Wednesday, 30 September 2020

மேச ராசி 2020 __2021

2020 __2021
_____________
குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு
_________________________________________கேது பெயர்ச்சி பலன்கள்
___________________________

மேச ராசி
_________

வீரமும், வேகமும் ,சுறுசுறுப்பும் ,எடுத்த காரியம் உடனே முடிக்க வேண்டும் என்ற தீராத ஆர்வம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே,

உங்களுக்கு கடந்த ஒரு வருட காலமாக குரு பகவான் மேஷ ராசிக்கு ஒன்பதாமிடத்தில் ஆட்சி, மூலத்திரிகோணம் பலம்பெற்று மிக வலுவாக சஞ்சாரம் செய்து வந்ததால் கடந்த ஒரு வருட காலமாக உங்களுக்கு சாதகமான முன்னேற்றமான அனுகூலமான நல்ல பலன்களை அனுபவித்து வந்தீர்கள்.. அவர் உங்கள் ராசிக்கு பாக்கியாதிபதி வேறு! பாக்கியாதிபதி பாக்கியத்தில் அதுவும் திரிகோணத்தில் ஆட்சி பலம் பெற்று சஞ்சாரம் செய்தது மிகச்சிறந்த நல்ல நிலை என்றே சொல்லலாம்.

தசா புக்தி அமைப்புகள் சரி இல்லாதபோதும் கூட இந்த கோச்சார குரு பகவானின் சஞ்சாரம் நீங்கள் இந்த கொரானா ஊரடங்கு காலத்திலும் நீங்கள் மிக சுலபமாகவே சமாளித்து விட்டீர்கள்.. இந்த சோதனையான ஊரடங்கு காலகட்டத்தில் ஒன்பதாம் இடத்து குரு பகவான் உங்களை சகல விதத்திலும் பாதுகாத்து கரை ஏற்றினார் என்றால் அது கொஞ்சம் கூட மிகை இல்லை..

அது மட்டுமல்லாமல் உங்களுக்கு கடந்த காலத்தில் ராகு பகவான் மூன்றாம் இடமான சகாய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்து பல சகாயங்களை வாரி வழங்கினார்.தற்போது ராகு பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். வரக்கூடிய 20. 11. 2020 வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒன்றேகால் மணியளவில்
குரு பகவான் தனுசு ராசியிலிருந்து பெயர்ச்சியாகி மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார்..

இது உங்கள் மேஷ ராசிக்கு 10-ஆம் இடம் என்று சொல்லக்கூடிய கர்ம ஸ்தானம் ஆகும் .தொழில் ஸ்தானமாகும் .ஜீவன ஸ்தானமாகும். ராஜ்ய ஸ்தானமாகும்.
இந்த பெயர்ச்சி உங்களுக்கு என்ன சொல்லுது அப்படின்னு பார்த்தோம்னா!
இந்த குருப் பெயர்ச்சியும் உங்களுக்கு சாதகமான நல்ல பலன்களை தர காத்துக் கொண்டு இருப்பதை உணர முடிகிறது.

எப்படி?? பொதுவாக உங்கள் ராசிக்கு குரு பகவான் பாக்கியாதிபதியாக வருவார். அதாவது ஒன்பதாமிடம் என்று சொல்லக்கூடிய தர்ம ஸ்தானத்திற்கு அதிபதியாக வரக்கூடியவர் இந்த குரு பகவான்.அப்படிப்பட்ட தர்ம ஸ்தானத்துக்கு ஆதிபத்தியம் வாங்க கூடிய குரு பகவான் மகர ராசிக்கு செல்ல இருக்கிறார் அங்கு சனி பகவான் ஆட்சி பலத்தோடு சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். அவரோடு குருபகவான் சேர்ந்து இணைவது தர்ம கர்மாதிபதி யோகம் என்ற மிகப்பெரிய யோகம் உங்களுக்கு அடுத்த ஒரு வருட காலம் வர இருக்கிறது.

