Friday 1 May 2020

அக்னி நட்சத்திரம் வரப்போகிறது. தோஷமானது உங்களை தாக்காமல் இருக்க, தினந்தோறும் உங்கள் வீட்டில் கட்டாயம் இத செஞ்சுடுங்க

அக்னி நட்சத்திரம் வரப்போகிறது என்றால் எல்லோருடைய மனதிலும் ஒருவிதமான பயம் ஏற்பட்டு விடும். இதற்கு காரணம் சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தை எப்படி தாங்கப் போகிறோமோ? என்ற கவலைதான். இந்த வருடம் அக்னி நட்சத்திரமானது மே 4-ம் தேதி தொடங்கி, மே 28-ஆம் தேதி வரை வரவிருக்கிறது. இந்த நாட்களில் எந்த விதமான பாதிப்பும் நம்மை நெருங்காமல், இருக்க ஆன்மீக ரீதியாக என்ன செய்வது என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த அக்னி நட்சத்திர காலத்தில் உடல் மிகவும் சூடாக ஆரம்பித்துவிடும். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நம்மை விடாமல் பிடித்துக் கொள்ளும். சூட்டு கொப்பளம், கட்டி, வயிற்றுவலி வியர்க்குரு, வியர்வை போன்ற எல்லா வகையான பிரச்சனையில் இருந்தும் நம்மால் தப்பிக்க முடியாது. முடிந்தவரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் போடுவதும் மிக மிக அவசியம். அதிலும் குறிப்பாக நல்லெண்ணெய் குளியல் போட்டால் பல விதமான நோய் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். முடிந்தவரை தண்ணீர் பருகி கொண்டே இருக்கவேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்திருக்க கூடிய விஷயமாக இருந்தாலும், நினைவு கூறுவதற்காக தருணமிது. - Advertisement - அடுத்ததாக, இன்றைய சூழ்நிலையில் நம்மை சுற்றி இருக்கும் பிரச்சனைகளும் நோய்த்தொற்றும் மிகமிக அதிகமாக உள்ளது. அவை அனைத்தும் இந்த அக்னி நட்சத்திர கால கட்டத்தில் எப்படி மாறப்போகிறது என்பதை நம்மால் அறிய முடியாது. எது எப்படியாக இருந்தாலும், ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு சின்ன குறிப்பை நாம் எல்லோரும் பின்பற்றுவது நல்லது. அது என்ன குறிப்பு? என்பதை பின்வருமாறு தெரிந்துகொள்ளலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு குடத்தில் தண்ணீரை வைத்து, அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து வைத்துவிடுங்கள். கட்டாயம் அந்த குடத்தில் தண்ணீர் குறைவாக இருக்கக்கூடாது. நிறைகுடமாக வைக்கவேண்டும். அக்னி நட்சத்திரம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாளே உங்கள் வீட்டு பூஜை அறையில் இதை வைத்து விடுங்கள். மறுநாள் காலை அந்த தண்ணீரை எடுத்துக்கொண்டு போய், உங்கள் வீட்டு வாசலில் தெளித்து கோலமிடுங்கள். - Advertisement - அதன் பின்பு மறுபடியும் ஒரு நிறை குடம் தண்ணீரை ஊற்றி, மஞ்சள் தூளை கலந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். ஒரு நாள் முழுவதும் அந்த தண்ணீர் உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்கட்டும். மறுநாள் காலை மீண்டும் வாசல் தெளிக்க அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களால் இதை செய்ய முடியாவிட்டால் ஒரு சின்ன பாத்திரத்திலாவது மஞ்சள் தண்ணீரை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு, அதன் பின்பு, அந்த தண்ணீரை நீங்கள் வாசல் தெளிக்கும் தண்ணீரில் கலந்து தெளித்து விடுங்கள். உங்களையும் உங்கள் வீட்டையும் அக்னி நட்சத்திர தோஷம் பாதிக்காமல் இருக்க, இது மிகவும் பாதுகாப்பாக இருக்கும். அதாவது, உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் தண்ணீர் இல்லாமல் இருக்கவே கூடாது. அக்னி நட்சத்திரம் முடியும் வரை இதை மட்டும் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண குறிப்பு போல் தெரிந்தாலும், இதில் அடங்கியிருக்கும் ரகசியம் மிகப் பெரியது. பிரச்சினைகளுக்கு சுலபமான தீர்வை கொடுக்கும் இந்த முறையை பின்பற்றி இந்த அக்னி நட்சத்திரத்தை எந்த வித பாதிப்பும் இல்லாமல் கடப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment