Sunday 19 July 2020

வியாசர் மகரிஷி

பக்தி, அறிவு, தத்துவம், தாங்குதிறன் போன்றவைகளும், இவைகளுடன் தொடர்புடையர்களும் நம் அழகிய நாட்டின் முன்னோர்களாகவும், தெய்வீக வரலாறாகவும் இருந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களைப் பற்றி பேசுகையில், இந்த அண்டத்திற்கு ஆன்மீக ரீதியாக பல அர்பணிப்புகளைப் புரிந்துள்ள, எண்ணிலடங்கா பல முனிவர்கள் மற்றும் துறவிகளைப் பற்றி நாம் கேட்டிருப்போம். மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!! அதில் ஒருவர் தான், மகாபாரதம் என்ற மிகப்பெரிய புராணத்தை நமக்கு அளித்த புனித ஆத்மாவான வேத வியாசர் மகரிஷி.  வியாசரின் பிறப்பை பற்றிய கதையைப் பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். மகாபாரதத்தில் திரௌபதியின் பிறப்பு பற்றிய ரகசியம்! இதை படித்த பின்பு வியாசரின் பிறப்பை பற்றிய கதையை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அவர் எப்படி இந்த பூமிக்கு வந்தார்? அவர் எப்படி இந்த பெயரை பெற்றார்? அவர் பிறப்பின் நோக்கம் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு நீங்கள் விடைகளை பெறலாம். அதனால் வேத வியாசரின் பிறப்பு வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்வோம். மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா? பராசர மகரிஷி முன்னொரு காலத்தில் பராசர மகரிஷி என்ற முனிவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் தான் முதல் புராணமான விஷ்ணு புராணத்தை இயற்றியவர் ஆவார். ஒரு முறை, அவர் யமுனை நதியருகே பயணித்துக் கொண்டிருந்த போது, நதியை கடக்க தன் மரப்படகில் பயனாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்த மீனவ குடும்பத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கண்டார். அந்த பெண்ணால் முனிவர் ஈர்க்கப்பட்டார். அந்த பெண்ணின் அருகே சென்ற அவர், தன்னை அக்கரைக்கு அழைத்து செல்ல சொன்னார். அவளும் துடுப்பு போட தொடங்கினாள். மீனவ பெண்ணின் மீது ஆசை நதியின் நடுவே அவளின் கையை பற்றினார் பரஷரா. தன் உணர்வுகளை அவளிடம் வெளிப்படுத்திய அவர், தன்னுடன் உடலுறவில் ஈடுபட கேட்டார். அவளின் பெயர் சத்யவதியாகும். தன் உடலில் மீனின் வாடை அடித்ததால் அவளை மட்சயகந்தா என்றும் அழைத்தனர். முதலில் சத்யவதி தயங்கினாலும் கூட, அவரின் தொடர்ச்சியான வற்புறுத்தலின் பேரில் அவள் சம்மதித்தாள். ஆனால் அதற்காக முனிவரிடம் சில நிபந்தனைகளை விதித்தாள். முதல் நிபந்தனை சத்யவதி சொன்ன முதல் நிபந்தனையாவது, கரைக்காக காத்திருந்து, அங்கே உடலுறவில் ஈடுபடும் போது அவர்களை யாரும் காணக் கூடாது. இதனை ஒப்புக்கொண்ட பராசரர் சில மந்திரங்களை ஜெபித்தார். உடனே ஒரு தீவு ஒன்று உருவானது. அதனைச் சுற்றி புகை மண்டலமாக மாறியது. இரண்டாவது நிபந்தனை சத்யவதி சொன்ன இரண்டாவது நிபந்தனையாவது, அவள் உடலில் இருந்து மீன் நாற்றம் வாசனையாக மாற வேண்டும். மேலும் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்த போதிலும் கூட அவள் கற்புடன் இருக்க வேண்டும். அதற்கும் ஒப்புக்கொண்ட முனிவர் மீண்டும் சில மந்திரங்களை ஜெபித்தார். அவள் மீது அடித்த மீன் நாற்றம் அருமையான நறுமணமாக மாறியது. தன்னுடன் உறவு வைத்து கொண்டாலும், அவள் கற்புடன் இருப்பாள் என்ற வரத்தை அவளுக்கு அளித்தார். மூன்றாம் நிபந்தனை மூன்றாவதாக, தன் குழந்தை அறிவாளியாகவும், நன்கு படித்தவனாகவும், மீனவனாக இல்லாமல் ஒரு முனிவனாக இருக்க வேண்டும் என்ற வரத்தையும் கேட்டாள். இந்த நிபந்தனைக்கும் தலையசைத்த முனிவர், ததாஸ்து என கூறினார். வேத வியாசர் பிறப்பு பின் இருவரும் அந்த புகை மண்டலத்திற்குள் உடலுறவில் ஈடுபட சென்றனர். அதன் பின் அந்த தீவை விட்டு அந்த முனிவர் சென்றார். அதே நாளன்று தேவி சத்யவதி ஒரு மகனை பெற்றெடுத்தாள். அவர் தான் பின்னர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். வேத வியாசர் முழுப்பெயர் வேத வியாசர் கருமை நிறத்தில் இருந்ததால், கிருஷ்ணா என்ற பெயரை பெற்றார். மேலும் ஒரு தீவில் பிறந்ததால் அவருக்கு த்வைபாயனர் என்ற பெயரும் உண்டு. அதனால் வியாசா என்ற சிறுவனின் முழுப்பெயர், கிருஷ்ண த்வைபாயனர் வேத வியாசர் என்றானது. தன் வாழ்க்கையின் நோக்கத்தை தேடி கடுமையான தவத்தில் ஈடுபட முற்பட்டான்; ஆனால் ஒரு நிபந்தனையோடு. தன் தாய் அவனைப் பற்றி நினைத்தாலோ அல்லது அழைத்தாலோ அவன் என்னவென்று கேட்க சென்று விடுவான். மகாபாரத காவியம் எழுதிய விநாயகர் வேத வியாசரை மகா விஷ்ணுவின் ஒரு அங்கமாகவும் நம்புகின்றனர். வேத வியாசர் தான் மிகச்சிறந்த புராணமான மகாபாரதத்தை உருவாக்கி எழுதியவர். சொல்லப்போனால், வேத வியாசர் தான் கௌரவர்களுக்கும், பாண்டவர்களும் கொள்ளுத் தாத்தா ஆவார். அவர் மகாபாரதத்தை எழுத வேண்டி வந்த போது, தன்னுடன் இருந்து உதவிடுமாறு விநாயகரை நாடினார். மகாபாரதம் முழுவதையும் ஒரே மூச்சாக படித்துக் காட்டினால் மட்டுமே, அதனை தான் எழுதுவேன் என்ற நிபந்தனையை விநாயகர் கூறினார். அதனால் தான் மகாபாரதம் என்ற காவியம் நமக்கு கிடைத்தது. வேத வியாச முனிவரின் பிறப்பை பற்றிய புராணங்கள் இவை தான். அவர் இல்லையென்றால் மகாபாரதமும் இருந்திருக்காது. நமக்கும் பாண்டவர்கள், கௌரவர்கள், துரோணாச்சரியார் மற்றும் பீஷ்மா போன்றவர்களைப் பற்றி தெரியாமலேயே போயிருக்கும். 

No comments:

Post a Comment