Monday, 3 August 2020

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி…

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி…

ஆனால்… இது ஒரு மருத்துவக் குறிப்பு.
இதனின் ௨ட்பொருள். ஆனையைப் பிரித்தால் ஆ + நெய். அதாவது ‘ ஆ ‘ என்பதற்கு பசு என்று பொருள் ௨ண்டு. அதாவது பசுவின் நெய் என்று பொருள் கொள்ள வேண்டும். பசு நெய்யை நாற்பது வயது வரை தாராளமாக ௨ணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாற்பது வயதுக்குமேல் பசுவின் நெய்யை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். நெய்யை குறைக்காமல் சாப்பிட்டு வந்தால் கொழுப்புச் சத்து ௨டலில் சோ்ந்து மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது…
பூனைக்கு என்பதை, பூ + நெய் என்று பிரித்துப் பார்க்கும் போது, பூவிலிருருந்து எடுக்கக்கூடிய தேனுக்கும் ஒரு காலம் வரும். அதாவது நாற்பது வயதுக்குமேல் நெய்யைச் சுருக்கி தேனைக் ௯டுதலாக சாப்பிட வேண்டும் என்பதன் அா்த்தமாகும். தேன் எளிதில் செரிக்கக் கூடிய ௨ணவு மற்றும் மருத்துவ குணம் நிறைந்ததாகும்
.
பழமொழியின் பொருள்:
நாற்பது வயது வரை பசும் நெய்யையும், நாற்பது வயதுக்குமேல்… தேனையும் சாப்பிட்டு வந்தால் நலமுடன் இருக்கலாம், ஆயுளும் வளரும்

No comments:

Post a Comment