Wednesday, 29 July 2020

திருஷ்டத்யும்னன்

திருட்டத்துயும்னன் (திருஷ்டத்யும்னன்) மகாபாரதத்தில் வரும் கதை மாந்தர்களுள் ஒருவன். மகாபாரதத்தின்படி இவன், துருபதனின் மகனும், திரௌபதிசிகண்டி ஆகியோரின் உடன்பிறந்தோனும் ஆவான். குருச்சேத்திரப் போரின்போது பாண்டவர்களுடைய தலைமைப் படைத்தலைவனாகப் பணிபுரிந்த திருஷ்டத்யும்னன், துரோணர் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தான்.

பாஞ்சால நாட்டின் மன்னனான துருபதனுக்குப் பிள்ளைகள் இல்லாதிருந்ததால், தேவர்கள் அருள் பெற்றுப் பிள்ளைகளைப் பெறுவதற்காக, புத்திரகாமி யாகம் எனப்படும் வேள்வியைச் செய்தான். துருபதனுக்குத் துரோணருடன் பகை இருந்தது. துரோணர், துருபதனைத் தோற்கடித்து அவனது நாட்டில் பாதியையும் எடுத்துக் கொண்டிருந்தார். தனது இளம் வயது நண்பனான துரோணருடன் தனது நாட்டைப் பகிர்ந்துகொள்வதாக வாக்குறுதி அளித்துப் பின் அதனை மீறியவன் துருபதன். ஆனாலும் துரோணர் தன்னை அவமானப்படுத்தியதாக அவன் கடும் சினம் கொண்டிருந்தான். தனது மகன், துரோணரைக் கொல்லும் வலிமை பெற்றவனாக இருக்க வேண்டுமெனத் துருபதன் விரும்பினான்.

வேள்வியின் முடிவில், வேள்வித் தீயிலிருந்து முழுமையாக வளர்ச்சி பெற்ற, வலிமை மிக்க இளைஞன் ஒருவன் ஆயுதங்களுடன் தோன்றினான். அவனே திருட்டத்துயும்னன். அவன் தோன்றும்போதே, நிறைந்த சமய அறிவும், போர்த்திறனும் கொண்டிருந்ததாக மகாபாரதம் கூறுகிறது.

துரோணரைக் கொல்வதற்காகவே அவன் பிறந்தவனாக இருந்தும், போர்க் கலையில் மேலும் தேர்ச்சி பெறுவதற்காகத் துரோணரிடமே சேர்ந்துகொண்டான்

No comments:

Post a Comment