Tuesday 23 June 2020

சந்திராஷ்டம நாளில் சந்தோஷமா இருக்கணுமா? இந்த பரிகாரம் பண்ணுங்க.

சந்திராஷ்டமம் நாளில் சிலர் வாயை கூட திறக்கமாட்டார் எதற்கு வம்பு என்று பேசாமல் இருந்து விடுவார்கள். சிலருக்கு கோபமும் எரிச்சலும் அதிகமாகும். சிலரோ ஒருவித புழுக்கத்துடன் இருப்பார்கள். மனோகாரகன் சந்திரன் எட்டாம் இடத்தில் மறையும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. அந்த நாட்களில் அமைதியாக இருந்து அதற்கேற்ப பரிகாரம் செய்தால் பாதிப்புகள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். 
 சனி பகவானை சாந்திப்படுத்த எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலுக்கு போகணும் தெரியுமா? ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியாகும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டை குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். பிறந்த ராசியில் இருந்து எண்ணிப் பார்க்கும் போது எட்டாவது இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டேகால் நாட்களைத்தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டம நேரமாகும். 
: மற்றவர்களின் வயிற்றெரிச்சலும், கண் திருஷ்டியும் நம் மீது படாமல் இருக்க என்ன செய்யணும்? நவகிரகங்களில் சூரியனும் சந்திரனும் முதன்மையானவர்கள். சந்திரன் மனோகாரகன். ராசி கட்டத்தில் இவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அதுவே ஜென்ம ராசி. இவர் தாய் காரகன், மனதை ஆள்பவர். மனிதர்களின் மனநிலைகள், தினசரி பலன்கள் சந்திரனின் சஞ்சாரத்தை வைத்தே அமைகிறது. சந்திரன் ஒருவரின் எட்டாவது ராசியில் சஞ்சரிக்கும் போது அவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல், வீண் தகராறு, காரிய தோல்வி ஏற்படும். சந்திராஷ்டம நாட்களில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடலாம். வண்டி வாகனங்களில் பயணம் செய்யாமல் இருப்பது நல்லது.
: நாக தோஷத்தால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் தெரியுமா? பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் 
 சந்திராஷ்டமம் சந்திராஷ்டமம் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும் போதே சந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும். விருச்சிகம், கடகம், ரிஷபம் போன்ற ராசிக்களுக்கு நீச்ச உச்ச, சொந்த வீட்டுக்காராக சந்திரன் இருப்பதால், அந்த ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் பாதிக்காது என்று சொல்வர். சந்திரன் சஞ்சாரம் பிறந்த ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் உலா வரும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும். புது முயற்சிகளில் ஈடுபடும் பொழுது, மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. திருமண முகூர்த்தம் தாலி கட்டும் நேரம் சந்திராஷ்டமமாக இருந்தால், குடும்ப ஒற்றுமை குறையும். சாந்தி முகூர்த்தம் சந்திராஷ்டம நாளில் இருந்தால், தாம்பத்திய சுகம் குறையும். உடல் நலம் பாதிக்கும். 
மேஷம் விருச்சிகம் 
சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் சில பரிகாரங்களை செய்து விட்டு முக்கிய காரியங்களை செய்யத் தொடங்கலாம். மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து விட்டு சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.
 ரிஷபம் துலாம்
 ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம். துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.  மிதுனம் கன்னி மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து விட்டு பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம். கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து விட்டு பின்னர் கண்ணனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். 
கடகம் சிம்மம் 
கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம். சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம். 
தனுசு மீனம் 
தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து விட்டு பின்னர் குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். மீனம் ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். மகரம் கும்பம் மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம். பரிகாரம் மற்றும் வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்

No comments:

Post a Comment