Wednesday, 12 August 2020

மாம்பழம்

மலட்டுத்தன்மை

ஆண்களும், பெண்களும் உடலளவில் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே திருமணத்திற்கு பின்பு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மலட்டுத்தன்மை நீங்கி நல்ல குழந்தைப்பேறு ஏற்படும். 

உடல்சக்தி 

சத்துக் குறைபாடுகளால் சிலருக்கு சிறிது நேரத்திலேயே பலம் இழந்து, உடல் சோர்ந்து விடும். மாம்பலத்தில் உடலுக்கு தேவையான பல விட்டமின்கள், தாது சத்துகள் உள்ளதால் அதை சாப்பிடுபவர்களுக்கு உடல்சக்தி கிடைக்கும்.

வயிறு நலம்

  மாம்பலத்தில் கிருமிகளை அழிக்கும் சிறந்த இயற்கை ரசாயனங்கள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்புக்கள் நன்றாக இருக்கும். 

நரம்புகள் 

உடலில் பல பாகங்களுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் பணியை நரம்புகள் செய்கின்றன. மாம்பழத்தை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் நன்கு வலுப்பெறும் நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் நீங்கும். 

கண்களின் நலம் 

நமது உடலில் இருக்கும் முக்கியமான உறுப்பு கண்கள். சிலருக்கு சத்துக்குறைபாடுகள் மற்றும் இதர காரணங்களால் கண்புரை, கண்பார்வை மங்குதல் போன்றவை ஏற்படுகிறது. அதை முற்றிலும் நீக்கும் உணவாக மாம்பழம் இருக்கிறது. 

மூளை செயல்பாடு 

மாம்பழத்தில் மனிதர்களின் மூளை செல்களை அதிகம் தூண்டக்கூடிய தாது மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் இருக்கின்றன. மாம்பழத்தை அடிகடி உண்பவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாக இயங்கும். 

ஹார்மோன்கள் 

நமது உடலில் இருக்கும் நாளமில்லா சுரப்பிகள் உடலின் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கான பல ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. மாம்பழத்தை உண்டு வருபவர்களுக்கு இந்த ஹார்மோன்களின் செயல்பாடு சமநிலையில் இருக்கும்.

 கருப்பை பிரச்சனைகள்

  மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும்.

 நோய்யெதிர்ப்பு

 மாம்பழத்தில் காரச்சத்து கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கின்றன. இதை தொடர்ந்து உண்பவர்களுக்கு ரத்தத்தில் நோயெதிர்ப்பு திறன் அதிகமாகி, உடலை தொற்று நோய்களிலிருந்து காக்கிறது.

 சிறுநீரக கற்கள் 

குறைவான அதேசமயம் உப்புத்தன்மை அதிகம் கொண்ட நீரை அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உண்டாகிறது. இவர்கள் மாம்பழத்தை அடிக்கடி உண்டு வர சிறுநீரக கற்கள் கரையும்.


No comments:

Post a Comment