Saturday, 27 June 2020

கொரோனா #வைரஸ்_நோய்_எதிர்ப்பு#சக்தி_பெற....

#அதிகரித்து_வரும்_கொரோனா #வைரஸ்_நோய்_எதிர்ப்பு
#சக்தி_பெற……❗❗❗

#என்ன_வகையான_உணவுகளை #உட்கொள்ளலாம்……❓

⭕ நோய் எதிர்ப்பு சக்தி 
என்றால் என்ன❓

Immunity System

நாம் உள்வாங்கும் மூச்சுக்காற்று, 
அருந்தும் தண்ணீர், உண்ணும் உணவு, 
தோலில் ஏற்படும் வெடிப்பு……

இப்படி அனைத்தின் வழியாகவும் நோயை விளைவிக்கும்……

▶பாக்டீரியாக்கள், 

▶வைரஸ்கள், 

▶நுண் கிருமிகள் 

போன்றவை நமது உடலுக்குள் எப்போதும் நுழையத் தயாராகவே உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் நம் உடலுக்குள் நுழைய முடியாமல் தடுக்கும் அற்புத சக்தி ஒன்று நம் உடலுக்கு உள்ளது. அதனையே நோய் எதிர்ப்பு சக்தி (Immunity System ) 
என்கிறோம்.

💪 எதிர்ப்பு சக்தி வகைகள்❓

👉 நமது உடலில்………

★இயற்கையான எதிர்ப்பு சக்தி 
(Innate Immunity),

★தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி (Adaptive Immunity),

★உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி (Passive Immunity) 

என மூன்று வகை எதிர்ப்பு சக்திகள் உள்ளன. இந்த மூன்று எதிர்ப்பு சக்திகள் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம்.

🈵 இயற்கையான எதிர்ப்பு சக்தி
(Innate Immunity)   

இந்த எதிர்ப்பு சக்தி, பிறக்கும்போதே ஒருவரது உடலில் அமைவது. மனித உடலுக்கு தோல், (Skin) எப்படி ஒரு மிகப்பெரிய தடுப்பு சுவர் போல் உள்ளதோ, அதைப் போலவே மூக்கு, தொண்டை மற்றும் உணவு செல்லும் பாதை போன்ற பகுதிகளில் உள்ளே உள்ள சவ்வுகளும் தடுப்புக் கவசம் போல் செயல் படுகின்றன. இந்த கவசங்கள் நம்மை நோய் கிருமிகளிடம் இருந்து காப்பாற்றக்கூடியவை.

அடுத்தபடியாக உடலுக்குள் நுழையும் நோய்த் தொற்றுக் கிருமிகளை தாக்கி அழிக்கக் கூடியவைகளான வெள்ளை அணுக்கள் (#Neutrophils_Bosophils, #Eosinophils) தூங்காத படை வீரனைப் போல் நம் உடலுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளாகும்.

🈵 தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்த 
(Adaptive Immunity)

இரண்டாவது வகையான தகவமைக்கப்படும் எதிர்ப்பு சக்தி, நம்முடைய உடல் தன்னை நோய்க் கிருமிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக, தாக்கும் நோய்களுக்குக் காரணமான ஒவ்வொரு பாக்டீரியாக்களுக்குத் தகுந்தவாறு வேறுபட்ட நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிப்பது #Lymphocytes என்ற ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள்.

🈵 உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி 
(Passive Immunity)

மூன்றாவது வகையான உடன்பாட்டு எதிர்ப்பு சக்தி என்பது தேவைப்படும்போது, இன்னொரு இடத்திலிருந்து எதிர்ப்பு சக்தியை தற்காலிகமாக பெறுதல். உதாரணமாக, தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு தாய்ப்பாலில் இத்தகைய நோய் எதிர்ப்பு சக்தி தற்காலிகமாக கிடைக்கிறது. மஞ்சள் காமாலை நோய் எதிர்ப்பு மருந்து மற்றும் டெட்டானஸ் நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்த நோய்கள் வராமல் தடுக்க வைக்கும்.

