Wednesday, 15 July 2020

தொப்பை

தொப்பை 

ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகும். எனவே, இவற்றை உடனே கரைக்க கூடிய இயற்கை வழி முறைகளை பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக இந்த ஆலிவ் எண்ணெய் முறை உடல் எடை மற்றும் தொப்பையை எளிதில் குறைக்க உதவும்.

ஆலிவ் எண்ணெய்யில் பலவிதமான நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதில் வைட்டமின் ஈ, பாலிபீனால்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்றவை அதிக அளவில் உள்ளது. ஜெரிமான பிரச்சினை கொண்டோருக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்த மருந்தாகும். மேலும், உடல் எடையை குறைக்க ஆலிவ் பயன்படுத்தினாலே போதும்.

காலை நேரத்தில் எழுந்தவுடனே ஆலிவ் எண்ணெய்யை இப்படி பயன்படுத்தினால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம். மேலும், கெட்ட கொழுப்புக்களையும் இந்த வைத்தியம் கரைத்து விட கூடிய தன்மை கொண்டதாம். தேவையானவை :-ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் எலுமிச்சை 1/2 வெதுவெதுப்பான நீர் 1 கப்

செய்முறை :- முதலில் வெது வெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு அதனுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி கொண்டு காலை வேளையில் குடித்து வரவும். இவ்வாறு 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வரும்போது, உடல் எடை எவ்வளவு குறைந்துள்ளது என்பதை பார்த்து கொள்ளுங்கள்.

ஆலிவ் மசாஜ் தெரியுமா..?
மற்ற எண்ணெய்யை கொண்டு செய்யப்படும் மசாஜை விட ஆலிவ் எண்ணெய் மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்கு ஒரு சில முக்கிய எண்ணெய்யின் பங்கும் தேவை… 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் கடுகு எண்ணெய் 2 ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை :-
மேற்சொன்ன மூன்று எண்ணெய்களையும் நன்கு கலந்து கொண்டு, சிறிது நிமிடம் மிதமான சூடு செய்யவும். பிறகு இதனை வயிற்றில் தடவி 10 நிமிடம் வரை மசாஜ் செய்யவும். இதன்பின், அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் தொப்பையில் உள்ள கொழுப்பு குறைந்து கச்சிதமாக இருப்பீர்கள்.

புது வித முறை..!
ஆலிவ் எண்ணெய்யை இது போன்ற மசாஜ் முறையில் பயன்படுத்தினால் கொழுப்புகள் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இது விரைவிலே தொப்பையை குறைத்து விடும். தேவையானவை :-ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் காபி பொடி 1 ஸ்பூன்

செய்முறை :- சிறிது நிமிடம் ஆலிவ் எண்ணெயை சூடு செய்து பிறகு, இதனுடன் காபி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை வயிற்றில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து ஒரு குளியலை போடலாம். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்வதால் உடல் எடை தொப்பை குறையும்.

முக்கிய குறிப்பு…
ஆலிவ் எண்ணெய்யை அளவுக்கு அதிகமாக பயன் படுத்தினால் உடல் எடை மீண்டும், உயர தொடங்குமே தவிர, குறையாது. எனவே, பதிவில் கூறிய அளவே இதனை பயன்படுத்துவது உகந்தது. மேலும், காலை வேளையில் ஆலிவ் எண்ணெய்யை சாப்பிடுவதும் சிறந்தது தான்.

No comments:

Post a Comment