ஒன்பதாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் இணைந்து இருவரில் ஒருவர் ஆட்சி பலம் பெற்று அற்புதமாக சஞ்சாரம் செய்யக்கூடிய தர்மகர்மாதிபதி யோகம் ஆனது, சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தை வாரி வழங்கும். தர்மகர்மாதிபதி யோகம் உள்ளவர்கள் கோவில் பணிகளிலும், சமூக நலம் சார்ந்த பணிகளிலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும். இவர்கள் மனமுவந்து  அடுத்தவர்களுக்கு உதவி  செய்வதை காணும் நவகிரகங்கள் இறைக்க இறைக்க ஊறும் கிணறு போல் வற்றாத செல்வத்தை வாரி வழங்குவதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். எனவே இந்த தர்ம கர்மாதிபதி யோகம் உங்களை சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவராக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்ததாக இந்த கொரொனா சுய ஊரடங்கு காலத்தில் சிலர் வேலை இழந்ததை பார்க்கிறோம்..வேலை இல்லாதவர்களுக்கு ,வேலை இழந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல வேலை கிடைக்கும்.ஏன்னா ??குரு பகவான் 10-ஆம் இடத்திற்கு செல்கிறார்.. 10-ஆம் இடத்தை சுபத்தன்மை படுத்துகிறார்.. பத்தாம் அதிபதியோடு இணைகிறார்.. பத்தாம் அதிபதியை சுபத்தன்மை படுத்துகிறார் பத்தாமிடம் ,பத்தாம் அதிபதியை குருபகவான் சுபத்தன்மை படுத்துவதால்
வேலை இல்லாதவர்களுக்கு, வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைத்துவிடும் என்பது உறுதி...

உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியான குருபகவான் தனது 7-ம் பார்வையால் நேர் பார்வையாக 4-ஆம் இடத்தைப் பார்த்து நான்காம் இடத்தை புனிதப் படுத்துவார்.. மேஷ ராசி மேஷ லக்னம்,, மேஷ ராசி மிதுன லக்னம் ,,மேஷ ராசி கும்ப லக்கினம் இவற்றை இலக்கண ராசியாக போன்றவர்களுக்கு சொந்த வீடு எனும் கனவு நனவாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.. லக்னத்திற்கும் ராசிக்கும் நான்காம் இடத்தைப் பார்க்க கூடிய குரு பகவான் சொந்த வீட்டை தந்துவிடுவார்..

ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் ரிஷபம், கடகம் ,கன்னி லிருந்து மேஷ ராசியாக அமைந்தவர்களுக்கு  வாகனம் வாங்க கூடிய யோகம், பிராப்தம் உண்டாகும்..
நான்காம் இடத்தையும் சுக்கிரனையும் குருபகவான் ஒருசேர பார்ப்பதால் இவர்களுக்கு வண்டி வாகனயோகம் உண்டாகிறது..சிலருக்கு வீடு மராமத்து பண்ணக் கூடிய அமைப்பும் சிலருக்கு வாடகை வீட்டிலிருந்து போக்கியத்திற்கும், போக்கியத்து வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கும் குடி போக கூடிய நல்ல காலம் பொறக்குது..ராசிக்கு 4-ஆம் இடத்தை குரு பார்ப்பதால் தாயின் ஆதரவு  கிடைப்பதோடு தாயின் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும்.
செய்தொழில் நன்றாக இருக்கும்.

குருபகவான்தனது ஐந்தாமிட பொன்னொளி பார்வையால் மேஷ ராசிக்கு இரண்டாம் இடத்தை பார்த்து விடுவார். இந்த இரண்டாம் இடம் என்பது தன ஸ்தானம் ஆகும் .எனவே பண வரவுகள் மிக திருப்தியாக இருக்கும்.. குடும்ப ஒற்றுமை மிக நன்றாக இருக்கும்..படிக்கக் கூடிய மேஷ ராசி குழந்தைகள், மாணவர்கள் நன்கு படித்து தேர்ச்சி பெறுவர்..உங்கள் வார்த்தைக்கு ஒரு மதிப்பு மரியாதை இருக்கும்.. ஏனென்றால் குரு பகவான் 2-ஆம் இடத்தைப் பார்க்கிறார். குரு பார்க்கக் கூடிய இடங்கள் எல்லாம் பெருகும். வளரும். உங்களுக்கு 2021 மிக அதிர்ஷ்டமான, யோகமான முன்னேற்றமான நல்ல ஆண்டாக அமையவிருக்கிறது..

