Thursday, 7 May 2020

நித்தியகல்யாணி

இவ்ளோ நாள் இந்த பூவ நாம கண்டுக்கவே இல்ல... ஆனா இதுக்குள்ள என்னென்ன அற்புதமெல்லாம் இருக்கு தெரியுமா?
``~`` 🌺🌸  #நித்தியகல்யாணி  🌺🌸 ``~``
பொதுவாக உலகிலுள்ள எல்லா செடிகளும், காய்களும், பூக்களும் ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக நாம் அனைவரும் விரும்பும் ரோஜா பூக்கள். இவை ஒரு குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே கிடைக்கும். உலகிலுள்ள பெரும்பாலான தாவரங்களுக்கு இந்த விதி பொருந்தும். நித்திய கல்யாணி செடியோ எல்லா காலங்களிலும், எல்லா தட்ப வெட்பத்திலும் வளரும். இதன் அழகிய பூக்கள் அனுதினமும் பூத்துக் குலுங்குவதாலேயே இதற்கு நித்ய கல்யாணி என்ற பெயர் ஏற்பட்டது. "நித்ய(ம்) என்றால் தினமும் என்று பொருள், "கல்யாணி" என்றால் மலர்தல் என்ற பொருளைக் குறிக்கும்.

#நித்தியகல்யாணி என்று அழைக்கப்படும் இந்த மலரைப்பற்றிய உண்மைகளையும், அருமருந்தாகிய இதன் தன்மைகளையும் நாம் இக்கட்டுரையில் காணலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த நித்ய கல்யாணியின் தாவரவியல் பெயர் காதரென்தஸ் ரோளியஸ்.

#வகைகள்: இத்தாவரத்தில் இரண்டு வகைகள் உள்ளதாக பெரிதும் அறியப்படுகின்றது. இத்தாவரவினம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இதன் இலைகள் நீள்வட்ட வடிவமாகவும் மேல்பகுதி மிகவும் பளபளப்பாகவும் இருக்கும்.

வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் இப்பூக்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. வின்கா ரோஸா என ஸ்பானிய மொழியிலும், பூட்டிகா என வெணிசுலாவிலும், டெரசிடா என மெக்சிகோவிலும் அழைக்கப்படுகின்றது.

#மருத்துவ_குணங்கள்: பல மருத்துவ குணங்கள் கொண்ட இதனை மலேசியர்கள் போகேக் "ரெம்புட் ஜலாங்" என்றும் "கெகுதிங் சினா" எனவும் பல்வேறு பெயர்களில் அழைப்பர். பிலிப்பைன்ஸ் நாட்டில் இதனை சிட்சிரிக்கா எனவும், வியட்நாம் நாட்டில் ஹவா ஹாய் டாங் எனவும் அழைப்பர். பாரம்பரிய மருத்துவத்தில் தன்னிகரற்ற நாடான சீனாவில் இதனை "ச்சாங் சுன் ஹூவா" என அழைப்பர். பட்டிப்பூ என அழைக்கப்படும் இந்த மூலிகைத் தாவரத்திற்கு சீன மருத்துவத்தில் மிகப்பெரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இம்மலர் அழகுக்காகவும், தோட்டத்திற்காகவும் மட்டுமின்றி இதன் மகத்தான மருத்துவ குணங்களுக்காகவும் பெரிதும் பயிரிடப்படுகின்றது. தேவாமிர்தத்தை ஒத்த தேவமலர் என்று கொண்டாடப்படும் அளவிற்கு பல்வேறு அமிர்தகுணங்களைக் கொண்டது, இரண்டரை சென்டிமீட்டர் விட்டமுள்ள இந்த சின்னஞ்சிறு மலர். இது புற்று நோய்க்கான அருமருந்தாகும். இதன் மருத்துவதன்மை ஆஸ்துமா, குளிர் ஜுரம், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய் (இது ஒரு நோயே அல்ல) உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு நோய்கள் நோய்களை விரட்டுவது மட்டுமின்றி பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது கண்கண்ட மருந்து. மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் அமுதம். அதுமட்டுமன்று, இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் நீக்கும் அமிர்த மருந்தாகும்.

#மார்பகப்_புற்றுநோய்: பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது. இவற்றிற்கு ஆங்கில மருத்துவத்தில் பல்வேறு கண்டறியும் முறைகள் உள்ளன. இந்த வகை புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நமது நித்தியகல்யாணியைக் கொண்டு நோயைக் கட்டுப்படுத்தலாம். முதலில் இதற்கு நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும்.செய்முறை: நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைபடும் பதத்திற்கு வந்த பிறகு அதனை பொடி செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியிலிருந்து ஆறு கிராம் முதல் பதினைந்து கிராம் வரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை 400 மில்லி சுத்தமான நீரிலிட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைக்க வேண்டும்.இந்த குடிநீரை கஷாயம் என்று அழைக்கலாம் அல்லது டானிக் என்றும் அழைக்கலாம். தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.

#கருப்பை_புற்றுநோய்: கருப்பை புற்றுநோய் தற்காலத்தில் பெண்களின் பெரும்பாலானவர்களுக்கு எளிதில் பற்றும் நோயாக இருக்கின்றது. இவ்வகை புற்று உண்டாவதற்கு பலவகை காரணிகள் கூறப்படுகின்றன. பெரும்பாலும் இவ்வகை புற்று நோய்கள் வந்தால் கருப்பையை அகற்றி விடுவதையே நிரந்தர தீர்வாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை பாரம்பரிய வைத்தியமான நித்திய கல்யாணியின் துணை கொண்டு முழுபலன் பெற முடியும்.பதினைந்து கிராம் அளவுள்ள நித்தியகல்யாணிப்பூக்கள் மற்றும் அறுநூறு மில்லி லிட்டர் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனை வடிகட்டி ஒரு வேலைக்கு 100 மில்லி வரை குடிக்க வேண்டும். இதனை தினமும் நாள் தவறாமல் மூன்று வேளையும் நோய் தீரும் வரை குணமாகும் வரை குடிக்க வேண்டும்.

#நிலையில்லா_மாதவிடாய்: மாதவிடாய் என்று உலகின் எல்லா பெண்களுக்கு நிகழும் ஒரு மாதாந்திர சுழற்சியாகும். இது பொதுவாக மாதமொருமுறை நிகழும். இவ்வாறு காலம் தவறாமல் நிகழ்வது நாம் ஆரோக்கியமாக இருக்கின்றோம் என்பதை உறுதிபடுத்துகின்றது. இவ்வாறு மாதந்தவறாமல் நிகழும் மாதவிடாய் நாட்கள் தவறி நடக்க ஆரம்பிப்பது ஆபத்தின் அறிகுறியாகும். பொதுவாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் இந்த சுழற்சி 20 நாட்களோ அல்லது முப்பத்தைந்து முதல் நாற்பத்தைந்து நாட்களோ ஆனால் இது "நிலையற்ற மாதவிடாய்" என்று அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நிகழும் முறையற்ற மாத விடாய் கோளாறுகளை முழுவதுமாக நீக்க நித்திய கல்யாணி என்னும் பேரமுதத்தை பயன்படுத்தலாம்.

நித்திய கல்யாணியின் வேரை இருபது கிராம் அளவிற்கு எடுத்து சுத்தப்படுத்தி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த குடிநீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். இதை காலை மாலை இருவேளை 40 மில்லி முதல் 100 மில்லி வரை நோயின் தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது மாதவிடாய் சுழற்சி நேர்த்தியாகிவிடும்.

#இரத்த_சோகை: இதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட வியாதிதான். மற்றவர்களுக்கும் (ஆண்களுக்கும்) வருமென்றாலும் பிரசவித்த தாய்மார்களுக்கே அதிகம் வரும் ஒரு சத்துக்குறைவு நோயாகும். இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் அளவில் குறைந்து உடலின் பிற பகுதிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கொண்டு செல்ல இயலாமல் போய்விடும். இதனால் உடல் சோர்வு மயக்கம், முதலியவை ஏற்படும். பெண்களின் பிரசவத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினாலும் இந்த நோய் ஏற்படும்.

