Wednesday, 26 August 2020

ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்!

♦ப்ரோடீன் சத்து நிறைந்துள்ள 10 சைவ உணவுகள்! ♦

பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள். அதிகமாக சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும். அதிலும் தற்போது விற்கப்படும் பிராயிளர் கோழிகளில் இருக்கும் மிகுதியான கொழுப்பு மக்களை கொல்லும் கொழுப்பாக இருக்கிறது.

இதற்கு நல்ல மாற்று சைவ புரத உணவுகள் இருக்கின்றன. எனவே, சிக்கன் பிடிக்காதவர்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்க சிக்கனை குறைத்துக் கொண்டு வேறு புரத சத்து உணவு உண்ண வேண்டியவர்களுக்கான புரத உணவுகள்…

♦தயிர், சீஸ்!

தயிர் மற்றும் சீஸ் உணவுகளில் புரதம் இருப்பினும், இவற்றில் கொழுப்பு சத்தும் இருப்பதால் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். நாள் முழுக்க உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு உடல் சூடு அதிகரிக்கும். இதனால் செரிமானம் பாதிக்கும். எனவே, நீங்கள் தினமும் மதிய உணவில் கொஞ்சம் சேர்த்துக் கொள்வது உடல் சூடு மாற்றம் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும்.

♦சோயா பீன்ஸ்!

சோயா பீன்ஸ் எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். வாரத்தில் இரண்டு முறை உணவில் சோயாவை சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும். கோதுமை உணவு விரும்பாதவர்கள் நூறு கிராம் சோயா டயட்டில் சேர்த்து வந்தால் போதுமானது.

♦பருப்பு உணவுகள்!

எல்லா பருப்பு உணவுகளிலும் புரதம் அதிகமாக கிடைக்கும். சிக்கன் பிடிக்காது என கூறும் நபர்கள் உங்கள் டயட்டில் பருப்பை சேர்த்துக் கொள்ளலாம். இது உங்கள் உடலுக்கு தேவையான புரத சத்தை அளிக்கும்.

♦.பட்டாணி!

அதிகளவில் புரதம் கொண்டுள்ள உணவில் முதன்மை உணவு பட்டாணி. வைட்டமின் சத்துக்களும் மிகுதியாக காணப்படும் பட்டாணி உடல் ஆரோக்கியத்தை, வலிமையை அதிகரிக்கும் உணவாக திகழ்கிறது.

♦கீரை!

அகத்தி, முருங்கை, வல்லாரை, பசலை என பெரும்பாலான கீரைகளில் புரதம் உள்ளது. இது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பை அதிகரிக்கவும் உதவும்.
அறுபதை எட்டும் நீரிழிவு நோயாளிகள் கீரையை அதிகம் உண்ண வேண்டாம், ஏனெனில் கீரையை செரிமானம் செய்ய சிறுநீரகம் சிரமப்படலாம்.

♦முளைக்கட்டிய உணவுகள்!

தானியங்களை சமைத்து சாப்பிடுவதை காட்டிலும், முளைகட்ட வைத்து சாப்பிடுவது சிறப்பு. இதனால் புரதம் அதிகளவில் கிடைக்கும். முளைக்கட்டிய தானியங்களை பச்சையாகவே உண்ணலாம். அல்லது நீரில் உப்பு சேர்த்து வேகைவைத்தும் சாப்பிடலாம். ருசி பெரிதாக இருக்காது எனிலும், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் மேன்மையான உணவு இது.

♦சோளம்!

சுவை மிகுந்த புரத சத்து உணவுகளில் சோளமும் ஒன்று. சோளத்தை வேக வைத்தும் உண்ணலாம், பச்சையாகவும் உண்ணலாம். இதிலிருக்கும் கூடுதல் நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவும்.

♦நிலக்கடலை!

முட்டையை காட்டிலும் இரட்டிப்பு மடங்கு அதிக புரதம் கொண்ட உணவு நிலக்கடலை. எலும்புகளுக்கு வலு சேர்க்கும் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ள உணவு. விலையில் குறைவு என்பதால் நட்ஸ்’ல் ஏளனமாக காணப்படும் நிலகடலை தினமும் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராது, இதயத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

♦காளான்!

வறுத்து காளான் உண்பதை காட்டிலும், வேகவைத்து சாப்பிடுவது சிறப்பு. இதில் புரதம் மட்டுமின்றி, நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சத்துக்களும் இருக்கிறது. காளான் உடலில் அதிக கொழுப்பு சேர்வதை தடுக்கும் எனவும் கூறப்படுகிறது.

♦கேழ்வரகு!

பாலுக்கு நிகரான புரதம் கொண்டுள்ளது கேழ்வரகு. பால் குடித்தால் அலர்ஜி, பால் குடிக்க கூடாத மருத்துவ நிலையில் உள்ளவர்கள் கேழ்வரகை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சித்தமருத்துவர் பா.சர்மிளா சரவணன்.

No comments:

Post a Comment