Tuesday, 16 June 2020

ஸ்ட்ராபெர்ரி

சிவப்பு நிறப் பழங்கள்
ஸ்ட்ராபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக இருக்கிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதைத் தவிர்த்து சிவப்புநிற பழங்கள் எல்லாவற்றும் செல் அழிவை தடுக்கும். ஸ்ட்ராபெரியிடம் அத்தகைய மருத்துவ குணங்கள் உள்ளது.

இருதய ஆரோக்கியம்
ஸ்ட்ராபெர்ரியை சாப்பிடுவதன் மூலமாக உங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை அகலும். இதனால் உங்கள் இரத்தத்தில் கொழுப்பு படியாமல் இருதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோயை தடுக்கும்
ஸ்ட்ராபெர்ரி உங்கள் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகமாக உற்பத்தி செய்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களை வளரவிடாமல் தடுக்கும்.

பற்கள் ஆரோக்கியம்
ஸ்ட்ராபெரி பழச்சாறை தினமும் குடித்து வந்தால் உங்களின் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். இதில் இருக்கும் அமினோ அமிலங்கள் பற்களில் இருக்கும் கரைகளை அகற்றி விடும். உங்கள் வாய் துர்நாற்றம் போக்கி உங்கள் புன்னகையை அழகாக்கும்.

செரிமானத்திற்கு உதவும்
ஸ்ட்ராபெரி பழங்களில் நார்ச்சத்து இருப்பதனால் உங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை என எல்லாவற்றையும் போக்கும். குடல் நோய் மற்றும் குடலில் ஏற்படும் புண்களை அகற்றி, குடல் இயக்கத்தை சீராக்கும்.

ஆண்மை சக்தி அதிகரிக்கும்
உஷ்ணத்தினால் ஏற்படும் ஆண்மைக்குறைவை போக்கி அவர்களின் ஆண்மை சக்தியை அதிகரிக்க ஸ்ட்ராபெரி உதவும். இதில் இருக்கும் குளிர்ச்சித் தன்மை உங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து அதன் வளர்ச்சிக்கும் உதவும்.

நீரிழிவு நோய்
சர்க்கரை அளவை அதிகப்படுத்தும் அரிசி மற்றும் கிழங்கு வகைகளை தவிர்த்து பழங்களை உண்ணுவது ஆரோக்கியமானது. அதிலும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை உண்ணுவதன் மூலமாக உங்கள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை சமநிலைப்படுத்துகிறது.

இதை தவிர்த்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்கிறது, உங்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது, கண் பார்வையை அதிகரிக்கிறது, என ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன. எனவே இக்காலத்தில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை வாங்கி பயன் பெறுங்கள்.
 
#strawberry  #benefits  #healthpluz  #healthy  #strawberryfruit

No comments:

Post a Comment