Sunday, 19 April 2020

உப்பு ஜாடியை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள்?

உங்கள் வீட்டு சமையலறையில் உப்பு ஜாடியை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள்? பிரச்சினைக்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
ஒருவருடைய வீட்டில் லட்சுமி கலாட்சியத்தை கொடுப்பது உப்பு. தினம்தோறும் சமையலுக்கு அத்தியாவசியமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உப்பு. லட்சுமி அம்சத்தில் இந்த உப்பிற்கு எப்போதுமே முதலிடம். இரண்டாவதாக வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் துடைப்பம். சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டி வைக்கும் குப்பைத்தொட்டி. ஆக உப்பு ஜாடி, துடைப்பம், குப்பைத்தொட்டி இவைகளை முறையாக எந்த இடத்தில் வைக்க வேண்டும்? என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.ஒரு சிலரது வீட்டில் இந்த மூன்று பொருட்களையும் அவர்களை அறியாமலேயே சரியான இடத்தில் வைத்திருப்பார்கள். அவர்கள் கட்டாயம் அதிர்ஷ்டசாலிகளாகத்தான் இருக்க முடியும். சிலரது வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக இந்த பொருள் மாறி மாறி இருக்கும். அப்படி இருந்தால் நிச்சயம் அந்த வீட்டில் கஷ்டம் இருக்கும் என்று  சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அப்படி எந்த இடத்தில் தான் இந்த பொருட்களை வைக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்த பதிவின் மூலம் கட்டாயம் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்!வீட்டு சமையலறையில் இருக்கும் அடுப்பை பார்த்தவாறு பெண்கள் சமையல் செய்வார்கள். நீங்கள் அடுப்புக்கு முன்னே நின்று சமைக்கும் போது, உங்களுடைய வலதுகை பக்கத்தில் உப்பு ஜாடி இருக்க வேண்டும். அதுவும் எட்டி எடுக்குமாறு இருக்கக்கூடாது. உங்கள் கைகள் தொடும் தூரத்தில் தான் இருக்க வேண்டும். உயரத்தில் இருக்குமாறு உப்பு ஜாடியை வைக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.அந்த உப்பு ஜாடியை முடிந்தவரை மாதத்திற்கு ஒருமுறை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். முடியாதவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறையாவது கழுவி சுத்தம் செய்யுங்கள். மாலை 6 மணிக்கு மேல் உப்பு ஜாடியை கழுவக் கூடாது. வெள்ளி செவ்வாய்களில் உப்பு ஜாடியை கழுவி சுத்தம் செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்ததாக குப்பைத் தொட்டியும் துடைப்பமும் ஒரு வீட்டில் தலை வாசலுக்கு நேராக இருக்கக்கூடாது. தலைவாசல் கதவுக்கு பின்பக்கமும் குப்பைத் தொட்டி, துடைப்பத்தை வைக்கக்கூடாது. வெளியில் சிட்அவுட் என்று சொல்லப்படும் வராண்டா இருந்தால், அங்கும் குப்பை தொட்டியை வைக்கக்கூடாது.உங்கள் வீட்டில் இருக்கும் எந்த ஒரு அறையிலும், வடக்கு திசையில் குப்பைத் தொட்டியை வைக்காதீர்கள். இதேபோல் வடக்கும் கிழக்கும் சேர்ந்த பகுதி ஈசானிய மூலை என்று சொல்லப்படும். அந்த வடகிழக்கு மூலையில் கட்டாயம் குப்பைத் தொட்டியும் துடைப்பமும் இருக்கக்கூடாது என்பதை மறந்து விடாதீர்கள். சில பேரது வீட்டில் கட்டிலுக்கு அடியில், கதவுக்கு பின்பக்கம் போன்ற இடத்தில் துடைப்பத்தை வைத்திருப்பார்கள். அந்த இடத்திலும் துடைப்பத்தை வைக்காதீர்கள். இதுவரை தவறான இடங்களில் இந்த மூன்று பொருட்களை வைத்திருந்தால் இனி மாற்றித்தான் பாருங்களேன்! உங்கள் வீட்டில் ஏற்படக்கூடிய மாற்றங்களை உங்களால் கட்டாயம் உணர முடியும்.

No comments:

Post a Comment