Wednesday, 12 August 2020

எள்ளு

#எள்ளு.!!

ஆயிரம் வருடங்களாக 
மனிதனுடன் பயணிக்கும் பயிர்... 
#எள்ளு!!

மனிதன் முதலில் பயன்படுத்திய எண்ணெய் எள்ளில் இருந்து எடுத்ததுதான். அப்படிப்பட்ட எள்ளில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடக்கிறது.

எள்ளு தரும் பயன்கள்...

👉 எலும்பை வலுப்படுத்தும்.

👉 இரத்த அழுத்தம் சீராகும்.

👉 இருதயம் பலம் பெரும்.

👉 கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

👉 மூட்டுவலி பிரச்சனைக்கு சிறந்த நிவாரணி.

👉 முடி உதிர்தல் கட்டுப்படும்.

இப்படி பல மருத்துவ குணங்கள் கொண்ட எள்ளு நம் உணவு பட்டியலில் வருவதில்லை. எள்ளில் இருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் பயன்பாடும் இன்று குறைந்து விட்டது. முக்கியமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் இதை தினசரி பயன்படுத்துவது மிகவும் அவசியம்.

எள்ளு சிறந்தது தான் ஆனால் உணவில் தினசரி பயன்படுத்த வழி என்ன? என்ற கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு. நமது பாரம்பரிய உணவுமுறையில் இதற்கான வழி இருந்தது. நம் உணவில் எள்ளு உருண்டை, எள்ளு மாவு, எள்ளு சீடை என்று பலவிதமாக பயன்படுத்தி வந்தோம். ஆனால், இன்று இவை அனைத்தும் நாம் மறந்து விட்டோம். அதனால், ஆரோக்கியத்தையும் இழந்துவிட்டோம்.

இன்று அப்படியொரு வாய்ப்பிருந்தால் எப்படி இருக்கும்? தரமான எள்ளில் வீட்டில் பக்குவமாக தயாரித்த எள்ளு மிட்டாய் இப்பொழுது நேட்டிவ்ஸ்பெஷல் இணையதளத்தில் கிடைக்கிறது. இப்படி ஒரு இனிப்பு பலகாரம் நமக்கு கிடைத்தால் தினமும் பயன்படுத்தலாம் இல்லையா? 

நமது தினசரி ஸ்நாக்ஸ் பட்டியலில் எள்ளு மிட்டாயையும் சேர்த்துக்கொள்வோம்... ஆரோக்கியத்தை பேணுவோம் !!

'சுவை மட்டும் தருவது உணவல்ல...

சுவையோடு ஆரோக்கியம் தருவதே சிறந்த உணவு"

No comments:

Post a Comment