குரு பகவான் ராசிக்கு 6ம் இடத்தை தனது 9ம் பார்வையால் பார்த்து விடுவதால் வேலை பார்ப்பவர்களுக்கு நல்ல ஆண்டாக 2021 நிச்சயம் இருக்கப் போகிறது..சிலர் கடன்பட்டு  வீடு வாங்குவர்.. சிலர் கடன் வாங்கி கார், பைக் போன்ற வாகனங்கள் வாங்குவர். கடன் வாங்கி இடம் வாங்குவர்.. அதாவது சுபக் கடன்கள்.ராசிக்கு 6ம் இடத்தை தனது 9ம் பார்வையால் பார்க்கக் கூடிய குரு பகவான் சுப கடனை தந்தாலும் அவர் ராசிக்கு இரண்டாமிடத்தையும் பார்த்து விடுவதால் கடனை கட்ட முடியும் கடனை அடைக்க முடியும்.கடனை தரக் கூடிய குரு பகவான் அந்த கடனை அடைக்க கூடிய வழிகளையும் காட்டிவிடுவார்.  கடனை அடைக்க கூடிய அளவுக்கு வருமானமும் வந்து விடும்..ஆக மொத்தத்தில் இந்த 2021 குருபெயர்ச்சி மேஷ ராசிக்கு நிச்சயம் நல்ல பலனைத் தர காத்துகொண்டு உள்ளது.. பொதுவாக மகர ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாயின் நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன.. இவர்கள் ராசிக்கு யோகாதிபதிகள் மற்றும் ராசிநாதனின் நண்பர்கள் என்பதால் இவர்களின் சாரத்தில் செல்லக் கூடிய குரு பகவான் எந்த நிலையிலும் கெடுக்க மாட்டார்.

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்
______________________________
இதுவரை உங்கள் ராசிக்கு 3,9 ம்மிடங்களில் சஞ்சாரம் செய்து வந்த ராகு கேதுக்கள் தற்போது 2,8 ம்மிடங்களுக்கு கடந்த 23 .9 .2020 அன்று பெயர்ச்சியாகி விட்டார்.. பொதுவாக ராகு கேதுக்கள் அப்பிரதட்சணமாக சுற்றி வரும் கிரகங்கள் ஆவார்கள். மற்ற கிரகங்கள் ராசி சக்கரத்தை இடமிருந்து வலமாக சுற்றி வரும் நிலையில் ராகு கேதுக்கள் மட்டும் வலமிருந்து இடமாக (அப்பிரதட்சணமாக )சுற்றி வருவார்கள்.

கடந்த காலத்தில் மிதுன ராசியில் ராகுவும் ,தனுசு ராசியில் கேதுவும் சஞ்சாரம் செய்து வந்த நிலையில் தற்போது ரிஷபத்திற்கு ராகுவும் விருச்சிகத்திற்கு கேதுவும் மாறி பலனை தர தொடங்கியுள்ளனர். தனம் குடும்பம் வாக்கு கல்வி கண் நேத்திரம் அதிர்ஷ்டம் அதிர்ஷ்டம் என்று சொல்லப்படக்கூடிய இரண்டாம் இடத்திற்கு ராகு பகவான் சஞ்சாரம் செய்வது அவ்வளவு விசேஷம் ஆகாது.

ஆனாலும் அந்த ராகு பகவானுக்கு குருவின் பார்வை இருப்பதால் குருபகவான் கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி, சரியான ஆங்கிலம் 20 நவம்பர் 2020 க்கு மேல் ராகுவை பார்வையிட இருப்பதால் இரண்டாமிடத்து ராகுவால் பெரும் பிரச்சனை இருக்காது.
பெரும் பிரச்சனை எதுவும் இருக்காது என்று சுருக்கமாக முடித்து விட்டீர்களே என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது. ஒரு கெட்ட கிரகம் கெடுதல் பண்ண முடியாத அமைப்பில் இருந்தாலே அது நமக்கு யோகம்தான்.இரண்டாம் இடம் எட்டாம் இடம் இந்த இடங்களில் ராகு கேதுக்கள் இருந்தாலே அது சர்ப்ப தோஷம் என்று வரும். கோடிக்கணக்கான தோசத்தை நிவர்த்தி செய்யும் குரு பகவான் இந்த சர்ப்ப தோஷத்தையும் நிவர்த்தி செய்கிறார்.. மற்றொன்று ரிஷப ராசியில் ராகு பகவான் நீச நிலையை பெற்று விடுவார்.
மிக பலம் குறைந்த நிலை. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற அமைப்பில் ராகு பகவான் கெட்டுப்போய் குருபகவானின் பொன்னொளி பார்வையால் தனது விஷத்தை நீக்கி 
நல்லவராக சுபராக மாறுகிறார்.. அதுமட்டுமல்லாமல் ராகு பகவான் இருக்கக்கூடிய வீடானது  அசுர குருவான சுக்கிர பகவானின் வீடு..
அவரை தேவ குரு பார்ப்பது என்பது அதிக சுபத்துவம்ஆகும்..

