் மற்றும் கால்களில் தடவி 10-15 நிமிடம் மசாஜ் செய்து வாருங்கள்.

⭐ #பாகற்காய்

ஆயுர்வேதத்தில் பாகற்காய் கால் எரிச்சலைப் போக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதற்கு ஒரு கையளவு பாகற்காய் இலைகளை நீர் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அந்த பேஸ்ட்டை பாதங்களில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் உணர்வு நீங்கும்.

⭐ #வைட்டமின்_B3

பாத எரிச்சல் தீர வைட்டமின் பி3 என்று அழைக்கப்படும் நியாசின், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், நரம்புகளை வலிமைப்படுத்தவும், நரம்புகளுக்கு கொடுக்கப்படும் அழுத்தத்தைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொண்டு வந்தால், பாதங்களில் ஏற்படும் எரிச்சலைத் தடுக்கலாம். இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டாலும், பாதங்களில் எரிச்சல் உணர்வை அனுபவிக்கக்கூடும்.

ஆகவே முழு தானிய பொருட்கள், பால், தயிர், பச்சை காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை மற்றும் முட்டை மஞ்சள் கரு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

⭐ #சாஜ்

பாத எரிச்சல் தீர பாதங்களுக்கு சில எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதன் மூலமும், பாதங்களில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அசௌகரியத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

பாதங்களில் மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுவும் வெதுவெதுப்பான தேங்காய், ஆலிவ் அல்லது கடுகு எண்ணெயால் பாதங்களுக்கு குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். அதுவும் இரவு தூங்கும் முன் மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment