தேவகுரு மற்றும் பிரகஸ்பதி என்று சொல்லப்படும் குருவும், ஆத்ம காரகன் என்று சொல்லப்படும் சூரியனும் சம சப்தம ஸ்தானங்களில் நின்று, நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் அமைப்பு சிவராஜ யோகம் என்ற அமைப்பை ஏற்படுத்துகிறது. இந்த யோகம் அதிகாரம் செய்ய வைக்கும் அமைப்பாக ஜோதிட வல்லுனர்களால் குறிப்பிடப்படுகிறது. சூரியனின் கதிர்வீச்சை திரும்பவும், அவருக்கே பிரதிபலிப்பதன் மூலம் சூரியனை புனிதப்படுத்தி, உச்ச பதவியை அளிக்கும் தன்மையை குறிப்பிடும் சுய ஜாதக அமைப்பாக சிவராஜ யோகம் குறிப்பிடப்படுகிறது.
இந்த யோக அமைப்பில் குருவும், சூரியனும் பலவீனம், பகை, நீசம் போன்ற நிலைகளை அடையாமலும், பாவக்கிரகங்களின் தொடர்புகள் ஏதுவுமில்லாமல், வலுவாக இருப்பதன் அடிப்படையில், ஒருவருக்கு அரசாங்கத்தில் சாதாரண அதிகாரி முதல் உயர் அதிகாரி வரையிலும், மந்திரி முதல் பிரதமர் வரை பதவி வகிக்கும் வாய்ப்பையும் பெறுவதாக ஜோதிட வல்லுனர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டு அதிபதி மற்றும் பூர்வ புண்ணிய காரகன் குரு ஆகியோரது சுப அம்சங்களை பொறுத்து, மேற்கண்ட பதவிகள் அமையும். ஒருவரது சுய ஜாதகத்தில் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி மற்றும் குரு ஆகியவை பலம் பெற்றிருக்கும் நிலையில் சிவராஜ யோகம் அளிக்கும் பூர்வ புண்ணிய பலனை அனுபவிப்பதற்காக அவரது பிறப்பு ஏற்பட்டதாக ஜோதிட ரீதியாக கருத்து உள்ளது. சிவராஜ யோகம் கொண்டவர்கள் சிவ வழிபாடு செய்வதன் மூலம் பல சிறப்புகளைப் பெறமுடியும். செவ்வாய் சிம்மத்திலும், குரு மேஷத்திலும், சூரியன் தனுசிலும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனையாக இருக்கும் நிலை உயர் பதவியை அளிக்கின்றன. சூரியன், குரு, செவ்வாய் ஆகியவை ராஜ கிரகங்கள் என்பதால் உயர் பொறுப்புள்ள அரசு பதவியையும் அளிப்பார்கள
No comments:
Post a Comment