Thursday, 9 July 2020

வசம்பின் மருத்துவ குணம்:

வசம்பின் மருத்துவ குணம்:

  • வசம்பை நல்ல நீரில் ஊறவைத்துத் துவையலாக அரைத்துத் தேனில் கலந்து தினம் 3 வேளை 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் குழந்தை, பெரியவர்கள் எல்லோருக்கும் வயிற்றுவலி எட்டிப்பார்க்காது.
  • சிறிது வெந்தயத்துடன் ஒரு துண்டு வசம்பு  இட்டு ஊற வைத்து விழுதாக அரைத்து சாப்பிட்டால் சாதாரண அலர்ஜி குணமாகும்.
  • வசம்புடன் நீர் தெளித்து மையாக அரைத்து அத்துடன் மஞ்சள்தூள் சேர்த்து, உடம்பில் பூசி கால்மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் சரும நோய் நீங்கும்.
  • வசம்புடன் கொஞ்சம் கருப்பட்டி வைத்து பொடித்து காலை மாலை என தின்றுவர நரம்புத் தளர்ச்சி மறைந்து நலம் கிடைக்கும்.
  • சிறிது சீரகத்துடன் வசம்பு சேர்த்து கஷாயம் செய்து பருகிவர வயிற்றுக் கோளாறுகள் சீராகும்.
  • வசம்புடன் பூண்டு வைத்து அரைத்து வெல்லத்துடன் சேர்த்துத் தின்றால் குடலில் உள்ள தீமை தரும் பூச்சிகள் மலத்துடன் வெளிப்படும்.
  • வசம்பு, மிறகு, சுக்கு இம்மூன்றையும் கரகரவென அரைத்திட்டு கஷாயம் செய்து குடித்து வல கை, கால் மூட்டுவலி நீங்கும்.
  • வசம்பைத் தூளாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவி மென்ற வர ஆரம்பநிலை திக்குவாய் குணமாகும்.
  • வசம்பு, புதினா இலை, சின்ன வெங்காயம், மிளகுஈ சீரகம் இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து, பனங்கற்கண்டு சேர்தது குடித்துவர சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும்.
  • ஒரு துண்டு வசம்ப, இரண்மு வெள்ளைப் பூண்டு பற்கள் இவற்றை நசுக்கி சிறிது தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி, ஆறியதும் காதில் சில துளிகள் விட்டுவர காதுவலி மாறும். 
  • சிறிது வசம்புத்தூள், ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து நீரைக் கொதிக்க வைத்து எடுக்கவும். இந்த குடிநீரைப் பருகி வர அஜீரணம் அகலும், பசி, ருசி உண்டாகும்.
  • நுங்குடன் வசம்புத்தூள் தூவி தின்றால், சீதபேதி குணமாகும்.
  • வசம்புடன் வல்லாரை வைத்து அரைத்து தேனில் சேர்த்து தின்றுவர ஞாபகசக்தி அதிகமாகும்.
  • வசம்புடன் மஞ்சளை வைத்து சிறிது நீர் தெளித்து மையாக அரைத்து தேள், பூரான், வண்டுக்கடிவாயில் பூசிவர விஷம் முறியும். கடுப்ப முற்றிலும் நீங்கும்.
  • வசம்பு, பெருங்காயம் இவைகளுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து வேனற்கட்டி மீது தடவிவர சீகு வெளிப்பட்டு விரைவில் குணமாகும். 
  • சிறிது வசம்புடன் சிறிது சீரகம் சேர்த்து மென்று தின்ற இரண்டு தம்ளர் மோர் குடித்தால், வாய்வுத் தொல்லை நீங்கும்.
  • வசம்பு, வெந்தயம், கிராம்பு, மிளகு, துளசி இலை இவைகளை இட்டு கஷாயம் செய்து தினம் மூன்றுவேளை பருகி வர குற்றிருமல் குணமாகும்.
  • தேங்காய் எண்ணெயில் வசம்பை பொடித்திட்டு, குப்பைமேனி சாறை சேர்த்து காய்ச்சி எண்ணெயை வடிகட்டி எடுத்து வைக்கவும். இந்த எண்ணெயை சிரங்கின் மீது தடவிவர சிரங்கு விரைவில் குணமாகும்.
  • செவ்வாழைப் பழத்துடன் சிறிது வசம்புத்தூளைச் சேர்த்து சாப்பிட்டுவர மாதவிடாய்க் கோளாறுகள் ஒழுங்குபடும்.
  • வசம்பைப் பொடித்து வீட்டு வாசற்பக்கம் தூவி வந்தால் விஷப்பிராணிகள் அந்தப் பக்கம் வராது.
  • வசம்புத்தூளை எலுமிச்சைச் சாறில் கலந்து குடித்தால் கடும் வாந்தி நிற்கும்.
  • சிறுநீர்ப் பையில் கற்களைக் கரைக்கும் தன்மை வசம்பிற்கு உண்டு.
  • இரண்டு வெற்றிலையுடன் சிறிது வசம்பு வைத்து மென்று தின்று, இரண்டு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் உப்புசம் குணமாகும்.
  • சிறுதுண்டு வசம்பு, சிறுதுண்டு மஞ்சளுடன் நீர் தெளித்து மையாக அரைத்து பொன்னுக்கு வீங்கி வீக்கத்தில் கழுத்துப் பக்கம் பற்றுபோட வீக்கம் நன்கு குணமாகும்

No comments:

Post a Comment