Thursday 9 April 2020

HCQ - வும் சித்த மருத்துவமும்

HCQ - வும் சித்த மருத்துவமும்:

இன்று, உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் COVID-19 என்ற நோய்க்கு சரியான மருந்துகள் இல்லாத நிலையில், Hydroxychloroquine என்ற மருந்து மருத்துவ உலகின் ஒளிவிலக்காய் திகழ்கின்றது. சில ஆய்வுகளுக்கு பின்னர்,  இது, SARS CoV-2(Corona virus)- வினால் ஏற்படும் குறிகுணங்களையும், Virus உள் நுழைந்த பின் அதன் பெருகும் தன்மையையும்(multiplication) மேலும், இது viral load- ai குறைப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

யார் இந்த hydroxychloroquine?..... இதன் வரலாறு என்ன?..... ஏன் இதை 30க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிடம் கேட்கின்றன?....

1638 ஆம் ஆண்டில் பெரு (Peru) நாட்டின் Viceroy மனைவி Countess Cinchona என்பவர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்த போது அங்கீகரிக்கப்பட்ட" சிகிச்சையைப் பெறுவதற்குப் பதிலாக,  ஒரு இன்கான் (Inca-South American tribes) மூலிகை நிபுணரால் ஒரு மரத்தின் பட்டை மூலம் சிகிச்சை பெற்றார். முழுமையாக குணமும் அடைந்தார். (இதனாலேயே அந்த மரத்திற்கு Countess Cinchona என்று பெயரிடப்பட்டது). 

இந்த Countess Cinchona மரத்தின் பட்டையிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஒரு வேதிப்பொருள் தான்  quinine என்பது, இதை இந்த பட்டைகளிலிருந்து தனிமைப்படுத்தப்படுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆனது. 1940 களில், தான் quinine அல்லது அதன் வழித்தோன்றல் Chloroquine, அதன் மலேரியா எதிர்ப்பு பண்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டில், Hydroxylation வழியாக இந்த கலவையை மாற்றியமைப்பது Hydroxychloroquine (HCQ) இன் வளர்ச்சிக்கு வழிவகுத்தது, இது குறைந்த நச்சுத்தன்மையுள்ளதாகக் கண்டறியப்பட்டதால், எந்த மாற்றமும் இல்லாமல், இன்றுவரை பயன்பாட்டில் உள்ளது..

இந்த Cinchona மரமானது Rubiaceae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதில் அநேக சிற்றினங்கள் உண்டு. Quinine என்ற வேதிப்பொருள் அனைத்து Cinchona வகை பேரினத்திலும் கிடைக்கும்.
நீலகிரி மலை பகுதிகளில் அதிகம் கிடைக்கும் இதனை, கொய்னா மரம் என்று அழைப்பர்.

இது அநேக நாடுகளில் கிடைத்தாலும், இந்தியா, ஜாவா போன்ற சில நாடுகளில் மட்டுமே அதை இதற்காக பயிரிடுகின்றனர். மத்திய அமெரிக்கா, ஜமைக்கா, பிரெஞ்சு பாலினீசியா, சுலவேசி, தென் அட்லாண்டிக்கில் உள்ள செயிண்ட் ஹெலினா, மற்றும் வெப்பமண்டல ஆப்பிரிக்காவின் கடற்கரையில் சாவோ டோமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகளில் ஒரு சில இனங்கள் இயற்கையாக்கப்பட்டதாக (Naturalized) கூறப்படுகிறது.

இது போன்ற 1000க்கும் மேற்பட்ட மருத்துவ வேதிப்பொருட்கள், Hydroxychloroquine போன்று உலகின் ஏதோ ஒரு பாரம்பரிய மருத்துவ முறையில் பயன்படுத்தப்பட்ட மூலிகை அல்லது அதை சார்ந்த பொருட்களிலிருந்து தான் பெறப்பட்டவை என்பது மறுக்க முடியாத உண்மை.
Sathyarajeswaran Parameswaran (https://m.facebook.com/story.php?story_fbid=10219632466475010&id=1616765668)  தன் பதிவில் குறிப்பிட்டது போல, பாரம்பரிய மருத்துவ முறைகளில் அதிக குறைபாடுகள் உள்ளது, அது அங்கீகரிக்க படாதது என்று கூகுரலிட்டு கொண்டே, மறுபக்கம் அதன் பின்புலத்தை நோட்டமிடும் ஓர் உலக அரசியல். 
ஒருகாலத்தில், நிலவேம்பு வை ஏற்க மறுத்த சமூகம், இன்று அதை மதிக்கிறது. நாளை, கப சுர குடிநீர்க்கும் அதன் மதிப்பு தொடரும்.
ஆனால், இதுபோன்ற எத்தனை தீர்வுகள் பாரம்பரிய / சித்த மருத்துவம் கொடுத்தாலும், அதை பெரும்பாலானோர் அங்கீகரிக்க மறுக்கின்றனர், கேட்டால், ஆய்வுகள் இல்லை, அங்கீகாரம் இல்லை என்பது அவர்கள் வாதம், இதையும் தாண்டி, மூடநம்பிக்கை என்னும் சமூகமும் உண்டு.


No comments:

Post a Comment