Wednesday, 26 August 2020

வெறும் தேங்காயை அப்படியே சாப்பிடலாமா? சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன?

பொதுவாக நாம் சமையலில் பயன்படுத்தப்படும் தேங்காயில் இல்லாத ஊட்டச்சத்துக்களே இல்லை எனலாம். நீங்கள் தேங்காயை எப்படி எடுத்துக் கொண்டாலும் கூந்தல் வளர்ச்சி முதல்ல எடை இழப்பு பலன்களை அள்ளித் தருகிறது.

    

இந்த தேங்காயை எப்படியெல்லாம் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம் முன்னோர்கள் தேங்காயின் நன்மை தெரிந்து தான் அதை கோயில்களில் பிரசாதமாக கொடுத்து உள்ளனர். இந்த தேங்காயை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் இதன் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். இது தான் இதனுடைய மிகப்பெரிய சிறப்பு.
​தேங்காய்

சமையலில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் ஆக பயன்படுத்தி வரலாம். நம் கூந்தல் வளர்ச்சிக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த ஒன்று. பல ஆண்டுகளாக, தேங்காய் எண்ணெயை சருமத்தில் பயன்படுத்துவதால் சருமமானது பளபளக்கும் சரும கோடுகள் மறைந்து விடும் என ஆயுர்வேதம் கூறுகிறது. இதில் செம்பு, செலினியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றில் மிகவும் நிறைந்துள்ளது. மேலும், அதில் உள்ள கொழுப்பு உள்ளடக்கம் உண்மையில் நல்ல கொழுப்பு ஆகும், இது உடல் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

தேங்காயில் இருக்கும் ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் தியாமின் ஆகியவை வழக்கமாக உட்கொள்ளும்போது காலப்போக்கில் உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதோ உங்களுக்கான தேங்காயின் ஆரோக்கிய நன்மைகள்
நாம் நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடும் போது தான் மலச்சிக்கல் ஏற்படுகிறது. ஆனால் இதுவே நார்ச்சத்து அதிகமாக உள்ள தேங்காயை எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு மலச்சிக்கல் தீரும். 61% அளவிற்கு தேங்காயில் நார்ச்சத்துகள் உள்ளன. இது உங்க குடல் ஆரோக்கியத்திற்கும் குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.

சினிமாவுக்காக தன் தோற்றத்தையே மாற்றிக்கொண்ட பிரபலங்களின் ஃபிட்னஸ் ரகசியங்கள் இதோ...


​சருமம் மற்றும் கூந்தல் தன்மை மேம்பட

வறண்ட சருமமும், முரட்டுத்தனமான கூந்தலும் உங்க அழகை கெடுக்கும். தேங்காயில் உள்ள கொழும்பு உள்ளடக்கம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உலர்ந்த சருமத்தை போக்குகிறது. நீரேற்றம் செய்து

சருமத்தை மிருதுவாக்குகிறது.

மேலும், இதில் மோனோலாரின் மற்றும் லாரிக் அமிலம் உள்ளன. இது இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது. எனவே உங்களுக்கு ஏற்படும் முகப்பரு, தலைமுடி பொடுகு போன்ற பிரச்சனைகளை இதன் மூலம் சரி செய்யலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் வயதான சருமத்தை தடுக்கிறது.


​எடையை இழக்க உதவும் தேங்காய்

தேங்காயில் நார்ச்சத்துக்கள் இருப்பதால் நீண்ட நேரம் பசிக்காது. வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கிறது. கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தேங்காயில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் உடலில் உள்ள கொழுப்பை வேகமாக எரிக்கவும், பசியை அடக்கவும் உதவுகின்றன. அதனால்தான், PLOS ONE இல் வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு ஆய்வில், குறைந்த கொழுப்புள்ள உணவுக்கு என்று வரும்போது தேங்காய் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்று கூறுகிறது.

மேலும் தேங்காய் சில்லுகளை வாயில் போட்டு மெல்லுவது உங்க முகத் தசைகளுக்கு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உங்க தாடை பகுதியை அழகாக்கும்.

சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா? சாப்பிட்டா உடலில் என்ன நடக்கும்?


​பச்சை தேங்காய் நோயெதிர்ப்பு சக்தியை கூட்டும்

இந்த கோவிட் 19 தொற்றில் நம் நோயெதிர்ப்பு சக்தியை கவனிக்க வேண்டியது மிகவு‌ம் அவ‌சிய‌ம். எனவே நம் நோயெதிர்ப்பு சக்தியை கூட்ட நீங்க வெறும் தேங்காயை சாப்பிட்டு வந்தாலே போதும். இயற்கையில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு, வைரல் எதிர்ப்பு என அனைத்து பிரச்சினைகளிலிருந்தும் உங்களை காக்க தேங்காய் உதவுகிறது. மேலும், தொண்டை மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் நல்லது.

திடீரென்று உடல் எடை அதிகரிப்பதற்கான 5 காரணங்கள் என்னென்ன? சாப்பாடு தவிர...


​வயதான பிறகு வரும் அல்சைமரை தடுக்க

நியூட்ரியண்ட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் தேங்காயில் பிரத்தியேகமாகக் காணப்படுகின்றன. அல்சைமர் மற்றும் பிற அறிவாற்றல் கோளாறுகளைத் தடுக்க உதவும் கெட்டோஜெனிக் பண்புகளை இது கொண்டுள்ளன. அடிப்படையில் தேங்காய் கொழுப்புகள் நம் மனநலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் சிகிச்சை பண்புகளைக் கொண்டுள்ளன.

எனவே இனிமேல் தவறாமல் தேங்காயை உங்க உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இயற்கையிலேயே நிறைய நன்மை தரும் பண்புகளைக் கொண்டது தேங்காய்.

No comments:

Post a Comment