🉐 எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது❓

நோய்க் கிருமிகள் நுழையும்போது, அதனை எதிர்த்து போரிடுவதற்கான நுட்பமான கட்டமைப்பு நமது உடலில் செயல்படுகிறது. இந்த செயல்பாட்டின்போது உயிரணுக்கள், திசுக்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் பரஸ்பர ஒத்துழைப்போடு விரைந்து செயல்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகள், மண்ணீரல், எலும்புகளின் அடியில் உள்ள மஜ்ஜை ஆகிய உறுப்புகள் இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், பாதுகாப்பு அரணாக செயல்படுகின்றன. வெவ்வேறு வகையான வேதிப் பொருள்களும், சுரப்பிகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் உறுதுணையாக இருக்கின்றன. இவை ரத்தம் மற்றும் நிணநீர் வழியாக பயணித்து, நோய்க்குக் காரணமான கிருமிகளை அழிக்கின்றன.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி 24 மணி நேரமும் செயல்படுகிறது. அதன் பெரும்பாலான செயல்பாடுகள் நம்மை அறியாமலே நிகழ்கின்றன. சில நேரங்களில் நோய்க்கிருமிகளை எதிர்க்க முடியாமல், எதிர்ப்பு சக்தி தோல்வியடையும் போதுதான் அதன் அறிகுறிகள் நமக்குத் தெரியத் தொடங்குகின்றன. #காய்ச்சல்_சளி_மூக்கில் 
#நீர்_ஒழுகுதல் இவையெல்லாம் நோயை எதிர்த்து நம் உடல் போராடுகிறது என்பதற்கான அடையாளங்களே ஆகும். அப்போது ஏற்படும் அதிகபட்ச வெப்பநிலைதான் காய்ச்சலாக உணரப்படுகிறது. சளியின் வழியாக கிருமிகள் அப்போது வெளியேற்றப் படுகின்றன.

புண், கட்டி, ரணம் போன்றவை ஏற்படும்போது அந்தப் பகுதியில் நோயை எதிர்ப்பதற்கான செல்கள் அதிக அளவில் வந்து குவிகின்றன. இவை, அந்த புண்ணின் வழியாக கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கின்றன.

வெள்ளை அணுக்களில் (Neutrophils, Bosophils, Eosinophils), ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.

🈵 நோய் எப்போது ஏற்படுகிறது❓

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

⭕ நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு காரணங்கள் என்ன❓

▶நம் உடலில் நோய் எதிர்க்கும் திறன் குறைவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அவற்றில் சில………

1. பலகீனமான உடலமைப்பு

2. மன அழுத்தத்தைக் கொடுக்கும் வேலைகள்.

3. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய சூழலில் வாழ்வது.

4. மது, போதைப்பொருள் பழக்கம்

5. புகைப்பழக்கம்.

6. தூக்கமின்மை.

7. சர்க்கரை நோய் , இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலை இல்லாமல் செய்கிறது.

நோய் தொற்றைத் தவிர்க்கசாக்கடை, கழிவு நீர் தேங்குதல், சாலையோரத்தில் கொட்டப்படும் காய்கறி மற்றும் வீட்டு உபயோகக் கழிவுகள் ஆகியவற்றின் மூலம் எளிதாக நோய்க் கிருமிகள் உருவாகி நம்மைத் தாக்குகின்றன. அதனால் நாம் தங்குமிடத்தை சுகாதாரமாக வைத்திருந்து நோய்த் தொற்றைத் தவிர்க்க வேண்டும்.

