Sunday, 20 September 2020

திதி சூன்யம்

திதி சூன்யம்

பஞ்சாங்கம்  ..பஞ்ச என்றால் ஐந்து அங்கம் என்றால் பிரிவு

ஐந்து அங்கங்களால் பஞ்சாங்கம் இயங்குகிறது.  அவை

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம்
இவையே பஞ்சாங்கத்தின் 5 அங்கங்கள்.

திதிகள்

பூர்வ பக்ஷ திதிகள்  15 வளர்பிறை திதிகள்
அமர பக்ஷ திதிகள்  15 தேய்பி்றை திதிகள்

சூரியனும் சந்திரனும  கூடி அமாவாசை ஏற்படுத்திய பிறகு 
பிரதமை, துவிதியை, திருதியை ....அமாவாசை வரை 15 திதிகள் வளர்பிறை அல்லது பூர்வ பக்ஷ திதிகள்
சூரீயனும் சந்திரனும்180 பாகையில் அமைந்தால் அது பெளர்ணமி.  
பெளர்ணமி முடிந்த பிறகு திரும்ப பிரதமை திதியில் ஆரப்பித்து ஆமாவாசை திதியில்
முடியும் 15 நாட்களும் அமர பக்ஷ திதிகளாகும்

சூரியனைவிட்டு சந்திரன்் பிரிந்து செல்லும் அல்லது நெருங்கி வரும்.  ஒவ்வொரு 12 பாகைகளின் சஞ்சாரக் காலமும் (ஏறக்குறைய
1 நாள்) ஒரு திதி எனப்படும்.  இவ்விதம் ஏற்படும் 15+15=30திதிகளின் கால அளவு ஏறக்குறைய ஒரு மாதம் ஆகும் (30x12=360)
ஒரமாத காலமாகும்.

ஒவ்வொரு திதியிலும் ஒரு குறிப்பிட்ட
ராசி இ்ல்லம் அல்லது ராசி இல்லங்கள்
திதி சூன்யம் பெறுகின்றன.  இதனால்
இந்த ராசி இல்லங்களின் ஆட்சி, அதிபதி
கிரகங்கள் திதி சூன்ய தோஷத்தை பெறுகிறது

ஒருவருடைய ஜாதகத்தில் ஜனன திதியின்
படி , ஒருகுறிப்பிட்ட கிரகம் திதி சூன்யம்
பெற்றுவிட்டால் அக்கிரகம் என்னதான்
சுப ஆதிபத்தியமுள்ள கிரகமாயினும் 
அதனுடைய தசா புக்தி அந்தர காலங்களில்
அது சூன்யபலனைத் தான் தரும்.என்பது விதி.

அதாவது அந்த கிரகம் லக்ன அதி ஆனாலும்
பஞ்சமாதி, பாக்யாதிபதி ஆயினும் அல்லத
வேறு வித யோக காரகனாய் இருந்தாலும்
அந்த கிரகம் எந்த பலனையும் அளிக்காது என்பது விதி.

அமாவாசை, பெளர்ணமி திதியானால்
திதி சூன்யம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

திதி பெயர்      திதிசூன்யம்       சூன்யமடையும்
                           அடையும் ராசி       கிரகங்கள்

பிரதமை           மகரம் _துலாம்  சனி..சுக்ரன்
துவிதியை        தனுசு_மீனம்     குரு
திரிதியை         மகரம்_சிம்மம்   சனி, சூரியன்
சதுர்த்தி            கும்பம்_ரிஷபம் சனி., சுக்ரன்
பஞசமி              மிதுனம்_கன்னி புதன்
சஷ்டி                  மேஷம்_சிம்மம்   செ, சூரி

சப்தமி                தனுசு_கடகம்      குரு, சந்தி
அஷ்டமி             மிதுனம்_கன்னி  புதன்
நவமி                  சிம்மம்_விருச்    சூரி , செவ்
தசமி                   சிம்மம்_விருச்    சூரி, செவ்
ஏகாதசி              தனுசு_மீனம்      குரு
துவாதசி            மகரம்_துலாம்    சனி, சுக்ரன்
திரயோதசி        ரிஷபம்_சிம்மம் சுக் சூரி
சதுர்தசி              மிது _கன்னி      புதன்
                              தனுசு_மீனம்      குரு

ஒரு ஜாதகர் நவமி திதி ஜனனம் என்றால்
சிம்ம, விருச் ராசிகள் திதி சூன்யம் அடைகிறது.
ஆகவே இவற்றின் ஆட்சி அதிபதி கிரகங்களான சூரியனும் செவ்வாயும்
திதி சூன்யம் அடைகின்றன.

ஆகவே சூரி செவ் இரண்டும் தீய பலன்கள் தர அதிகாரம் பெற்றுள்ளன.  

உதாரணமாக கடக லக்னத்தில் பிறந்தவர்க்கு
செ தசா செ புக்தி நடைபெறுமானால்
கடக லக்னத்திற்கு செ யோககாரகன் என்றாலும் கெடு பலன்களே தரும் என்பது விதி.

எப்படிப்படட தனவந்தராயினும் அந்த ஜாதகருடைய செல்வ வளம் குறைந்து
தொழில் வியாபாரம் உத்தியோகம்
போன்றவற்றில் தீய பலன்கள் ஏற்பட்டு
கடனாளியாக ஆக்கக் கூடம்.

பரிகாரம்

1. திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் லக்னத்துக்கு 6,8,12ல் இருந்தால் திதி
சூன்யம் பெற்ற கிரகங்கள் தமது தசாபுக்திகளில் சுபப்பலன்களே தருவார்

2. திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் மேஷம்
சிம்மம், விருச். கும்பம், ஆகி பாப இல்லங்களில்
இடம் பெற்று நின்றால் அந்த கிரகங்கள்
நறபலனே தரும்.

3. திதி சூன்யம் அடைந்த கிரகங்கள்
பாவ கிரகங்களான சூரி,செ, சனி, ராகு
கேது உடன் சேர்ந்து இருந்தால் திதிசூன்ய
தோஷப் பரிகாரம் ஏற்படும்

4. திதி சூன்யம் பெற்ற கிரகங்கள பகை நீசம் ஸ்தானங்களில் இடம் பெற்றிருந்தாலும்
திதி சூன்ய தோஷத்துக்கு பரிகாரம் ஏற்படுகிறது.

5. திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ரம்
அஸ்தமனம் பெற்றாலும் திதிசூன்ய தோஷத்திற்கு பரிகாரம் ஆகும்

திதி சூனியம் அடைந்த கிரகங்கள்
சுப ராசியில் இருந்தாலும் , சுபகிரகங்களுடன்
சேர்ந்திருந்தாலும் அந்த ஸ்தானத்துக்குரிய
நற்பலன்கள் குறைந்தே காணும்.

பரிகாரம்
திதி சூன்யம் பெற்ற கிரகம் வக்ரம், அஸ்தமனம்,பகை, நீசம் , பாவ கிரக சேர்க்கை
லக்னத்துக்கு 6,8,12ல் இருந்தால், திதி சூன்ய கிரகம் மேஷ, சிம்ம, விருச், கும்ப ராசியில் இருத்தல்  பரிகார நிலைகள் (மேற்கூறியதன் சுருக்கம்)

No comments:

Post a Comment