Friday, 5 June 2020

மேஷ ராசி

உங்கள் ராசியின் அதிபதி செவ்வாயாகும். இந்த மேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகியவை இடம்பெறுகின்றன. குறித்த ராசிக்காரர்கள் பொதுவாக நேர்மையாக இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு பொய் பித்தலாட்டம் செய்பவர்களை கண்டால் பிடிக்காது. இவர்களுக்கு மற்றவர்கள் கஷ்டபடுவதை கண்டால் உதவி செய்யும் மனப்பான்மை கொண்டு இருப்பார்கள். உடன் பழகுபவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும் கொண்டவர்கள். நிமிர்ந்த நேரான நடையும், கணிந்த பார்வையும் கொண்டவர்கள். பிறரின் பார்வைக்கு வெகுளியானவர் போல காட்சியளிப்பார்கள். நல்ல தீர்கமான ஆயுளும், தெய்வ பக்தியும் கொண்டு இருப்பார்கள். பொறுமை என்பதே இந்த ராசிக்காரர்களுக்கு கிடையாது. நினைத்ததை உடனே சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள். இதனால் சில பிரச்சனைகளை சந்திக் நேரிடும்.
இந்த ராசியில் பிறந்தவர்கள் வீரம், கோபம் நிறைந்தவர்களாகவே இருப்பார். மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்வதிலும், அதிகாரம் செலுத்துவதிலும், வீர தீரமான செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் இவர்கள் திகழ்வார்கள். பிறரை நிர்வகிக்கும் நிர்வாக திறமையிலும் முதன்மையாக இருப்பார். அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவு இன்றி பேசுவார்கள். தன்னிடத்தில் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பங்கள் நேர்ந்தாலும் உதவி செய்வதற்கு தயாராக இருப்பார்கள். அவர்கள் நல்ல வாக்கு சாதுர்யம் கொண்டவர்கள். தான் சொல்வதே சரி சரி என வாதிடுவார்கள். நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்கள். இவர்களுக்கு கலைகளில் அதிக நாட்டம் இருக்கும். இவர்கள் தைரியமானவர்கள் என்பதால் எல்லா விஷயத்தையும் சமாளித்து விடும் ஆற்றலை பெற்றிருப்பார்கள். கௌரவத்தை ஒரு நாளும் விட்டு கொடுக்காதவர்கள்

No comments:

Post a Comment