கை குலுக்குதல், தொலைபேசி உபயோகித்தல், கதவின் கைப்பிடியை தொடுதல், வாய், மூக்கை கையால் தொடுதல் இவற்றின் மூலம் கிருமிகள் தொற்ற வாய்ப்புள்ளது. இந்த ஒவ்வொரு செயல்பாட்டிற்குப் பின்னரும் கைகளை சோப்பு அல்லது வெந்நீர் கொண்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

கையுறைகள் போன்றவற்றை அணியும்முன் அவை முறையாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகை பிடிக்கும் பழக்ம் உள்ளவர்கள் அதனை தவிர்க்க வேண்டும். அது உங்களை மட்டுமின்றி உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். நெகிழ்வாகவும் மகிழ்ச்சியுடனும் இருக்க பழக வேண்டும். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்பட்டுஉடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

நோயற்ற வாழ்வுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியமான ஒன்று. ஆழ்ந்த உறக்கம் கொள்ளும் போது நம் உடலில் உள்ள இறுக்கங்கள் மாறி நோய் எதிர்ப்புத் திறன் செயல்பட ஏதுவாகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பால், தயிர், நெய், சோயா பீன்ஸ் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மீன் இவற்றை வாரத்தில் மூன்று முறையாவது கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து பழங்களும், காய்களும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. இவற்றில் Anti oxidants அதிகமாக உள்ளது. கடலை, சூரியகாந்தி விதைகள் போன்றவை துத்தநாகம் கால்சியம் போன்ற எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான சத்துக்களை அதிகரிக்க உதவும்.

வேதிப்பொருள்கள் (Chemicals), பூச்சி மருந்துகள் (Pesticidies) போன்றவை படிந்த பொருட்கள், மற்றும் வண்ணம் பூசப்பட்ட பொருட்கள், பதப்படுத்தப்பட்ட டின் பொருட்கள் போன்றவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.எண்ணெயில் வறுத்த உணவுப்பண்டங்களை உண்ணக் கூடாது. அவை உடலில் நச்சுத் தன்மையை (Free radicals) உண்டாக்குகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையின் அளவு அதிகமானால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை 15 மணி நேரத்திற்கு குறைத்துவிடுகிறது.

காபி, டீ இவற்றை அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற உபாதைகள் ஏற்படத் தொடங்கினால் மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை மூலம் உடலுக்கு என்ன தேவை என்பதை மருத்துவர் மூலமாக அறிந்துகொள்ள முடியும்.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு (Balance diet) உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு (Healthy life style) வாழ்வதே.

❌ நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மரு‌ந்துகளா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌தீமை....❗❗❗

#ஆ‌ன்டி_பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது. ஒரு செ‌ய‌‌ற்கையான ‌நிக‌‌ழ்‌வினா‌ல், உட‌லி‌ல் இய‌ற்கையாக உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கு‌ன்று‌கிறது.

மேலு‌ம், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உ‌ட‌லி‌ன் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `#பி_காம்ப்ளக்ஸ்' குறையும்.

வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு ஏற்படு‌கிறது.

சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பி‌ட்டது‌ம், உடலா‌ல் அதனை‌த் தா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ள இயலாத போது உட‌ல் நடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.

மேலு‌ம், உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி எ‌ன்பதே இ‌ல்லாமலே‌ப் போ‌ய் ‌விடு‌ம் ஆப‌த்து‌ம் உ‌‌ள்ளது.

#நோய்_நொடியின்றி_வாழ #ஊட்டச்சத்துக்கள்…❓❓❓

நோய் நொடியின்றி நலமாக வாழ்வதற்குத் தேவையான  ஊட்டச்சத்துக்களின் பட்டியல் இங்கே.. 

⭐ ஃபோலிக் ஆசிட்

கஷ்டமில்லா சுகப் பிரசவத்துக்கு இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. இந்த வைட்டமின் சத்து குறைந்தால், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்படுவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து இது.

பச்சைக்காய்கறிகள் மற்றும் அவகேடோ பழத்தில் இந்த வைட்டமின் அதிகம் இருக்கிறது.

⭐ இரும்புச் சத்து

ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு உதவும் பெரும் பங்கு இரும்புச்சத்துக்கு அதிகம். இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் எப்போதும் களைப்பாகவும், சோர்வாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனக்குறைவு ஏற்படும்.

மாமிசம், ப்ராக்கோலி மற்றும் பீன்ஸில் இரும்புச்சத்தை அதிகம் பெறலாம்.

