Thursday, 9 April 2020

செல்வச் செழிப்போடு வாழ வீடு கட்டும் நிலத்தை வாஸ்து பார்த்து வாங்குங்க




செல்வச் செழிப்போடு வாழ வீடு கட்டும் நிலத்தை வாஸ்து பார்த்து வாங்குங்க


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். மனைவி மட்டுமல்ல, மனைவியுடன் சேர்ந்து வாழப்போகும் வீடு, மனை அமைவதும்கூட இறைவன் கொடுத்த வரம்தான். திருமணத்திற்கு மனைவியை தேடும் போது கவனமாக இருப்பது போல மனை வாங்கும் போது கவனமாக வாங்கினால் நல்ல பலன்களை அடையலாம்.


நாம் வாங்கி வீடு கட்டப்போகும் நிலமானது தெற்கே உயர்ந்து வடக்கே பள்ளமாக இருக்கவேண்டும். இதைப் போலவே மேற்கு உயர்ந்து, கிழக்கு பள்ளமாக இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நைருதியம் உயர்ந்து ஈசான்யம் பள்ளமாக இருப்பது தனிச்சிறப்பு கொண்ட மனையாக அமையும்.


Vastu Advice For The Selection Of The Plot
மாறாக, கிழக்கு உயர்ந்து மேற்கு சரிவாக இருந்தால், குடும்பத் தலைவனை பலவீனப்படுத்துவதுடன் பொருளாதாரச் சீரழிவைத் தரும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

சதுர வடிவில் இருக்கும் மனை முதல் தரமானது. செவ்வக வடிவ மனையில் வீடு கட்டினாலும் நல்ல பலன் கிடைக்கும். வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் எழுப்பும் பகுதியை முடிந்த வரை செவ்வகமாக அல்லது சதுரமாக மாற்றிக் கொள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை காலியிடமாக விட்டு விடலாம்.

சாலை அமைப்பு

மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் சாலை அமைப்புள்ள மூலை மனை, ஈசான்ய மனை எனப்படும். இது அனைத்துச் சிறப்புகளும் கொண்ட நிலம் ஈஸ்வர அம்சமுள்ளவை. குபேர சம்பத்து தரும் மனைகளாகும். வீட்டு மனை அமைந்துள்ள இடத்துக்கு கிழக்கே சாலை அமைப்பு இருந்தால் இத்தகைய மனைகளை கிழக்கு மனைகள். இந்த வீட்டு மனைகளும் சிறந்தவை. வெற்றி தரக்கூடியவை. இந்திரனைப் போன்ற வாழ்வை அமைத்துத் தருபவை.


மனைக்கு வடக்கே சாலை அமைப்பு கொண்ட மனை வடக்கு மனை எனப்படும். இதை குபேர மனை என்றும் அழைப்பார்கள். சகல ஐஸ்வர்யங்களையும் இந்த மனைகள் தரக்கூடியவை. கிழக்கிலும், தெற்கிலும் சாலை அமைப்பு கொண்ட அக்கினி பகவானின் தனித்தன்மை கொண்ட மனைகளில் வீடு கட்டிக் குடி இருப்பதை விட கடைகள் கட்டலாம். வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு இவை ஏற்றவை.


Vastu Advice For The Selection Of The Plot

தெருக்குத்து நல்லதா

உச்ச ஸ்தானத்தில் ஏற்படக் கூடிய தெருக்குத்து நன்மையை தரும். நீச்ச ஸ்தானத்தில் மீது ஏற்படும் தெரு குத்து கெடுதியை தரும்

வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு திசையின் மீது ஏற்பட கூடிய தெரு குத்து நன்மையை செய்யும். அதுவே வடமேற்கு திசையில் தெருக்குத்து ஏற்பட்டால் அது கெடுதியை தரும்.கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் அது கெடுதியை செய்யாது. அதுவே தென் கிழக்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் அதனால் கெடுபலன்கள் ஏற்படும்.


தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் ஏற்பட கூடி தெரு குத்து கெடுதியை செய்யாது. அதுவே தென்மேற்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் கடுமையான பாதிப்பை தரும். மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுதியை செய்யாது அதுவே தென்மேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுபலனை உண்டாக்கும்.

மனை கர்ப்பம்

வீட்டின் நீளத்தையும் அகலத்தையும் பெருக்கி வரும் தொகையை மீண்டும் ஒன்பதால் பெருக்க வேண்டும். அந்த தொகையை எட்டால் வகுத்து வரும் மீதியை கொண்டு வீட்டின் வாஸ்து பலன் அறியலாம். மீதி பூஜ்யம் வந்தால் காக்கை கர்ப்பம். அதன் வீட்டில் உள்ளவர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.



மீதி ஒன்று வந்தால் அது த்வஜ கர்ப்பம். வீட்டில் செல்வம் செழித்தோங்கும். மீதி இரண்டு வந்தால் அதற்கு பெயர் தூம கர்ப்பம், வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். மீதி மூன்று வந்தால் சிம்ம கர்ப்பம். நோய்கள் அண்டாது ,செல்வம் விரைவாக சேரும். நான்கு வந்தால் நாய் கர்ப்பம். குடும்பத்தில் அனைவரும் வியாதியால் பாதிக்கபடுவார்கள்.

ஐந்து வந்தால் அதற்கு பெயர் விருஷப கர்ப்பம். வாழ்க்கையில் முன்னேற கடுமையாக போராட வேண்டி இருக்கும். ஆறு வந்தால் அதற்கு பெயர் கழுதை கர்ப்பம். வீட்டில் ஏதாவது கவலை வந்து கொண்டே இருக்கும். பணம் சம்பாதிக்க படாத பாடு பட வேண்டி இருக்கும். மீதி ஏழு வந்தால் அதற்கு பெயர் யானை கர்ப்பம் சொகுசான வாழ்கை கிடைக்கும்.




No comments:

Post a Comment