Saturday, 18 April 2020

படங்களாக கொண்ட ராசிகள்

ஊர்வன,பல கால் கொண்டவை படங்களாக கொண்ட ராசிகள் மேசம்,ரிசபம், கடகம்,சிம்மம் ,விருச்சிகம்,ஆடு,மாடு,சிங்கம்,நண்டு,தேள் இவை ஊர்ந்துகொண்டே இருக்கும் நகர்ந்து கொண்டே இருக்கும்..ஒரிடத்தில் இருக்காது.அதனால்தான் அந்த படம்.அதாவது கடகம்,விருச்சிகம் ராசியினர் எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள்..ஏதேனும் ஒரு வேலையை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வதில் அலாதி இன்பம்.

.சிவனேன்னு இவர்களால் இருக்க முடியாது.. முடங்கி கிடந்தா சிலந்தியே உன்னை சுற்றி வீடு கடும்.எழுந்து நடந்தா இமயமலையே உனக்கு தலை வணங்கும் என தத்துவம் சொல்லிக்கொண்டு போய்ட்டே இருப்பாங்க.இதில் பலரை வீட்ல பிடிக்க முடியாது போன்ல தான் பிடிக்க முடியும்.முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும் என்பது இவர்கள் தாரக மந்திரம்.திரும்ப திரும்ப பேசற நீ என்பது போல திரும்ப திரும்ப முயற்சி செய்து ஏதேனும் காரியத்தில் வெற்றி பெறுவர்.தன் வீட்ல அரிசி இருக்கோ இல்லையோ அடுத்த வீட்ல பட்னின்னா துடிச்சு போயிடுவாங்க.

ஊர் பொது காரியங்கள் ,சமூக சேவை ,போராளிகள் என இவர்கள் செயல்பட்டுக்கொண்டே இருப்பார்கள் நல்ல பெயர் என்பதை விட கெட்ட பெயர் அதிகம் என்றாலும் அலட்டிக்கொள்வதில்லை..கெட்ட பெயர் வந்தாலும் தேளோட குணம் கொட்றது என்னோட குணம் காப்பாத்துறதுன்னு பஞ்ச் பேசுவாங்க.நண்பர்களால் உறவுகளாலும் நிறைய இழப்பு உண்டானாலும் இவர்கள் புன்னகையும் உற்சாகமும் தன்னம்பிக்கையும் குறையாது.மனிதர்களை அதிகம் நேசிப்பவர்கள்  இந்த ராசிகளில்  பிறக்கிறார்கள்

No comments:

Post a Comment