⭐ கால்சியம்

உறுதியான பல்லுக்கும், எலும்புக்கும் கால்சியம் அவசியம். 35 வயதில் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டால் எலும்பு தொடர்பான நோய்கள் வரும். இளம் வயதிலேயே இந்தச் சத்தை எடுத்துக் கொண்டால் எலும்புத் தேய்மானம் பிரச்னை மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

பால், சீஸ், பசலைக்கீரை மற்றும் பாதாம் போன்றவற்றில் இந்த ஊட்டச்சத்து கிடைக்கும்.

⭐ வைட்டமின் D

மனித உடலில் போதுமான அளவுக்குக் கிடைக்காத ஒரு முக்கியமான வைட்டமின் இது. சூரிய ஒளியிலிருந்து மட்டுமே இந்தச் சத்தைப் பெறமுடியும். இதன் மூலம், மனஅழுத்தம், நெஞ்சு வலி போன்ற பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். பல்லுக்கும் எலும்புக்கும் தேவையான கால்சியம் சத்தும் இந்த வைட்டமினிலிருந்து அதிகம் கிடைக்கிறது.

⭐ மக்னீசியம்

உடலின் பல்வேறு வேதியியல் மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது இந்தச் சத்து. நரம்பு, தசை, தோல் மற்றும் எலும்பு வலுவாக வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல் உயர் ரத்த அழுத்தத்தைச் சமநிலையில் இருக்க உதவுகிறது.
பூசணி விதை, பசலைக்கீரை, பாதாமில் இருந்து இந்தச் சத்தைப் பெறலாம்.

⭐ வைட்டமின் E

கொழுப்புப் பொருட்களில் அதிகமாகக் காணப்படும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட், நோய் எதிர்ப்புச்சக்திக்கு உறுதுணையாக அமைகிறது,

கொய்யா, நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிசை மற்றும் முருங்கை, காலிபிளவர், கீரை வகைகள், முளை தானியங்களின் மூலம் பெறலாம்.

⭐ ஒமெகா 3

பெண்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு சிறந்த கொழுப்பு அமிலம் இது. உயர் ரத்த அழுத்தம், வீக்கம் மற்றும் நாள்பட்ட நோய்களைச் சரி செய்வதுடன் இதயப் பாதிப்பிலிருந்தும் காக்கிறது. நாள் ஒன்றுக்கு 1.1 கிராம் அளவுக்குப் பெண்களுக்குத் தேவைப்படும்

கடல் மீன்களிலிருந்து இதை பெறலாம்.

⭐ பொட்டாசியம்

பொட்டாசியத்தின் குறிப்பிடத்தக்க வேலை நரம்புகளில் ரத்தத்தைப் பிரச்னைகள் இல்லாமல் எடுத்துச் செல்ல உதவுவதுதான். மேலும், உறுதியான எலும்புக்கும், புத்துணர்ச்சிக்கும் சக்தியாக அமையும் இந்தச் சத்தை தயிர், உருளைகிழங்கு மீன் மற்றும் மாமிசத்தில் இருந்து அதிகம் பெறலாம். 19 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, நாள் ஒன்றுக்கு 4700 மி.கி அளவு இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

⭐ வைட்டமின்C

நோய் எதிர்ப்புச்சக்திக்கு அதிகம் தேவைப்படும் இந்த வைட்டமின் ஒரு சிறந்த ஆன்டிஆக்சிடன்ட். தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை வராமல் தடுக்கும் இந்த வைட்டமினை 19 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 75 மி.கி அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு. கிவி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களியிருந்து இந்த வைட்டமினை பெறலாம்.

⭐ நார்ச்சத்து

குடல் செரிமானத்துக்குப் பெரிதும் உதவுவது நார்ச்சத்து. 19-50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அளவுக்கு மட்டுமே இதை எடுத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இது அவசியம் தேவைப்படுகிறது. இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் வராமல் தடுக்கிறது.

கோதுமை, காய்கறி, கீரை மற்றும் பழங்கள் மற்றும் தானியங்கள் நார்ச்சத்து நிறைந்தவை.

⭐ தயிர்

தயிரில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வைட்டமின் டி உள்ளது. அதிலும் இந்த தயிரில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்கள், குடல் பாதையை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாப்பதோடு, உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடும் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் தயிர் சாப்பிட்டால் செரிமான மண்டலமும் நன்கு செயல்பட்டு, உடலில் உள்ள கெட்ட பாக்டீயாக்களை எளிதில் வெளியேற்றிவிடும்.

⭐ இனிப்பு உருளைக்கிழங்கு

இனிப்பு உருளைக்கிழங்கில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான பீட்டா கரோட்டீன் அதிகமாக உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிடுதால் முதுமை தோற்றம் எளிதில் ஏற்படாமல் இருப்பதோடு, சில ஆய்வுகளில், பெருங்குடல் மற்றும் மலக்குடல்களில் ஏற்படும் புற்றுநோய்களை வராமல் தடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

⭐ காளான்

காளானில் செலீனியம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் பி சத்துக்களான ரிபோஃப்ளாவின் மற்றும் நியாசின் போன்றவை உள்ளது. அதிலும் காளானில் லென்டினான் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள் உள்ளது. இதனால் காளானை சாப்பிடுவதால், உடலில் பல புற்றுநோய்கள் வராமல் இருக்கும். சொல்லப்போனால், காளான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் கூட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று பல ஆய்வுகள் சொல்கின்றன.

⭐ பாதாம்

வைட்டமின் பி சத்துக்களான ரிபோப்ளேவின் மற்றும் நியாசின் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. அதேப்போல் இதில் நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் ஈ சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரியான அளவு வைப்பதோடு, உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் ஏற்படாமல் தடுக்கும்.

⭐ கிரீன் டீ

தினமும் கிரீன் குடித்தால், உடல் எடை மட்டும் குறைவதில்லை. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான எஃபிகளோகாட்டிசின், வைட்டமின் சி மற்றும் பி உள்ளது. இதனால் உடலை எந்த ஒரு சளி, இருமல் போன்றவை எதுவும் அண்டாமல் இருக்கும். மேலும் இந்த கிரீன் டீ புற்றுநோய்கள், இதய நோய், ஹைப்பர் டென்சன் போன்ற எதுவும் வராமல் தடுக்கும்.

⭐ கீரைகள் மற்றும் பிராக்கோலி

கீரைகள் மற்றும் பிராக்கோலியில் அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் ஏ, சி, ஈ, கே மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் பொருளும் இருப்பதால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

⭐ பெர்ரி

பெர்ரிப் பழங்களில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆகவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், இதய நோய், இரத்தக் குழாய்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் சில புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம்.

⭐ பூண்டு

அதிக நறுமணம் உள்ள உணவுப் பொருளான பூண்டிலும் அதிகமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அடங்கியுள்ளன. ஆகவே இத்தகைய பூண்டை உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், உடலை எந்த ஒரு நோயும் தாக்காமல் பாதுகாக்கலாம்.

⭐ இஞ்சி

நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.

⭐ டீ, காபி

டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.

⭐ சர்க்கரைவள்ளி கிழங்கு

பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

⭐ பார்லி, ஓட்ஸ்

பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

⭐ எலுமிச்சை

எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.

⭐ கீரைகள், காய்கறிகள்

பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி மற்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.

⭐ மிளகு

ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆண்டிமைக்ரோபியல் திறன் கொண்டுள்ள கருப்பு மிளகு நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடும் ஒரு முக்கியமான ஆரோக்கியமான உணவாகும்.

⭐ ரெஸ்வெராட்ரோல் (Resveratrol)

எனப்படும் பாலிபினால் நிறைந்த உணவுகளான கருப்பு திராட்சை (Black grapes), கருப்பு உலர்திராட்சை (Black raisins),  பிஸ்தா (Pistachios) மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில், ஆக்ஸிஜனேற்ற பண்பும், ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராக வினைபுரியும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. ரெஸ்வெராட்ரோலின் ஆக்ஸிஜனேற்ற செயல்பாடு மற்றும் ஈகோசனாய்டுகளின் உற்பத்தியில் ஈடுபடும் என்சைம்களைத் தடுக்கும் திறன் அதன் அழற்சி எதிர்ப்பில் (ஆன்டிஇன்ஃப்ளமேஷன்) பங்களிக்கிறது. நோயைத் தடுப்பதிலும் இது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.

