Wednesday 3 June 2020

எக்ஸிமா என்றால் என்ன?

எக்ஸிமா என்றால் என்ன?

எக்ஸிமா என்பது தோலின் மேல் ஏற்படும் ஒருவித சரும நோய். தோலில் காய்ந்த, வட்டவடிவிலான, தடிமனான, செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும். மிகவும் அரிக்கும் தன்மை இருக்கும்.

எக்ஸிமா ஏற்பட காரணங்கள் யாவை?

தோலில் ஏற்படும் மிகை உணர்வுத்தன்மை அல்லது ஒவ்வாமை, தோல் தடிமனாகும் தன்மையை ஏற்படுத்தும். தோல் தடிமனாகுதலினால் அப்பகுதி சிவப்பாக மாறி, மீன் செதில்கள் போன்ற தோற்றம் ஏற்படும்.

எக்ஸிமாவின் அடையாள அறிகுறிகள் யாவன?

தோல் காய்ந்து (வரண்டு), அரிப்புடன் கூடிய சிவப்பு நிறத்தில் வட்டவடிவமான செதில்கள் போன்ற தடிப்பு காணப்படும். வெப்பம், மனஅழுத்தம், கவலை மற்றும் சொறிவதனால் ஏற்படும் புண் காயங்கள் அரிப்பை அதிகரிக்கும்.

எந்த வயதினர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்?

குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இருந்த போதிலும் வளர்ந்த பிள்ளைகள் மற்றும் வாலிபர்களும் பாதிக்கப்படலாம்.

உடலின் எந்த பகுதி தோலில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும்?

இவ்வகை வட்டவடிவுள்ள புண்கள் கால்முட்டியின் பின்புறம், முழங்கை முட்டியின் மடியும் பகுதி, கைமணிக்கட்டு, கழுத்துப்பகுதி, கால் மணிக்கட்டு மற்றும் பாதத்தில் ஏற்படும். பிறந்த குழந்தைகளின் முகத்தில், கண்ணங்களில் சிவப்பு நிற கொப்புளங்கள் போல் தோன்றும். சில மாதங்களில் கை மற்றும் கால்களில் இந்த சிவப்பு நிற கொப்புளங்கள் தோன்றும்.

யாருக்கு எக்ஸிமா மிக அதிகமாக ஏற்படக்கூடும்?

எக்ஸிமா பொதுவாக ஆஸ்துமா மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ஏற்படும். குடும்ப வழியில், எக்ஸிமா மற்றும் சுவாச மண்டலம் சம்பந்தப்பட்ட ஒவ்வாமை உடையோர்க்கும் ஏற்படும்.

எக்ஸிமாவை அதிகப்படுத்தும் காரணிகள் உண்டா?

நிறைய காரணங்கள் உண்டு. அவை நபருக்கு நபர் வேறுபடும்.

  • சுற்றுசூழல் காரணிகள் (குளியல் மற்றும் துவைக்கும் சோப்புகள் குளோரின் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு)
  • சில உணவு வகைகள் நிலைமையை மோசமாக்கும். உ.ம்.-பால், முட்டை
  • மன அழத்தமும் ஒரு காரணி
  • வரட்டசியான சீதோஷன நிலை மற்றும் தோல் வரண்டு காணப்படுதலும் நிலைமையை மோசமாக்கும்
எந்த பொதுவான பரிந்துரைகள் இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு பயனுள்ளவை?

மேற்கூறிய நிலைமையை அதிகப்படுத்தும் காரணிகளின் பயன்பாட்டை தவிர்ப்பதின் மூலம் இந்தநோயின் அறிகுறிகள் அதிகப்படுததுவதை மட்டுப்படுத்தலாம்

எக்ஸிமாவை கண்டறிவது எப்படி?

ஒருவரின் குடும்பத்திலோ அல்லது அந்த நபருக்கோ ஒவ்வாத பொருள் ஏதேனும் உண்டா என்பதனை கண்டறிவதின் மூலமும், உடற்கூறு சோதனைகள் மற்றும் தேவைப்படின் மற்ற ஆய்வக சோதனைகள் மூலம் எக்ஸிமாவை கண்டறியலாம். சில வேலைகளில் பையாப்ஸி மூலம் தோலின் ஒரு பகுதியை எடுத்து பரிசோதிப்பதின் மூலம் மற்றும் இரத்த பரிசோதனைகளின் வாயிலாகவும் கண்டறியலாம்.

நீண்ட நாள்பட்ட வியாதியினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
  • இந்நோய் மற்றவர்களுக்கு பரவும் தன்மை
  • வடுக்கள் மற்றும் தழும்புகள் ஏற்படும்
  • பாதிக்கப்பட்ட பகுதியில் தடிமன் ஏற்படுதலினால் நிறம் குறைதல்

எக்ஸிமாவிற்கான சிகிச்சை முறைகள் யாவை?

  • பாதிக்கப்பட்ட பகுதியில் எரிச்சலுாட்டும் பொருட்களை தவிர்ப்பதன் மூலம் இந்நோயின் அறிகுறிகள் அதிகரிப்பதை தவிர்க்லாம்
  • பாதிக்கப்பட்ட பகுதியை சொறிவதை தவிர்க்கவும்
  • சோப்பு உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளவேண்டும்
  • குணமாக்கும் மருந்துகள் பற்றி  அறிந்துக்கொள்ள மருத்துவரை அணுகவும்

No comments:

Post a Comment