மருதாணி தெய்வீக மூலிகை வரிசையில் துளசியைப்போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவ குணம் கொண்ட செடியாகும். ஒரு பெண்ணின் கையில் இடும் மருதாணி விரைவில் சிவந்துவிட்டால் அவள் கணவன் அவள்மேல் அதிக காதலுடன் இருப்பான் என்றும் அதனால் தங்கள் மகளின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என பெற்றோர் பெருமை படுவர். கல்யாணத்திற்கு முதல் நாள் மருதாணி பூசிக்கொள்ளூம் பழக்கம் இப்படியாக ஏற்பட்டது. ஒரு பெண்ணிற்கு வரப்போகும் கணவனின் குணாதிசயங்களை இரண்டு விஷயங்களின் வாயிலாக அறிய முடியும் என நம் முன்னோர்கள் நம்பினார்கள். ஜாதகத்திலுள்ள கிரக நிலைகளின் வாயிலாக அறிவது. திருமணத்திற்கு இருக்கும் இளம் பெண்ணிற்க்கு மருதாணி இடுவதன் மூலம் அறிவது.
உங்க வீட்ல மகாலட்சுமி நிரந்தரமாக குடியேறணுமா? அப்ப இத கண்டிப்பாக செய்யுங்க... மருதாணி சரியான நிறத்துடன் சிவந்தவர்களுக்கு குழந்தை பிறப்பு சரியான முறையில் இருக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது. சிலருக்கு ஆரஞ்சு நிறமாக பிடிக்கும். சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். மருதாணி சிவக்காமல் மஞ்சள் குளித்தால் அது சீதள உடம்பை குறிப்பதாகும். அதிகம் கருத்துவிட்டால் அது பித்த உடம்பு என்கிறது. இரண்டு நிலைகளிலும் கருத்தரிப்பது தாமதமாகும் என்கிறது ஆயுர்வேதம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் மருதாணி யாருக்கு சிவக்கும் ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை இருப்பவர்களுக்கெல்லாம் மருதாணி நன்கு சிவந்து அழகை தரும். சுக்கிர செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு காமத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என ஜோதிடமும் மருதாணி அழகாக சிவப்பவர்களெல்லாம் தங்கள் கணவன்மார்களை சந்தோஷபடுத்துவதில் சிறந்தவர்கள் என ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது. சுக்கிர செவ்வாய் சேர்கை பெற்றவர்களுக்கு மருதாணி நன்கு சிவக்கும். சுக்கிரன்-சந்திரன், சுக்கிரன் புதன் சேர்க்கை கொண்டவர்களுக்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலரில் சிவக்கும். சுக்கிரன்-செவ்வாயோடு ராகு, சனி பார்வை சேர்க்கை பெற்றவர்களுக்கு கருத்து விடும். ராமாயணத்தில் மருதாணி மருதாணிக்கு அசோகமரம் என்ற பெயரும் உண்டு. சீதையை சிறை வைத்திருந்த இடத்தில் மருதாணி மரங்கள் நிறைந்த வனமாக இருந்ததால் அதற்கு அசோக வனம் என்ற பெயர் ஏற்பட்டது. இராமாயணத்தில் சீதை இலங்கையில் அசோக வனத்தில் இருக்கும்போது சீதைக்கு தனது கிளைகளின் அசைவால் ஆறுதல் கூறி வந்தது. சீதை கொடுத்த வரம் ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், "இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்." என்று கூறி மருதாணி செடியிடம், உனக்கு என்ன வரம் வேண்டும். என கேட்டாள். எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சி தான். அது போதும். என்றது மருதாணி செடி. மெஹந்தி விழா அதற்கு சீதை, "உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்." என்ற வரத்தை தந்தார் சீதா தேவி. அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மருதாணி நன்மைகள் அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும். அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள். மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம். மருதாணி கிருமிகளை அழிக்கும் சுக்கிரனின் அம்சமான மருதாணி இலை சிறந்த கிருமி நாசினியாகும். கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். நகத்தின் காரகர் செவ்வாய் என்கிறது ஜோதிட சாஸ்திரம். நக சுத்தி வராமல் தடுக்கவும் புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். மருதாணியின் பூக்களைப் பறித்து உலர்த்தி தலையணைகளில் பரப்பி உபயோகித்தால் ஆழ்ந்த தூக்கம் வரும். சுகமான தூக்கத்தின் காரகர் சுக்கிரன். நோய்களை குணமாக்கும் மருதாணி மருதாணி இலைகளை நீரில் ஊற வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கரகரப்பு, தொண்டைக் கம்மல் குணமாகும். தொண்டை நோயின் காரகரும் சுக்கிரன் தான். மருதாணி இலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும். மருதாணி இலை உடம்பிலுள்ள அதிக உஷ்ணத்தைக் குறைத்து, கண்களுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கருமையான நீண்ட கூந்தலுக்கு சுக்கிரபகவானின் அருள் வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் மருதாணி மகாலட்சுமியின் அருள் நிறைந்த மருதாணி இலைகளை கொண்டு மகாலட்சுமியை அர்ச்சித்தால் லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்கிறது வேதம். ஸ்திரி தோஷம், சுமங்கலி தோஷம் போன்ற தோஷங்களை ஜாதகத்தில் பெற்றவர்கள் சுமங்கலி பெண்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் உணவிட்டு மருதாணியால் கைகள் மற்றும் கால்களில் நலங்கு இட்டு வணங்கி ஆசி பெற தோஷங்கள் நீங்கும் என்கிறது சாஸ்திரம். வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது.ஸ்ரீமகாலட்சுமியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

No comments:
Post a Comment