⭐ வைட்டமின் ‘ஏ’ உள்ள உணவுகள்    

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், முருங்கைக்கீரை, ஆடு, கோழி, மாட்டிறைச்சியின் ஈரல், முட்டை, பப்பாளிப்பழம், மாம்பழம், பசலைக்கீரை போன்றவற்றில் வைட்டமின் ’ஏ’ மிகுந்துள்ளது. வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் ‘அழற்சி எதிர்ப்பு வைட்டமின்’  என்று அழைக்கப்படுகிறது. உடல் செல் மண்டலத்தின் நோயெதிர்ப்பு மறுமொழிகள் மற்றும் மனித நோயெதிர்ப்பு செயல்முறைகளை சீர்படுத்தும் செயல்பாட்டில் ‘வைட்டமின் ஏ’  முக்கிய பங்கு வகிக்கிறது.

⭐ வைட்டமின் ‘சி’ உணவுகள்

ஆரஞ்சு, கொய்யா, நெல்லிக்காய், எலுமிச்சை, குடைமிளகாய், தக்காளி போன்றவற்றில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. வைட்டமின் ‘சி’ ஒரு ஆக்ஸிஜனேற்றி என்பதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களால், உயிரணுக்களுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. உடல் முழுவதும் உள்ள திசுக்களின் வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்க இது அவசியம்.

⭐ மஞ்சள்

மஞ்சளைப்பற்றி சொல்லவே தேவையில்லை.  முக்கியமாக மஞ்சளில் இருக்கும் குர்குமின், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நாள்பட்ட அழற்சி நோய்களை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது உடலில் ஃப்ரீரேடிகல்ஸ்  உள்ளடக்கத்தை குறைக்க உதவுகிறது. குர்குமின் அதன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளின் மூலம் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. முடிந்தவரை சாம்பார், பொரியல், குழம்பு, கூட்டு என எந்த சமையலாக இருந்தாலும் மஞ்சள் சேர்த்து செய்யுங்கள்.

⭐ தக்காளி

தக்காளி பழங்களில் இருக்கும்  பைட்டோ கெமிக்கலான லைகோபீன்,  முக்கிய எதிர்வினை ஆக்ஸிஜன் இனம் (Reactive Oxygen Species) என்பதால், ஃப்ரீ ரேடிகல்ஸ்களை அழிப்பதில்  திறமையான ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது மரபணுவில் (DNA) உள்ள உயர் எதிர்வினை  எலக்ட்ரானை மிகவும் நிலையான ஃப்ரீ ரேடிக்கல்லாக மாற்றக்கூடியது. இதன்மூலம் நோய்க்கிருமிகளைத் தடுப்பதில் சிறந்த எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களாக செயலாற்றுகிறது.

⭐ அன்னாசிப்பூ

பிரியாணியில் வாசனைக்காக ‘அன்னாசிப்பூவை’ சேர்க்கும் வழக்கம் நம்மிடம் உண்டு. அன்னாசிப்பூவில் உள்ள லிமோனேன் ஒரு கலவையான ஆக்ஸிஜனேற்றியாகும் என்பதால், செல்களின் அழிவுக்கு காரணமான லிப்பிட் பெராக்ஸைடேஷனைத்(Lipid peroxidation) தடுக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கவும் மற்றும் புரத ஆக்ஸிஜனேற்ற, அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் தொடர்புடைய புரத மறுப்பைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது ஒரு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுவதோடு, காயங்களை குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது.

⭐ பூசணி விதைகள்

வெள்ளை மற்றும் சிவப்பு பூசணி விதைகளில், ஆளிவிதைக்கு அடுத்தபடியாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இவற்றையும் சாலட் போன்றவற்றில் சேர்த்துக் கொள்ளலாம்.