இந்த நோயை முழுவதுமாக குணப்படுத்த நித்தியகல்யாணியின் நான்கு பூக்களை ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும். இதனை ஓர் இரவு காற்றோட்டமாக வைத்துவிட வேண்டும். காலையில் இதனை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு மாதம் குடித்த பின்னர் இரத்தத்தை பரிசோதனை செய்து பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் தேவைக்கேற்றபடி இதனை தொடரலாம்.ஓர் எச்சரிக்கை:-கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.ஷ....ரு🐝🐝 

#நீரிழிவு: இன்றைய தேதியில் உலகின் மிகப்பெரிய நோயாளிகள் குழாம் என்பது இந்த நீரிழிவு நோயாளிகள் தான். இந்தியாவில் பத்தில் ஒருவருக்கு நீரழிவு நோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சொல்லப்போனால் இது ஒரு நோயே அல்ல, உடலில் ஏற்படும் மாற்றங்களே. இரத்த சர்க்கரையின் அளவு உச்சமாக இருக்க அதனால் உடலில் ஏற்படும் விளைவுகளே நீரிழிவு நோயாகும். கணையத்தின் சுரப்பாகும் இன்சுலின் உடலுக்கு போதுமானதாக இல்லாமல் போவது தான் நீரிழிவு நோயாகும்.இந்த நீரழிவு நோய்க்கு நித்தியகல்யாணியை சிறந்த மருந்தாக கொள்ளலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது.

நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன், அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும். இன்னொரு முறையில் இந்த நித்தியகல்யாணியின் 15 அல்லது 16 இலைகளை மட்டுமே கொதிக்க வைத்து, நீர் பாதியாக சுண்டியவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை இருவேளையும் நாள் தவறாமல் பருகவேண்டும்.

#இரத்த_புற்றுநோய்: இரத்த புற்று நோய் என்பது இரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் ஒரு சிதை மாற்றமேயாகும். இவை பொதுவாக இரத்த வெள்ளையணுக்களின் அசாதாரண பெருக்கத்தால் அறியப்படுகின்றது.

இந்த புற்று நோயை நித்திய கல்யாணி இலையைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்தால் குணப்படுத்த இயலும். நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

#ஆஸ்த்துமா: இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியினால் ஏற்படும் நோயாகும். இதனால் மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாகும். சுவாசக் குழாய்களை சுற்றியிருக்கும் தசைகள் தடித்தும், நுரையீரல் தசைகளில் ஏற்படும் வீக்கம் இவைகளே ஆஸ்துமா எனப்படுகின்றது. இந்நோயின் காரணமாக ஆண்டொன்றுக்கு இரண்டரை முதல் மூன்று லட்சம் பேர் வரை இறக்கிறார்கள. 2005ஆம் ஆண்டில் இந்நோயின் பாதிப்பு நூறு மில்லியன் பேர்களை தாண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

#விஷஜுரம்: மிகக் கடுமையான நாட்பட்ட காய்ச்சலை குணமாக்கக்கூடியது இந்த நித்தியகல்யாணி. நித்தியகல்யாணியின் இலைகள் ஒரு கைப்பிடி அளவும், மூன்று துண்டுகள் தண்டும், வேர்களும் என அனைத்தையும் நீரிலிட்டு (நானூறு மில்லி) நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

#மனநோய்கள்🐝🐝 அல்சீமர் என்று அழைக்கப்படுகின்ற நினைவு இழப்பு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக பயன்படுகின்றது. இந்நோயைக் கட்டுப்படுத்த நித்திய கல்யாணியின் வேரை ஒரு துண்டு எடுத்து நானூறு மில்லி நீரிலிட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். அந்த மருந்து பாதியாக சுண்டி வந்தவுடன் அதனை ஆறவிட வேண்டும். பின்னர் தேவையான சர்க்கரை அல்லது தேனை சேர்த்து இருபது மில்லி லிட்டர் வரை காலை மாலை இருவேளை பருகவேண்டும்.

என்றும் ஆரோக்கியம் நிறைந்த தகவல்கள்...

No comments:

Post a Comment