Wednesday, 8 April 2020

பருக்களுக்கு_இயற்கை#மருத்துவம்#கைவைத்தியம்....

#பருக்களுக்கு_இயற்கை
#மருத்துவம்
#கைவைத்தியம்....

முகப்பருக்களால் அதிகம் அவஸ்தைப்படுபவர் பலர் உள்ளனர். முகப்பருக்களானது சருமத்தின் பொலீவைக்   கெடுத்துவிடும்.  முகத்தில் பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வது, மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பது, உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது, சருமத்தை சரியாக பராமரிப்பது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றை இயற்கையான முறையில் கையாளுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

#எலுமிச்சை :
எலுமிச்சை சாற்றை இரவில் படுக்கும் போது சிறிது நீரில் கலந்து, பருக்களின் மேல் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இது பருக்களில் உள்ள பஸ்ஸை நீக்கி அதில் உள்ள பாக்டீரியாவைக் கொல்ல உதவும். 

#கிரீன்டீ:
கிரீன் டீ செய்து, அதனை ஐஸ் கியூப்பில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டிகளாக்கி, பின் அதனை முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், அவை விரைவில் பருக்களை மறையச் செய்யும். இதில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாப்பதோடு பொலிவைத் தரவும் உதவும்.

#லாவெண்டர்:
லாவெண்டர் எண்ணெயை பருக்களின் மீது தடவி வந்தால் பருக்களை விரைவில் நீக்கிவிடும். ஆனால் இந்த எண்ணெயை அனைவருக்குமே நல்ல பலனைத் தரும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு இந்த எண்ணெய் அரிப்பை ஏற்படுத்தலாம். எனவே உங்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருந்தால், இதனை பயன்படுத்தலாம். இது உங்கள் மனதையும் சருமத்தையும் ரிலாக்ஸ் செய்ய உதவும்.

#முட்டை:
முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவினால், அவை முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவதோடு, பருக்கள் இருந்தாலும், அதனை விரைவில் குணமாக்கும்.

#ஆப்பிள்சைடர்வினிகர் :
ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீரில் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இதை முகத்தை கழுவியவுடன் செய்வது சருமத்தின் அமிலத்தன்மையை சரி செய்யும்.  இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் போய்விடும்

No comments:

Post a Comment