⭐ புரதங்கள்

விலங்கு மூலங்களிலிருந்து வரும் புரதங்கள் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களின் ஏராளமான அளவுகளைக் கொண்டிருக்கின்றன மற்றும் நோயெதிர்ப்பு உயிரணுக்களுக்கு அவசியமானவை. அவை மீன், கோழி, சீஸ், முட்டை மற்றும் பால் ஆகியவற்றில் காணப்படுகின்றன. சைவ உணவு உண்பவர்கள் சோயாபீன்ஸ், ராஜ்மா, சுண்டல் போன்ற தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் தங்கள் புரதத்தைப் பெறலாம்.

⭐ கொட்டைகள்

வால்நட் மற்றும் பாதாம் ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன, அவை உங்கள் உடல் நோயை எதிர்த்துப் போராட உதவும். ஒரு சிறிய ஆய்வில் ஒமேகா 3-க்கள் குழந்தைகளின் சுவாச நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை குறைக்கின்றன. அக்ரூட் பருப்புகள் (வால்நட்) ஒரு சிற்றுண்டி கலவையில் அல்லது தானியத்தில் தெளிக்க எளிதானது.

⭐ கேரட்

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

 
⭐ பேரீச்சம்பழம்

 உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து இதில், எக்கச்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும் பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சக்தியை தரும்.

⭐ தூக்கம் அவசியம் 

உடலில் வளர்ச்சிதை மாற்றங்கள் சிறப்பாக நடைபெற தூக்கம் மிகவும் அவசியமாகும். மேலும், தூக்கமின்மையால் ஏற்படும் மனஅழுத்தத்தால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்னும் ஹார்மோன் அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்புச் செயல்பாட்டைப் பாதிக்கிறது. எனவே, நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெற, ஆழ்ந்த தூக்கமும் மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதும் அவசியமானது.

⭐ தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்

தண்ணீர் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் உடல் வெப்பத்தை சீராகப் பராமரிக்கிறது. மெட்டபாலிசத்தை அதிகரித்து, எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

⭐ பால் உணவுகளைச் சாப்பிடுங்கள்

தயிர் உள்ளிட்ட பால் பொருள்களில் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு 'ப்ரோபயாட்டிக்' என்று பெயர். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்சைமான இம்யுனோகுளோபுலின் (Immunoglobulin) அதிகளவு சுரக்க உதவுகிறது. மேலும், இவை நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, நோய்த் தொற்றை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

⭐ வெங்காயம் வேண்டும்

வெங்காயத்தில் உள்ள செலினியம் ( Selenium) தாதுச்சத்து நோய் எதிர்ப்பு செயல்பாடு தூண்டும் தன்மையுடையது. இதில் உள்ள 'அலிலின்' என்னும் வேதிப்பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சுகள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன. 

⭐ நட்ஸ் விரும்புவோம்

பாதாம் பருப்பு போன்ற நட்ஸ் வகை உணவுகளில் மாங்கனீஸ் (manganese), வைட்டமின் ஈ சத்துகள் நோய் எதிர்ப்புச் சக்திக்குக் காரணமான வெள்ளை அணுக்களின் செயல்பாட்டைத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. 

🚭 #புகைப்_பிடிக்காதீர்கள்

சிகரெட்டில் உள்ள புகையிலை (Tobacco) உடலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை குறைக்கிறது. மேலும், நுரையீரலில் உள்ள திசுக்களை அழிக்கவல்லது. இதனால், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியாவின் ஆபத்தை அதிகரிக்கிறது, 

⭐ #மதுப்பழக்கம்_வேண்டாம்

அதிகளவு மது குடிப்பதால் அதில் உள்ள ஆல்கஹால், வைட்டமின் மற்றும் கனிமச் சத்துகளை உடல் உறிஞ்சிக்கொள்வதை தடுக்கிறது. மேலும், வெள்ளையணுக்களை அழித்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைய காரணமாகிறது.

No comments:

Post a Comment