பேசி பிழைக்கும்  மேசராசி வக்கீல்கள், பேச்சாளர்கள்,வர்ணனையாளர்கள், டிவியில் வேலை செய்பவர்கள் போன்ற வாயை மூலதனமாக கொண்டவர்களுக்கு 2021 பொற்காலம் ஆகும். ஆனால் எட்டாமிடமான விருச்சிகத்தில் உச்சம் பெரும் கேதுபகவான் இதற்கு நேர்மாறாக அவமானம் ,அசிங்கம், கேவலம் போன்ற பலனைத் தந்து அல்லாட வைப்பார்.. ஆனாலும் கேது நின்ற வீட்டின் அதிபதி செவ்வாய் என்பதால் ராசிநாதனின் வீட்டில் இருக்கும் கேது பகவான் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்..
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி இரண்டு நெய் விளக்கு போட்டு வருவது எட்டில் இருக்கும் கேது பகவானுக்கு பரிகாரமாகும். செவ்வாய்க் கிழமை அன்று 3__ 4.30 மணிக்கு ராகுகாலம் வரும்.. அந்த நேரத்தில் புற்று கோயிலுக்கு சென்று பால் அபிஷேகம், அர்ச்சனை செய்து கொள்ள ,2 நெய் விளக்கு போட்டு வர பரிகாரமாகும். இதை செவ்வாய்கிழமை ஏன் செய்யணும் அப்படின்னா?? நீங்கள் பிறந்ததோ மேஷ ராசி ...கேது பகவான் நிற்பதோ செவ்வாயின் வீட்டில்.. 

அடுத்து சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 2020 ஜனவரி 24 முதல் 
மகர ராசியில் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். இவர் தனித்து பத்தாமிடத்தில் ஆட்சி பலம் பெறும்போது வேலையை கெடுப்பார்.. வேலையில் பிரஷர். வேலைப்பளு. அலைச்சல் ,திருச்சல்களை இதுவரை சனிபகவான் தந்திருந்தாலும் கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதிக்கு பிறகு ,சரியான ஆங்கிலம் 20 .11. 2020-க்கு பிறகு வேலையில் இருந்த தொல்லைகள் அகலும் .விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.. ஏனென்றால் குரு பகவான் சனியை புனிதப்படுத்தி சனியை நல்லவராக மாற்றுகிறார். அதுமட்டுமல்ல பத்தாமிடம் கேந்திர ஸ்தானமாக வரும். பத்தாமிடத்தில் பாவிகள் இருக்கலாம். மகர ராசி சர ராசியாக வரும். எனவே இங்கே  இருக்கும் சனி பகவான் மிக நல்ல பலன்களையே தருவார் என்பது உறுதி. பாவ கிரகங்கள் 3 ,6, 10, 11 போன்ற உபஜெய ஸ்தானங்களில் இருக்கும்போது ,சுப  கிரகங்கள் திரிகோணங்களில் இருந்தால் என்ன மாதிரியான நல்ல பலன்களை தருவார்களோ அந்த மாதிரியான நல்ல பலன்களை உபஜெய ஸ்தானங்களில் இருக்கக்கூடிய பாவ கிரகங்கள் நிச்சயம் தருவார்கள்..அதுமட்டுமல்லாமல் சனி பகவான் 11-ஆம் இடத்திற்கு ஆதிபத்தியம் பெற்று பத்தாம் இடத்தில் இருப்பது ஒரு உப ஜெய ஸ்தானத்துக்கு அதிபதி இன்னொரு உபஜெய ஸ்தானத்தில் இருப்பது யோகம் என்ற அளவில் சனியால் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே இருக்கும். எனவே இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி  இந்த மூன்று பெயர்ச்சிகளும் உங்கள் ராசிக்கு சாதகமாக இருப்பதால் வரக்கூடிய 2021 மிகச்சிறந்த நல்ல ஆண்டாக முன்னேற்றமான ஆண்டாக அதிர்ஷ்டமான ஆண்டாக வெற்றி வாய்ப்புள்ள ஆண்டாக இருக்கப் போகின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை



.

No comments:

Post a Comment