ஒரு ஜாதகம் ஆண் ஜாதகமா அல்லது பெண் ஜாதகமா ?
1. ஜாதகத்தில் லக்கினம் கண்டுபிடித்து அது ஒற்றை ராசி லக்கினமா ? இரட்டை ராசி லக்கினமா என்பதை அறியவேண்டும் .
2. ராசிகளில் ஒற்றை ராசிகள் இரட்டை ராசிகள் என்று இரு வகை உண்டு ..
முதலில்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகியவை ஒற்றை ராசிகள் ஆகும்.
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகியவை இரட்டை ராசிகள் ஆகும்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் லக்கினம் அமைந்து லக்னம் 15டிகிரிக்குள் அமர்ந்திருந்தால் அது ஆணுக்குரிய ஜாதகம் என்றும்,
இரட்டை இராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் லக்கினம் அமைந்து லக்னம் 15டிகிரிக்கு மேல் அமர்ந்திருந்தாலும் ஆணுக்குரிய ஜாதகம் ஆகும்.
ஒரு பெண்ணினுடைய ஜாதகம்
இரட்டை இராசிகளான ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் லக்கினம் அமைந்து லக்னம் 15டிகிரிக்குள் அமர்ந்திருந்தால் அது பெண்ணினுடைய ஜாதகம்
ஒற்றை ராசிகள் என்று அறியப்படுவது மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய இராசிகளில் எதாவது ஒன்றில் லக்கினம் அமைந்து லக்னம் 15டிகிரிக்கு மேல் அமர்ந்திருந்தாலும் பெண்ணுக்குரிய ஜாதகம் ஆகும்.
No comments:
Post a Comment