Wednesday, 27 May 2020

காரசாரமான உணவை சாப்பிடும்போது மூக்கிலிருந்து தண்ணீர் ஊற்றுவதற்கு என்ன காரணம் தெரியுமா..?

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகு தான் உலகிலேயே காரமான உணவுப் பொருள் என கின்னஸில் இடம் பெற்றுள்ளது என்றால் ஆச்சரியத்திற்கு இல்லை. அப்படி இந்த காரமான உணவுகளை சாப்பிட்டால் , காரம் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் உடனே மூக்கிலிருந்து தண்ணீர் கொட்டோ கொட்டென கொட்டும்.

Advertisement

இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

அதாவது மிளகாய் போன்ற காரமான தாவர வகைகளில் கேப்சைசின் (capsaicin) என்கிற வேதிப்பொருள் உற்பத்தியாகிறது. அதுதான் உடல் திசுக்களில் எரிச்சலை தூண்டி மூக்கின் வழியாக தண்ணீரை வெளியேற்றுகின்றன.

ரகுல் பிரீத் சிங் வீட்டில் ’டார்க் சாக்லெட் கேக்’ செஞ்சு பாத்திருக்காங்க..! நீங்களும் டிரை பண்றீங்களா..?

அதேபோல் அல்லில் ஐசோதியோசயனேட் (allyl isothiocyanate) என்கிற எண்ணெய் வேதிப்பொருளும் காரமான உணவுப் பொருட்களில் இருக்கின்றன. அதாவது கடுகு போன்ற பொருளில் இவை உற்பத்தியாகின்றன. இதுவும் காரத்தன்மைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

இப்படி காரத்தை தூண்டுகின்ற கேப்சைசின் மற்றும் அல்லில் ஐசோதியோசயனேட் மூக்கின் சளி சவ்வுகளை எரிச்சலூட்டுகிறது. எரிச்சலை சரி செய்ய சளி சவ்வுகள் வெளியிடும் நீரே மூக்கில் வெளியேறுகிறது.

காரத்தை குறைக்க என்ன வழி ?

உண்மையில் காரமான உணவை சாப்பிட்டால் நாம் உடனே தண்ணீர் குடிப்போம். ஆனால் தண்ணீருக்கு காரத்தை குறைக்கும் தன்மைக் குறைவு. எனவே தண்ணீரைக் காட்டிலும் பால் அல்லது தயிர் குடிக்கலாம். ஏனெனில் பாலில் இருக்கும் கேசீன் என்னும் புரதம் கேப்சைசினை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஒருவேளை பால் இல்லை என்றாலும் ஒரு ஸ்பூன் சர்க்கரை சாப்பிடுவதாலும் காரத்தை குறைக்கலாம்

No comments:

Post a Comment