Tuesday, 16 June 2020

3 நாட்கள் போதும்: தொப்பையை குறைத்து விடலாமே

3 நாட்கள் போதும்: தொப்பையை குறைத்து விடலாமே
3 நாட்கள் போதும்: தொப்பையை குறைத்து விடலாமே

தொப்பை வர அன்றாடம் நாம் சாப்பிடும் உணவு முறைகள் ஒரு காரணமாக இருந்தாலும், வேலை செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது தான் முக்கிய காரணமாகும்.

எனவே இயற்கையான முறையில் தொப்பையை குறைக்க அற்புதமான வழி இதோ!

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் - 1

எலுமிச்சை - 5

புதினா இலைகள் - 15

துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 2.5 லிட்டர்

செய்முறை

வெள்ளரிக்காய் மற்றும் 2 எலுமிச்சையை வட்டமாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மீதமுள்ள 3 எலுமிச்சையை ஒரு பாத்திரத்தில் பிழிந்து, அதில் நறுக்கிய புதினா, 1.5 லிட்டர் நீர் ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

அதன் பின் அதில் இஞ்சி மற்றும் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெள்ளரிக்காய், எலுமிச்சங்காய் போட்டு நன்றாக கிளறி, அதை 24 மணிநேரம் ஊற வைத்தால், பானம் தயார்.

குடிக்கும் முறை

இந்த பானத்தை ஒவ்வொரு நாளும் செய்து தொடர்ந்து 3 நாட்கள் குடித்து வந்தால், வேகமாக தொப்பை குறைவதைக் காணலாம்.

நன்மைகள்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு என்பதால் இது உடலின் அல்கலைன் அளவை சீராக்கி, வயிற்றில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது.

எலுமிச்சை பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்துவதுடன், உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றுகிறது

புதினா இலையானது, உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்தி, வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.

இஞ்சியானது நமது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்கள் உடலில் சேர்வதை தடுக்கிறது.

தண்ணீர் உடலின் நீர்ச்சத்தை அதிகரிப்பதோடு, உணவின் மீதுள்ள நாட்டத்தைக் குறைக்கிறது. மேலும் இது உடற்பயிற்சியின் போது தசை மற்றும் மூட்டுகளில் தோய்வு ஏற்படாமல் தடுக்கிறது.

குறிப்பு

தொப்பை அதிகமாக இருப்பவர்கள் இந்த ஜூஸை தினமும் உடற்பயிற்சியுடன் குடித்து வந்தால், தொப்பை குறைந்து கொண்டே வருவதை காணலாம்.
 

தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது?
தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது? - இயற்கை மருத்துவம்
இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.
நாம் சமையலில் சேர்க்கும் பொருட்கள் சிலவன இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும். இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
பூண்டின் மருத்துவ குணம் :-
உடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது. அதிலும் முக்கியமாக பூண்டு நமது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக கரைக்கும் தன்மை கொண்டுள்ளது.
பசியை கட்டுப்படுத்தும் :-
உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.
லெப்டின் :-
லெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம். பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு செல்கள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
நோரெபினிஃப்ரைன் :-
மேலும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோரெபினிஃப்ரைன் எனும் சுரப்பி வெளிப்படுகிறது. இது நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டிவிட்டு உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீரடைவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.
தேவையான பொருட்கள் :-
3 பூண்டு பல்
1 எலுமிச்சை பழத்தின் சாறு
1 கப் தண்ணீர்
செய்முறை :-
ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.
தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை இரண்டு வாரம் பருகி வந்தால் நீங்களாகவே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

No comments:

Post a Comment