இதயம்
உலகில் இன்று பலருக்கும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன. அதற்குப் பிரதான காரணம் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ளாததே காரணம் ஆகும். காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுத்து, இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது.
குழந்தை மூளை வளர்ச்சி
அதிலும் குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்கள் கோலைன் சத்து நிறைந்த காலிஃபிளவரை உண்பதால், வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் செயல் திறன் சிறப்பாக இருக்க உதவுகிறது. கோலைன் அதிகம் நிறைந்துள்ள காலிஃபிளவர்களை அல்சைமர் எனப்படும் மறதி நோய் ஏற்பட்டவர்கள் சாப்பிடுவதால் அவர்களின் ஞாபகத் சக்தி மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
நச்சு தன்மை
உடலில் இருக்கும் நச்சுத்தன்மைகள் நீங்கி உடல் தூய்மை பெறும்.
எலும்புகள் வலிமை
காலிபிளவரில் வைட்டமின் கே சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறை காலிபிளவர் பக்குவம் செய்து உணவாக சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள், பற்கள் போன்றவை வலிமை பெறுகிறது. மேலும் இந்த வைட்டமின் கே சத்து எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் சத்து சிறுநீர் வழியாக வெளியேருவதையும் தடுக்கிறது.
சிறுநீரகங்கள்
நமது இரத்தத்தில் இருக்கும் அனைத்து கழிவுகளையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீரகங்கள் சிறப்பாக இருக்க சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காலிபிளவரில் பைட்டோ கெமிக்கல் வேதிப் பொருட்கள் நிறைந்துள்ளன. காலிபிளவர்களை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு சிறுநீர் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுப்பதோடு, சிறுநீரகப் பையில் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கிறது.
ஹார்மோன்கள்
மனித உடலின் பல செயல்பாடுகள் சீராக இருப்பதற்கு அடிப்படையாக இருப்பது நாளமில்லா சுரப்பிகள் சுரக்கின்ற ஹார்மோன்களே ஆகும். இந்த ஹார்மோன் சுரப்பிகள் சீராக இருக்க ஆன்ட்டி – ஆக்ஸிடென்டுகள் நிறைந்த காலிபிளவர் அதிகம் சாப்பிடுவது அவசியமாகும். குறிப்பாக பெண்களின் உடலில் சுரக்கின்ற ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் சமநிலை இல்லாத தன்மையை சீர் செய்யும் ஆற்றல் காலிபிளவரில் அதிகம் இருக்கின்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் இன்னபிற வேதிப்பொருட்கள் கொண்டிருக்கிறது.
#cauliflower #healthpluz #healthyvegetable #benefits
No comments:
Post a Comment